Tuesday 12 September 2017

மதிப்புமிக்க ஆலோசனை திட்டங்களுடன்தான் அமெரிக்கா வந்துள்ளேன் - பிரதமர் நஜிப்

வாஷிங்டன் -
பணம் கேட்பதற்காக தாம் அமெரிக்கா வரவில்லை. மாறாக மதிப்புமிக்க ஆலோசனை திட்டங்களுடன்தான் இங்கு வந்துள்ளோம் என மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

2050ஆம் ஆண்டுக்குள் உலகின் 20 முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்வதோடு வெற்றிகரமான வளர்ச்சியுடனும் உறுதிப்பாட்டுடனும் எழுச்சி பெற்று வரும் ஒரு நாட்டில் இருந்து இங்கு நாம் வந்திருக்கிறோம்.

ஆதலால் மலேசியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதை அமெரிக்காவுக்கு எடுத்து காட்டுவதற்காக தாம் இங்கு வருகை புரிந்ததாக டத்தோஶ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.

வாஷிங்டனில் உள்ள மலேசிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமெரிக்க வாழ் மலேசியர்களிடையே உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment