Thursday, 22 June 2017

'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை


பினாங்கு-
இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும்இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம்அவை இயங்கும் இடம்இயங்கும் காலம் அனைத்தையும் ஒன்றிணைந்ததேஇயற்கைஎன்கிறோம்.

நாம் வாழும் பூமி உருண்டை வடிவானது என்றும் துருவங்கள் இரண்டும் சிறிது தட்டையாக அமைந்துள்ளது என பாடசாலைகளில் படித்தது எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்பூமியின் மேற்பரப்பின் சுமார் 71 சதவீதம் நீரினால் ஆனதுமிகுதியான உள்ள இடத்திலேயே மலைகளும் காடுகளும் நாம் வாழும் நகரமும் இருப்பதுடன் மனிதர்களும் மிருகங்களும் மற்றைய உயிரினங்களும் வாழ்கின்றன.

ஒவ்வொரு நாட்டின் தட்ப வெட்ப நிலைகேற்ப அங்கு காணப்படும் தாவரங்களும் வித்தியாசப்படும்மிருகங்களும் பறவைகளும் கூட வித்தியாசமாக இருக்கும்.

பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலமானதுஇயற்கையாகவே பல மேடு பள்ளங்களையும் மலைகளையும்பள்ளதாக்குகளையும்அடர்ந்த மலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இயற்கையின் இன்பத்தை வர்ணிக்க அழகுப்பூர்வமான வார்த்தைகளே கிடையாது என சொல்லலாம். பனி படர்ந்த நீல மலைகள்வண்ண வண்ண பூக்கள் தங்கள் பாகைகளில் பாடித்திரியும் பல்வேறுபட்ட பறவைகள், தனிச்சையாக சுற்றித்திரியும் விலங்குகள், சல சலக்கும் ஓடைகள் ஆர்ப்பரிக்கும் அருவிகள், இவைகளை தன்னுடன் அரவணைத்து வனப்புடன் திகழும் வனங்கள்நீந்தும் சிறு மீன்கள் முதல் பெரும் திமிங்கலம் வரை உலவும் அலைகடல், கண் சிமிட்டி அழைக்கும் விண்மீன்கள் தங்க ஓடமாய் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் மனித மனங்களுக்கு இன்பத்தை மட்டுமில்லாமல் மனம் கசியும் நேரங்களில் அமைதி தந்து மன ஆறுதலையும் தந்து வருகின்றது.

ஆனால் இந்த நவீன யுகத்தில் மலைகளை சரிப்பதுகாடு மேடுகளையெல்லாம் அழிப்பது, கண்டதை உண்டு கழிவுகளை கண்ட இடங்களிலெல்லாம் குவித்து வருவது மட்டுமின்றி இன்று சுற்று சுழல் மாசினை ஒழிக்க முடியாமல் கழிவுப் பொருளைக் கரை சேர்க்க வழி இன்றி உலக நாடுகள் எல்லாம் தட்டு தடுமாறிக் கொண்டிருக்கின்றன. தீராத நோய்கள் நம்மில் குடி கொண்டு இருக்கின்றனவளரும் இளம்தளிர்கள் வகை வகையான நோய்களுக்கு ஆளாகின்றனஆக மொத்தத்தில் இயற்கையைப் பழி தீர்த்துக் கொண்டு விட்டோம், இன்னலுக்கு ஆட்பட்டுக் கிடக்கின்றோம் .

இவற்றிலிருந்து அப்பாற்பட்டு உலகம் வியக்கும் வகையில் பினாங்கு தீவு அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை. உலக நாடுகள் உட்பட மலேசிய நாட்டிலுள்ள பிற மாநிலங்கள்  இயற்கையை பாதுகாத்து வந்தாலும்  பினாங்கு மாநிலம் மட்டும்தான் இயற்கை வளங்களை குழந்தையாக வளர்த்து வருகின்றது என்று தயக்கமின்றி உரைத்திடலாம்.

பினாங்கு தீவின் தெலோக் பாஹாங் காடு, பினாங்கு பறவை பூங்கா, பினாங்கு பொட்டனிக்கல் கார்டன், கொடிமலை, பத்து ஃபிரிங்கி, புலாவ் ஜேர்ஜா, வண்ணத்துப் பூச்சி பூங்கா, கடல் பகுதி பல இயற்கை வளங்கள் இன்னும் எண்ணிக்கையில் அடங்கா வண்ணம்  இயற்கை வளங்களும் தளங்களும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பினாங்கு  மாநிலத்தில் உண்ணும் உணவுப் பொட்டலங்கள் உட்பட பேரங்காடியில் வாங்கப்படும் பொருட்களுக்கு நெகிழி பைகள் வழங்குவதில்லை, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் மேம்பாடுகள்தொழிசாலைகள் போன்றவற்றுக்கு முடக்கம் தெரிவிக்கப்பட்டும் வருகின்றது.

எங்கும் கண்டிராத அழகு, அதன் எழில், உலக மக்களை கவர்ந்துள்ளது, அதனால்தான் உலக தரத்தில் பினாங்கு தீவை 'முத்து தீவு' என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.

இயற்கையை நேசிக்க வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பினாங்கு மாநில பசுமை அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு பினாங்கு தீவை தூய்மை, வளமை, செழிப்பு என்ற அடிப்படையில் தனது திட்டங்களை இந்த பசுமை அமைப்பு செம்மையாக செயல்படுத்தி வருகின்றதுஅவ்வபோது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,கருத்தரங்குகள் என மக்களிடையே இயற்கை பற்றிய விழிப்புணர்வை தூண்டுவதோடு, வாழ்க்கையின் ஓர் அங்குலமாக வலம் வந்திட தனியொரு மனிதனையும் தூண்டப்பட்டுள்ளனர்.
ஆனால் இன்று உலக நாடுகளின் பலவற்றில் மனிதன் இயற்கையை மறந்துவிட்டான். மனிதன் இயற்கையை மறந்து போனதால்தான் அவன் வாழ வழியின்றி அழிந்து வருகின்றான். நாம் இயற்கையை நேசிக்க மறந்து போனதால்தான் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. மேம்பாடு என்ற போர்வைக்குள் மலை மேடுகள், அடர்ந்த காடுகள் தரைமட்ட மாக்கப்படுகின்றன. அதனால் நிலச்சரிவுநிலநடுக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

கடல் குப்பை சேருமிடமாகின்றன. அதனால் நீர்வாழ் அரிய உயிரினங்களும் அழிந்து வருகின்றன ,நாம் உண்ணும் கடல் உணவுகள் கூட விஷமாகின்றன, காற்று தூய்மைக்கேடு அடைகின்றது என இப்படி தூய்மை கேட்டை அடுக்கி கொண்டே போகலாம்.

ஆனால் இயற்கையோ எங்களை அழித்து விடாதீர்கள் என்று கூறுவது போல் இயற்கை அழிப்பால் ஏற்படும் விளைவுகள் யாவை என்பதை நினைவூட்டும் வகையில் அவ்வபோது நிலநடுக்கம்கனத்த மழைநிலைற்ற சீதோஷ்ண  நிலை, புயல் காற்று என வந்து மிரட்டி கொண்டே இருக்கின்றன.

நாம் அனைவரும் நம்மை போன்ற ஒவ்வொருவரையும் நாட்டை வளமாக்க அழைத்துச் செல்வோம். காடுகளை அழிக்காமல் மலைகளை தகர்க்காமல், மண் வளத்தை சுரண்டாமல் செயற்கை கருவிகளால் கரியமிலவாயுவை பெருக்காமல், புவி வெப்பமடைதலைத் தடுக்கும் வழி முறைகளைக் கடைபிடித்து, இருக்கின்ற நீர் நிலைகளைப் பாதுகாத்து நிலங்களை வளப்படுத்துவோம்மறந்து போகின்றமறைக்கப்படுகின்ற வேளாண் தொழிலை புதுமுறைக் கல்விதுறைகளால் மேம்படுத்தி புவிதனை காப்போம். புதிய இயற்கைச் சூழலை இன்றே உருவாக்குவோம்.


இயற்கையைக் காப்போம்,   எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்' எதிரெதாக் காக்கும் அறிவினாற்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் என்ற வேத மந்திரத்தை விளக்கமுறச் செய்வோம்; வருங்காலச் சமுதாயத்தை வளமுற காக்க இயற்கையைப் போற்றி வாழ்வோம்; இனியதோர் உலகைப் படைத்துக் காட்டுவோம்.

No comments:

Post a Comment