Saturday 16 September 2017

பக்தி பரவசத்தில் மூழ்கியது கந்தன் கல்லுமலை காளியம்மன் ஆலயம்

ரா.தங்கமணி
சிம்மோர்-
மிக பழைமை வாய்ந்த ஆலயமாக திகழும் கந்தன் கல்லுமலை ஸ்ரீ மகா காளியம்மன்  ஆலய வருடாந்திர தீமிதி திருவிழா பக்தி பரவசம் மேலோங்கி காணப்பட்டது.
தீமிதி உற்சவ விழாவாக கருதப்படும் இவ்வாலய திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசத்து சென்றனர்.
இவ்வாலயத்தின் சிறப்பு அம்சமாக தீமிதி திருவிழா கொண்டாடப்படுவதால் நாடு முழுவதியிருந்தும் சிங்கப்பூர்,மியன்மார்,வியட்னாம்,தாய்லாந்து பல நாடுகளிருந்து  சுற்றுப்பயணிகள் அதிகம் வருகை புரிவர்.

நேற்று பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியதோடு இன்று காலை முதல் பால் காவடி, மயில் காவடி, கரும்பு காவடி, தீச்சட்டி போன்றவற்றை ஏந்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த ஆலய திருவிழாவில் மலேசிய அபிராம் சமூகநல இயக்கம் 108 சீர் தட்டுகளை ஏந்தி வந்து அம்பாளுக்கு படைத்தனர்.
பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், மஹா மெகா எடார் நிறுவனத்தின் இயக்குனர் திருமதி மகேஸ்வரி, மஇகா கோத்தாராஜா தொகுதித் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.மணியம், மலேசிய அபிராம் சமூக நலன் இயக்கத் தலைவர் சண்முகம் கிருஷ்ணன், இயக்கத்தின் ஆலோசகர் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல், பூச்சோங் தொழிலதிபர் ரத்னம் சண்முகம், கந்தான் காவல் நிலைய தலைமை அதிகாரி திருமதி கங்கா,  உட்பட சமூகப் பொறுப்பாளர்களும் பக்தர்கள் திரளானோர் கலந்துக்கொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் ஆலய திருவிழா மிக சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய பக்தகோடிகளுக்கும் பக்தர்களின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருந்த கிந்தா மாவட்ட காவல் துறையினர்,கந்தான் காவல் துறையினர், சிம்மோர்,சுங்கை சிப்புட் ரேலா தொண்டூழியப் படையினர், ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையின் பொது நிர்வாகம், மலேசிய திவால் இலாகாவினர் ஆகியோருக்கு ஆலய ஒருங்கிணைப்பாளர் ஆர். ஸ்ரீதரன் நன்றி தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் கமுனிங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைமை குருக்கள் அம்மன் உபாசகர் சிவ ஸ்ரீ மனோகரன் குருக்கள் ஆலய திருவிழாவைச் சிறப்பாக வழி நடத்தினார்.
சுங்கை சிப்புட் ஜேஜே இசை குழு உரிமையாளர் யோகபாலன் ஜெயராமன், உங்கள் சாய்ஸ் நிறுவன உரிமையாளர் சேகரன் ஆகிய இருவரும்  திருவிழா நிகழ்வுகளை சிறப்பாக அறிவிப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment