Friday, 22 September 2017

ஜிஎம் கிள்ளானில் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு, கலைநிகழ்ச்சி


இன்று செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை, 4 நாட்களுக்குத் தொடர்ந்து ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City) வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும், அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா, தீபாவளி கொண்டாட்டம் 2017 நிகழ்ச்சியில் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் சிறப்பு நேரடி வெளி ஒலிபரப்பு,  கலைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

நேரடி வெளி ஒலிபரப்பின்போது சுவாரஸ்யமான பல விளையாட்டுப் போட்டிகளை ராகாவின் அறிவிப்பாளர்கள் ஏற்று நடத்தவுள்ளனர்.
வியாழக்கிழமை 21ஆம் தேதி, 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மணி 11 தொடக்கம் 4 மணி வரை அறிவிப்பாளர் சுரேஷ், அகிலா இந்தச் சிறப்பு நேரடி வெளி ஒலிபரப்பைத் தொகுத்து வழங்குவார்கள்.

மறுநாள் 22ஆம் தேதி காலை மணி 11 தொடக்கம் மதியம் 2 மணி வரை சிறப்பு நேரடி வெளி ஒலிபரப்பை 'கலக்கல் காலை' அறிவிப்பாளர் ஆனந்தா, உதயா தொகுத்து வழங்குவார்கள்.

அதுமட்டுமின்றி, “டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாடுவோம்” கலைநிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை 24ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ராகா அறிவிப்பாளர்களின் இடைவிடாத ஆடல், பாடல் என பல அற்புதமான அங்கங்கள் இந்த நிகழ்ச்சியில் வலம் வரவிருக்கின்றன.

ஆகவே, அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா, தீபாவளி கொண்டாட்டம் 2017இல் பொதுமக்கள் திரளாக  கலந்து கொள்ள வேண்டும் என ஆஸ்ட்ரோ கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment