Thursday 7 September 2017

மாமன்னர் பிறந்தநாள்: 'துன்' பட்டம் பெறுகிறார் சாமிவேலு

கோலாலம்பூர்-
வரும் 9ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள மாமன்னர் சுல்தான் முகமட் வி பிறந்தநாளை முன்னிட்டு பல தலைவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

அவ்வகையில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்புத் தூதருமான டத்தோஶ்ரீ உத்தாமா ச.சாமிவேலு 'துன்' விருது வழங்கி கெளரவிக்கபடவுள்ளார்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மஇகாவின் தேசியத் தலைவராகவும் பொதுப்பணி அமைச்சராகவும் இருந்து நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும்.

மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவரும்  நாட்டின் சுதந்திர பிரகடனத்தின் கையெழுத்திட்டவருமான துன்  வீ.தி.சம்பந்தனுக்கு பிறகு 'துன்' விருது பெறும் இந்தியத் தலைவராக டத்தோஶ்ரீ உத்தாமா சாமிவேலு திகழ்கிறார்.
அதோடு மஇகாவின் உதவித் தலைவரும் மேலவை சபாநாயகருமான டத்தோஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழுவின் முன்னாள் தலைவர் டத்தோ கோ.இராஜுவும்  'டான்ஶ்ரீ ' விருதை பெறுகின்றனர்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினரான செர்டாங் ரவிச்சந்திரனும் ஜோகூர் மஇகா தொடர்புக் குழுவின் துணைத் தலைவரான கண்ணனும் 'டத்தோ' விருதை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment