Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Saturday, 7 December 2019

கால்நடை மருத்துர் பாலியல் வல்லுறவு; குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது போலீஸ்

ஹைதராபாத்-
கூட்டு பாலியல் வல்லுறவுக்கு பின்னர் எரித்து படுகொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரை தாக்கி தப்பியோட முயற்சித்தபோது போலீசார் மேற்கொண்ட  அதிரடி நடவடிக்கையில் இந்நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெலுங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தனது பணியை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 27 வயதான பிரியங்கா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும்சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று நடந்தவற்றை கூறும்படி போலீசார் கேட்டபோது போலீசார் அவர்கள் தாக்க முற்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மெஹபூப்  நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி எனும் கிராமத்தில் நிகழ்ந்தது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

Tuesday, 6 August 2019

காஷ்மீரின் 35A, 370 சிறப்பு உரிமைகள் ரத்து

டெல்லி-
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப் பிர்வுகளான 35A, 370 ஆகியவற்றை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வ்ழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிவித்தார்.
ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுநாள் வரை இங்குள்ள அரசியல் தலைவர்கள், மக்களிடையே நிலவி வந்த குழப்பத்திற்கு பதில் கிடைத்துள்ளது.

Tuesday, 2 July 2019

'கொலை' வெறியில் துரத்திய புலி; நூலிழையில் தப்பித்த ஆடவர்கள்

மைசூர்-
காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆடவர்களை 'கொலை' வெறியுடன் புலி ஒன்று துரத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூர்- கொடகு பகுதிகளுக்கு நடுவே உள்ள ‘நகராஹோல்’ தேசிய பூங்காவை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

புலிகளின் சரணாலயமாக கருதப்படும் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரு ஆடவர்கள் பயணிக்கின்றனர். அப்போது திடீரென காட்டுப் பகுதியிலிருந்து மின்னல் வேகத்தில் ஓடி வரும் புலி இவர்களை துரத்துகிறது.

மோட்டார் சைக்கிளோட்டி தடுமாற்றத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்தவே வேகமாக ஓடிவரும் புலி காட்டின் மறுமுனையில் நுழைகிறது. இந்த காட்சி  அனைத்தையும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருக்கும்  நபர் காணொளியாக பதிவு செய்கிறார்.

கொலை வெறியோடு துரத்தும் புலியின் தாக்கத்திலிருந்து தப்பிக்கு இரு ஆடவர்களின் திக் திக் வினாடிகள் கொண்ட இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Thursday, 20 June 2019

ஜூலை 31-இல் ஆஜராகுக- ஸாகீர் நாய்க்கிற்கு நீதிமன்றம் உத்தரவு

மும்பை-
சர்ச்சைகுரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் ஜூலை 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத நிதி கையாடல் தொடர்பில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் ஜாமீன் இல்லாத கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று நேற்று உத்தரவிட்டது.

Friday, 24 May 2019

பாஜக அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி

டெல்லி-

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் மீண்டும் பிரதமராக மோடியே பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

524 பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

இத்தேர்தலில் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிகையில் பாஜக 325 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தனி பெரும்பான்மையை கொண்டுள்ள பாஜக ஆட்சியமைக்கும் சூழலில் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 90 மற்ற கட்சிகள் 105 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

மோடியா? ராகுலா?- இந்தியாவின் புதிய பிரதமர் யார்?

டெல்லி-

அண்மையில் நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி முதல் (இந்திய நேரப்படி) நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான முடிவு இன்று அறிவிக்கப்படும் நிலையில் இந்தியாவை ஆளப் போகும் புதிய பிரதமர் யார்?என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மேலோங்கியுள்ளது.

இன்றைய தேர்தல் முடிவில் இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்பது பாஜகவின் நரேந்திர மோடியா? காங்கிரஸின் ராகுல் காந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, 19 April 2019

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர்

சென்னை-
தமிழகத்தில் இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று காலை ரஜினி, கமல், விஜய், அஜித் என பல திரைப்பிரபலங்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க சென்னை வளசரவாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்றபோது அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி அவருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இதேபோல், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி அவருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படவில்லை கூறப்படுகிறது.

தமிழக தேர்தல்; வாக்கை செலுத்திய திரை பிரபலங்கள்


சென்னை-
இன்று காலை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய 40 நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி முதல் தொடங்கியது.

ரஜினிகாந்த்
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கை செலுத்தினார். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தமது மனைவி ஷாலியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.

விஜய்
நீலாங்கரையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று  தனது வாக்கை பதிவு செய்தார்.

கமல்ஹாசன்
தேனாம்பட்டையில் உள்ள பள்ளியில் நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் வாக்களித்தார். இங்கு வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் காத்திருந்து தனது வாக்கை கமல்ஹாசன் செலுத்தினார்.

Friday, 5 April 2019

ரஜினியிடம் ஆதரவு கேட்ட கமல்

சென்னை-
நாடாளுமன்றத் தேர்தலுக்கு நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்டதாகவும், அதற்கு கண்டிப்பாகச் செய்கிறேன் என்று ரஜினி பதிலளித்துள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் ரஜினிகாந்த் தனக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும். மேலும் ரஜினிகாந்திடம் தான் ஆதரவு கேட்டதாகவும் அதற்கு கண்டிப்பாகச் செய்வதாக கூறினார் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக யாருக்கும் ஆதரவில்லை என்று ஏற்கெனவே ரஜினி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க்து.