Tuesday 19 September 2017

செருப்பு, அரைக்காற்சட்டை அணிந்தவனின் கைவரிசை; வங்கியில் வெ. 6 லட்சம் கொள்ளை

பெட்டாலிங் ஜெயா-
வெறும் செருப்பையும் அரைக்காற்சட்டையும்  அணிந்த ஒருவன் வெறும் 20 நிமிடங்களில் 600,000 வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இச்சம்பவம் இங்கு டாமன்சாரா ஹைட்சில் உள்ள வங்கி ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

தி சன் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு தீயணைக்கு கருவியுடன் வந்திருந்த ஆடவன் 600,000 லட்சம் வெள்ளியை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்தை 2 மணிநேரத்திற்கு பின்னரே வங்கி ஊழியர்கள் உணர்ந்துள்ளனர்.

தன்னை ஒரு தீயணைப்புக் கருவி பழுதுபார்க்கும் பொறியியலாளராக காட்டிக் கொண்ட அவ்வாடவன், கடந்த 8ஆம் தேதி நண்பகல் 12.30 மணியளவில் வங்கிக்குள் புகுந்து கொள்ளையிட்டதோடு எவ்வித பதட்டமும் இன்றி சர்வ சாதாரணமாக வெளியேறியுள்ளான்.

இச்சம்பவத்தின்போது  தன்னை பொறியியலாளராக காட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்த அவ்வாடவன், தனது அடையாள அட்டையை காண்பிக்கா தவறியதால் வேலையை தொடர வங்கி மேலாளர் அனுமதிக்கவில்லை. ஆயினும் வங்கி மேலாளர் உணவருந்த செல்லும் வரையிலும் அவன் வேலையை தொடரவில்லை.

30 வயது மதிக்கத்தக்க அவ்வாடவன் வங்கி முகப்புக்கு பின்னால் உள்ள கதவு வரை  செல்லும்போது சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை.

வங்கி ஊழியர்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது தீயணைப்பு கருவி பழுதுபார்ப்பதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்தபோது அவ்வாடவன், வங்கி தலைமை காசாளர்  இரும்பு பெட்டகத்தின் கதவை திறந்து உள்ளே சென்றபோது அவ்வாடவன் தானியங்கி கதவில் காந்தத்தை வைத்துள்ளார்.

சிறிது நேரத்தில் வங்கி காசாளர் இரும்பு பெட்டகத்திலிருந்து வெளியேறியதும் அதனுள் நுழைந்து தான் கொண்டு வந்த பைக்குள் பணத்தை அள்ளி போட்டு அவ்வாடவன் எவ்வித பதட்டமும் இன்றி சகஜமாக வெளியேறியுள்ளான்.

பிற்பகல் 2.30 மணியளவில் வங்கி மேலாளர் திரும்ப வந்த உடனே, சம்பந்தப்பட்ட ஆடவனை பற்றி விசாரித்துள்ளார்.  சந்தேகமடைந்த வங்கி மேலாளர் வங்கி இரும்பு பெட்டகத்தை திறந்து பார்த்தபோது 600,000 வெள்ளி கொள்ளையிடப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்ட வேளையில் வங்கி மேலாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு இரு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இச்சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை என தெரியவந்ததும் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதே போல் ஞாயிற்றுக்கிழமை அந்த வங்கி தலைமை காசாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரும் விடுவிக்கப்பட்டார்.
அவ்விருவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணையாளர் கூறுகையில், சந்தேகத்திற்குரிய நபர் பிற நிறுவனங்களில்  தன்னை குளிரூட்டி பழுது பார்க்கும் பொறியியலாளர் என  காட்டிக் கொள்ள முயற்சித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதை சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment