Sunday 17 September 2017

'வீடெல்லாம் பட்டதாரிகள்' அதுவே இலக்கு - டத்தோ டாக்டர் சைட் ஹூசேன்

சுகுணா முனியாண்டி

நிபோங் திபால்-
ஓர் இனத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் அதன் பொருளாதரத்தில் மட்டும் ஆட்கொண்டு விடாது என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஓர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என அம்னோ பாகான் தொகுதித் தலைவர் டத்தோ டாக்டர் சைட் ஹூசேன் வலியுறுத்தினார்.

மலேசிய கல்வி சமூக நல முன்னேற்றச் சங்கம் ஏற்பாட்டில் 'மனமே மாறி விடு' எனும் கருப்பொருளில் பெற்றோர் - மாணவர் கருத்தரங்கு   ஆறுமுக பிள்ளை தொழில் நுட்பக் கல்லூரியில் நடைப்பெற்றது.அந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராகக் கலந்துக் கொண்டு அவர் சிறப்புரையாற்றினார் .
இந்நாட்டில் அதிக பட்டதாரிகள் , கல்விமான்கள் உருவாக்கம் நாட்டிற்கு பெரியதொரு வரலாற்றினை பதிவு செய்து விட்டதாக கூறிய அவர், தற்போது வீடேல்லாம் பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார். அதற்கான பயண இலக்கை நாம் தொடர்ந்தாக வேண்டும்.
ஒவ்வொரு  சமுதாயத்தையும் பெருமைப்படுத்தும் பிரதான நிலையை உருவாக்ககூடிய 'கல்வி' எனும் மந்திரத்தை மாணவர்கள் சிந்தனையில் பெற்றோர் ஆழமாக பதிய செய்ய  வேண்டும். கல்வி மட்டுமே ஒரு சிறந்த சமுதாயத்தை சிறந்த இலக்கை நோக்கி பயணிக்கச்  செய்யும் என்று தமது சிறப்புரையின்போது தெரிவித்தார் .
இந்நிகழ்வில் மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் துணைத்தலைவர் டத்தோ க.புலவேந்திரன் , மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பரமகுரு பாலன் , டத்தோ கேனால் நவநீதன், பிரமுகர்கள் , அரசு சாரா இயக்கத் தலைவர்கள் , சங்க ஆலோசகர் சுந்தரராஜு, பெற்றோர்கள்,  மாணவர்கள் என திரளானோர் கலந்துக் கொண்டனர் .
வழக்கறிஞரும் பிரபல பேச்சாளருமான சி.பாண்டிதுறை வழிநடத்திய இக்கருத்தரங்கில் சிறப்பு பிரமுகர்கள் மாலை, பொன்னாடை அணிவித்து நினைவு சின்னம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்

No comments:

Post a Comment