Tuesday, 19 September 2017

நாடு தழுவிய நிலையில் 'எம்ஜிஆர் நூற்றாண்டு விழா' - வி.எம்.கோபி

மக்கள் திலகம் எம்ஜிஆரின்  நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பொருட்டு மலேசிய எம்ஜிஆர் பொதுநல மன்றம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தவிருக்கிறது என அதன் தேசியத் தலைவர் வி.எம்.கோபி தெரிவித்தார்.

16.9.2017 தொடங்கி 31.1.2018 வரை  இந்த நிகழ்வுகள் நடத்தப்படும் எனவும் இதில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு, கலந்துரையாடல், பட்டிமன்றம்,மக்கள் நலத் திட்டங்கள், மாணவர்களுக்கான நிதியுதவி, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், கலை படைப்புகள், சத்துணவு திட்டம், திரைப்படங்கள் என பல்வேறு திட்டங்கள் நாடு தழுவிய நிலையில் மேற்கொள்ளப்படவுள்ளன  என்றார் அவர்.
2008ஆம் ஆண்டு முதல் பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் எம்ஜிஆர் பொதுநல மன்றம் முன்னெடுக்கும்  'எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்' வெற்றி பெற்றிட மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் ஜோகூர் மாநில எம்ஜிஆர் பொதுநல மன்றத்தின் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
அதே வேளையில் கடந்த ஆறு ஆண்டுகளாக மன்றத்தை இங்கு சிறப்பாக வழி நடத்திவரும் ஜோகூர் மாநிலத் தலைவர் பி.செல்வம் மீண்டும் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என மன்றத்தின் தலைமைச் செயலாளர் எஸ்.ஏ.மின்மினி குறிப்பிட்டார்.

மாநிலத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.செல்வத்திற்கு வி.எம்.கோபி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment