Friday 22 September 2017

இன்று கமல்ஹாசனை சந்திக்கிறார் டில்லி முதல்வர்

சென்னை,
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி கிடக்கும் பரபரப்பு சூழலில் திடீரென கமல்ஹாசனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னையில் சந்திக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் சந்திப்பாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார். குறிப்பாக அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார்.

இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இன்று தமிழகம் வரும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment