Friday 8 September 2017

'ஏஎம்என்' விருது பெறுகிறார் சுங்கை சிப்புட் இளங்கோ

மாமன்னர் சுல்தான் வி பிறந்தநாளை முன்னிட்டு சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து 'ஏஎம்என்' (Ahli Mangku Negara- AMN) எனும் விருது பெறவுள்ளார்.

தொகுதி மஇகா தலைவர் மட்டுமல்லாது பல்வேறு பொது இயக்கங்களிலும் இணைந்து சமூக நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வருகின்றார்.

ஆலயம், பள்ளிக்கூடம் போன்றவற்றுக்கு தன்னால் ஆன சேவைகளை வழங்கி வருவதோடும இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும்  இவர் துரிதமாக தீர்வு கண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment