Sunday 3 September 2017

'கேமரன் மலையில் வேண்டாம்; பாகோவில் போட்டியிடுங்கள்' கேவியசுக்கு சுப்ரா பதிலடி

ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்

ஈப்போ-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை விட பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்  போட்டியிடலாம் என  மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர்  எஸ்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ  ஜி.பழனிவேல் இத்தொகுதியில் போட்டியிடும்போது மஇகா தேசியத் தலைவராகவே இருந்தார். மஇகா பிரதிநிதியாகவே போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
கட்சி விவகாரத்தில் அவர் மஇகா உறுப்பியத்தை இழந்தாலும் இன்னமும் தேசிய முன்னணியின் பிரதிநிதியாகவே கேமரன் மலையில் சேவையாற்றி வருகிறார்.
இந்நிலையில் கேமரன் மலையில் நான் போட்டியிடப் போகிறேன் என டான்ஶ்ரீ கேவியஸ் கூறிவருகின்றார். இரண்டாண்டுகளாக இத்தொகுதியில் சேவையாற்றி வருவதால் இங்கு நானே போட்டியிடுவேன் அவர் கூறுகின்றார்.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், டான்ஶ்ரீ கேவியஸ் கேமரன் மலையில் போட்டியிடுவதை விட பாகோ (ஜோகூர்) நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம்.

ஏனெனில் பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஶ்ரீ மொகிதீன் யாசின் தற்போது எதிர்க்கட்சியில் உள்ளார். எதிர்க்கட்சி பிரதிநிதியாக உள்ள அவரது தொகுதியில் டான்ஶ்ரீ கேவியஸ் போட்டியிட்டு வெற்றி பெறட்டும், தேசிய முன்னணியின் கரத்தை வலுப்படுத்தலாம் என பேராக்  மஇகாவின் 71ஆவது பேராளர் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகையில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

கேமரன் மலையில் போட்டியிட தேமு வாய்ப்பளிக்காவிட்டால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என டான்ஶ்ரீ கேவியஸ் கூறியுள்ளது மிக ஆபத்தானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment