Friday 8 September 2017

மக்களின் தேர்வே தேமு வேட்பாளர்கள் - பிரதமர் நஜிப்

கோலாலம்பூர்-
மக்களின் தேர்வாக இருப்பவர்களே தேமு வேட்பாளராக களமிறக்கப்படுவார்களே தவிர தன்னைத் தானே வேட்பாளராக பிரச்சாரம் செய்பவர்கள் அல்லர் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

போட்டியிடும் தொகுதிகளையும் அதன் வேட்பாளர்களையும் வேட்பாளர்களையும் தேசிய முன்னணி தலைமைத்துவமே முடிவு செய்யுமே தவிர இக்கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கட்சிகள் அல்ல.

தேமு கூட்டணியில் உள்ள இரு கட்சிகளிடையே நிலவி வந்த தொகுதி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தேசிய முன்னணியின் முடிவை இவ்விரு கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற தேமு உச்சமன்ற  கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தேமு தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.

தன்னை வேட்பாளராக பிரச்சாரம் மேற்கொள்வது முக்கியமல்ல. மாறாக அங்கு தேசிய முன்னணியை மக்கள் தேர்வாக ஏற்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளி என்னவென்பதே இங்கு முதல் கேள்வியாகும். ஆகவே மக்கள் விரும்புபவர்களையே வேட்பாளராக களமிறக்க தேமு எண்ணம் கொண்டுள்ளது.

தேசிய முன்னணியை வலுவான ஒரு கூட்டணியாக அடையாளப்படுத்துவதே இங்கு முக்கியமானதாகும். மாறாக எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் தலைவர் என்பதை தீர்மானிக்க முடியாத அளவுக்கு அறிக்கை விடுக்கும் எதிர்க்கட்சியை போன்று நாம் ஆகிவிடக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி நாங்களே வேட்பாளராக களமிறங்குவோம் என மஇகாவும் மைபிபிபி கட்சியும் அண்மைய காலமாக கருத்து மோதல்களை கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment