Saturday 9 September 2017

ஜிஎஸ்டி: மக்களின் அதிருப்தியே புகார்கள் குறைந்துள்ளன- சிவகுமார்

ரா.தங்கமணி

ஈப்போ-
கடந்த ஈராண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான புகார்கள் குறைந்திருப்பதால் அதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என அர்த்தமாகாது. மாறாக புகார் அளிப்பதன் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் குறிப்பிட்டார்.

நாட்டின் நிதிவளம் சீராக இருக்க வேண்டும் எனும் நோக்கில் அமல்படுத்தப்பட்டதே ஜிஎஸ்டி வரியாகும். மிகப் பெரிய அளவிலான நிதி மோசடிகளால் எரிபொருள் உட்பட பலவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாயம் இழக்கப்பட்ட நிலையில் ஒரு கட்டாயத்தின் சூழலில் இந்த வரி அமலாக்கம் செய்யப்பட்டது.

ஆனால் அரசாங்கம் எளிய முறையை அணுகாமல் மக்களிடமிருந்து ஜிஎஸ்டி வரி பெறுவதை தொடங்கி விட்டது. இதில் மக்கள்  மனநிறைவு கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
கடந்த மக்களவை கூட்டத்தின்போது இது தொடர்பில் கேள்வி எழுப்பட்ட வேளையில், மக்கள் ஜிஎஸ்டி வரி ஏற்றுக் கொள்ள தொடங்கியுள்ளனர். மக்கள் இதனை புரிந்து கொண்டுள்ளனர் எனவும் அரச மலேசிய சுங்கத் துறையிடம் இது தொடர்பில் எவ்வித சர்ச்சையும் இல்லை என பதிலளிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி மீதான மக்கள் புகாரை அரச மலேசிய சுங்கத்துறை மிக குறைவாக பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். கடந்த 2015ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டு மிக குறைவாக புகார்களே பெறப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு 6,830 புகார்கள் பெறப்பட்ட வேளையில் 2016ஆம் ஆண்டு 1,235 புகார்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாண்டு ஜூலை மாதம் வரையிலும் 185 புகார்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆயினும், ஜிஎஸ்டி தொடர்பில் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்படபோவதில்லை என உணர்ந்துள்ளதாலேயே மக்கள் புகார் அளிக்கவில்லை.

ஏழை முதல் பணக்காரன் வரையிலும் ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மக்களிடமிருந்து கட்டாயப்படுத்தி வரி பெறப்படுகிறது. இரக்கமற்ற ஆட்சியை புரியும் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து போராட விருப்பமில்லாததாலேயே மக்களின் புகார்கள் குறைந்துள்ளன.

 மக்களிடையே மிகப் பெரிய சுமைய ஏற்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி மீது மக்கள் வெறுப்புணர்வே கொண்டுள்ளனர் என பேராக் மாநில ஜசெக துணைத் தலைவரான சிவகுமார் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment