Saturday, 29 April 2017

'கேமரன் மலையில்' கேவியஸ் வீரம் + விவேகம் = வெற்றியை தருமா?

'கேமரன் மலையில்' கேவியஸ்
வீரம் + விவேகம் = வெற்றியை தருமா?






குளுகுளு பிரதேசம், பனி விழும் மலை தேசம்விவசாயிகளின் வற்றாத சோலை, தேயிலை உற்பத்திக்கு உகந்த மலை என்ற பல்வேறு அடைமொழிகளை கொண்ட கேமரன் மலையில் தற்போது சில்லென்ற காற்றுக்கு பதிலாக அரசியல் அனல் வீசுகின்றது.



நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கேமரன் மலையில் வேட்பாளராக களமிறங்குவேன் எனும் வேட்கையோடு களப்பணி ஆற்றி வருகிறார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ்.

2004ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தொகுதியாக அறியப்பட்ட கேமரன் மலை தொகுதியில் மஇகா வேட்பாளரே களமிறங்குகின்ற சூழலில் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதி மைபிபிபிக்கு ஒதுக்க வேண்டும். அதில் நானே வேட்பாளராக களமிறங்குவேன் என முழக்கமிட்டார் டான்ஸ்ரீ கேவியஸ்.

மஇகாவின் நிராகரிப்பும் மைபிபிபியின் அதிரடியும்
13ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார் மஇகாவின் அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல். ஆனால்  மஇகாவில் நிலவிய உட்கட்சி பூசலினால் கட்சி  பதவிகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நீக்கப்பட்டுள்ளதாக தற்போதைய மஇகா தலைமைத்துவம் அறிவித்தது.

இதன் விளைவாக மஇகாவின் தொகுதியாக கருதப்பட்ட கேமரன் மலை தொகுதி சுயேட்சை தொகுதியாக அடையாளம் காணப்பட்டது.

டான்ஶ்ரீ கேவியஸ் களம்
14ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே கணித்துக் கொண்டிருந்த டான்ஸ்ரீ கேவியஸ் தனது அடுத்த அரசியல் தளமாக கேமரன் மலையை தேர்ந்தெடுத்தார்
சுயேட்சை தொகுதி, மக்களுக்கு உரிய சேவையில்லை என்ற  காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் சேவையை அங்கு மேற்கொண்டு வந்தார்.

முதன்மை காரணம்
கேமரன் மலையில் டான்ஸ்ரீ கேவியஸ் களமிறங்குவதற்கு முதன்மை காரணம் பகாங் மாநிலமே ஆகும். இங்குள்ள கோலா லிப்பிஸ், பெந்தா தோட்டமே அவரது பூர்வீகம் ஆகும். பிறந்த மண்ணும் அங்குள்ள மக்களும் நமக்கு ஆதரவளிப்பர்  என்ற நம்பிக்கையின் அடிப்படையே கேமரன் மலையை அவர் தேர்ந்தெடுத்ததற்கு முதன்மை காரணம் ஆகும்.

மக்கள் சேவை
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட டான்ஸ்ரீ  கேவியஸ், இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளை களைந்து அனைத்து நிலை மக்களுக்குமான 'நம்பிக்கை நட்சத்திரமாக' அங்கு தன்னை உருமாற்றி கொண்டு வருகிறார்.

மஇகாவின்  அதிரடியிலும் அசராத நம்பிக்கை
கேமரன் மலை தொகுதியில் நாங்களே களமிறங்குவோம்; யாருக்கும் இத்தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற மஇகாவின் அதிரடி அறிவிப்புகளிலும் கிஞ்சிற்றும் மனம் தளராமல் தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இன்றும் கேமரன் மலையில் மக்கள் பணி ஆற்றி வருகிறார் கேவியஸ்.



வீரம், விவேகம், உருமாற்றம்
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மக்கள் சேவையின் வழி தனக்கான வட்டத்தை உருவாக்கிக் கொள்வதில் அவரது  வீரம் தென்படுகிறது.

தேசிய முன்னணியின் பங்காளி கட்சியாக இருந்தாலும் மஇகா செய்யாமல் விட்ட மக்கள் சேவைகளை தான் நிறைவேற்றி அங்கு தேசிய முன்னணிக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதில்  அங்கு அவரின் விவேகம் நிரம்பியுள்ளது

புதிய அணுகுமுறையில் மக்கள் சேவையை வழங்குவது மட்டுமின்றி தன்னையும் அங்கு பிரபலப்படுத்திக் கொள்வதில் உருமாற்ற யுக்தி வெளிப்படுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலில் டான்ஸ்ரீ கேவியஸ் தன்னை அங்கு நிலைநிறுத்திக் கொள்வதில் இவையனைத்தும் கை கொடுக்குமா? கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில்  அலங்கரிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(இன்று 29/4/2017இல் தனது பிறந்த நாளை கொண்டாடும் டான்ஶ்ரீ கேவியசுக்கு 'பாரதம்' இணைய ஊடகம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.)

பிகேஆர் உறவை துண்டித்தால் சிலாங்கூர் அரசு பதவிகளிலிருந்து விலகுக!

பிகேஆர் உறவை துண்டித்தால்

சிலாங்கூர் அரசு பதவிகளிலிருந்து விலகுக!




ஷா ஆலம் 
பிகேஆர் கட்சியுடனான உறவை துண்டித்துக் கொள்ள பாஸ் கட்சி முடிவெடுக்குமானால்  சிலாங்கூர் மாநில அரசில் வகித்து வரும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளை அது துறக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுசன் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே ஜசெக கட்சியுடனான உறவி துண்டித்துக் கொண்டுள்ள பாஸ் கட்சி  தற்போது பிகேஆர் கட்சியுடனான உறவையும் துண்டித்துக் கொள்ளும்  முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய முடிவை பாஸ் கட்சி எடுக்குமானால் சிலாங்கூர் மாநில அரசில் அங்கம் வகிக்கக்கூடாது எனவும் அவ்வாறு பதவி வகிப்பது நியாயமாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிகேஆர் உறவைத் துண்டித்துக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கும் நிலையில், இறுதி முடிவை பாஸ் கட்சியின் உச்சமன்றம் இறுதி முடிவை எடுக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் வினுசக்ரவர்த்தியின் நல்லுடலுக்கு திரையுலக பிரபலங்கள் இறுதி அஞ்சலி

நடிகர் வினுசக்ரவர்த்தியின் நல்லுடலுக்கு
திரையுலக பிரபலங்கள் இறுதி அஞ்சலி


சென்னை
மறைந்த நடிகர் வினுசக்ரவர்த்தியின் நல்லுடலுக்கு  தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இறுதி செலுத்தினர்.

தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் வினுசக்ரவர்த்தி கடந்த வியாழக்கிழமை  சென்னையில் காலமானர். அவருக்கு வயது 72.

தமிழ், மலையாளம், கன்னடம் என 1,002 திரைப்படங்களில் நடித்துள்ள வினுசக்ரவர்த்தியின் 1000ஆவது திரைப்படம் ராகவா லாரன்ஸ் இயக்கிய 'முனி' திரைப்படம் ஆகும். இவர் நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம் 'வாயை மூடி பேசவும்'.

மறைந்த நடிகர் வினுசக்ரவர்த்தியின் நல்லுடக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், நடிகர்கள் சிவகுமார்,நெப்போலியன். செந்தில், விவேக், சூரி, மயில்சாமி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு முன்னதாக நடிகர் வினுசக்ரவர்த்தியின் மறைவுச் செய்தியை கேள்வியுற்று  நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

புயல் காற்று: ஆலயத்தின் மீது சாய்ந்தது 150 ஆண்டுகால அரச மரம்

புயல் காற்று: ஆலயத்தின் மீது சாய்ந்தது 150 ஆண்டுகால அரச மரம்







ஈப்போ
இங்கு வீசிய கடுமையான புயல் காற்றில் ஜாலான் லகாட்டிலுள்ள அருள்மிகு பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்த 150 ஆண்டுகளாக அரச மரம் வேரோடு சாய்ந்தது.

பிற்கலில் வீசிய கடுமையான புயல் காற்று பல்வேறு இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்திய வேளையில் இந்த அரச மரத்தையும் வேரோடு சாய்த்தது.

ஆலயத்தின் மீது விழுந்து அரச மரம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. ஆயினும் அங்கு எழுந்தருளியுள்ள பிள்ளையார் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

நாட்டின் உருமாற்றத்திற்கேற்ப மாணவர்கள் தயாராக வேண்டும் - டத்தோ சரவணன்

 நாட்டின் உருமாற்றத்திற்கேற்ப மாணவர்கள் தயாராக வேண்டும் - டத்தோ சரவணன்





கோலகங்சார்
வரும் காலத்தில் நிகழக்கூடிய உருமாற்றத்திற்கு இன்றைய மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் கூறினார்.

தற்போதைய சூழலில் நாடு அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியில் நாமும் பயணிக்க வேண்டிய கட்டாய  சூழல் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் தோட்டப்புறங்களில் நாம் வேலை செய்தோம் என்ற வரலாறு உள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் தோட்டப்புறங்களில் அந்நியத் தொழிலாளர்களே ஆக்கிரமித்துள்ளனர். தோட்டத்துறையிலும் நமக்கான வாய்ப்புகள் இல்லை.

ஆதலால் நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை கல்வியை திறமை வாய்ந்தவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். கல்வி கற்ற சமூகமே அனைத்துத் துறையிலும் முன்னேறி நிற்கும் என்பதை உணர்ந்து மாணவர்கள் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கோலகங்சார் காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் வலியுறுத்தினார்.



இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டத்தோ சரவணன் உட்பட பள்ளி தலைமையாசிரியர்கள், பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.


Friday, 28 April 2017

14ஆவது பொதுத் தேர்தல்; இழந்த தொகுதியை மீட்டெடுப்போம்- டத்தோ சுப்ரா உறுதி


14ஆவது பொதுத் தேர்தல்;

இழந்த தொகுதியை மீட்டெடுப்போம் டத்தோ சுப்ரா உறுதி




சுங்கை  சிப்புட் 

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை  மலர்ந்துள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த இரு தவணைகளாக இத்தொகுதி எதிர்க்கட்சியின் வசமாகியுள்ளது. ஆனால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி உறுதி செய்யப்படும் என தன்னால் உணர முடிகிறது.

இங்குள்ள இந்தியர்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதற்கு காலம் கனிந்துள்ளது.

இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாள அட்டை, குடியுரிமை, பிறப்புச் சான்றிதழ் போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை 'புளூபிரிண்ட்' செயல் வடிவத்தை அறிமுகப்படுத்தியபோது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.

அதற்கேற்ப இத்தொகுதியில் இந்தியர் விவகார சிறப்பு நடவடிக்கைக் குழுவின் (எஸ்ஐடிஎஃப்) அலுவலகம் திறக்கப்படுகிறது என சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.


நேற்றிரவு நடைபெற்ற சுங்கை சிப்புட் எஸ்ஐடிஎஃப் அலுவலக திறப்பு விழாவில் மஇகா தேசிய துணைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, எஸ்ஐடிஎஃப் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.வீரசிங்கம், பேராக்  மாநில மஇகா தலைவர் டத்தோ .இளங்கோ, மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், மஇகா மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டி, சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, ஜாலோங் கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ, சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா இளைஞர் பகுதித் தலைவர் மு.நேருஜி உட்பட தொகுதி பொறுப்பாளர்களும் திரளன மக்கள் கலந்து கொண்டனர்



Thursday, 27 April 2017

What Says Obama for the Youth

 அன்று மணிவண்ணன்! இன்று ஒபாமா! 

இளைஞர்களுக்கு சொல்வது என்ன?






நாட்டின் அரசியலை இளம் தலைமுறையினர் நன்கு உணர்வதோடு அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அதுதான் ஒரு நாட்டை வளர்ச்சி பாதைக்குக் கொண்டுச் செல்லும் என்பதே இளைஞர்களை அரசியலில் இழுக்க நினைக்கும் பல தலைவர்களின் கொள்கை முழக்கமாக உள்ளது.

  ஆனால் இன்றைய இளைஞர்களோ அரசியல் ஒரு சாக்கடை; அதில் நான் விழ விரும்பவில்லை என்ற பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் முழுமையாக அரசியலில் களம் காணாததன்  விளைவுதான் இன்று வயதானவர்களின் ஆளுமைக்கு உட்பட்டதாக அரசியல் தளம் மாறியுள்ளது. ஆனால் ஒரு வல்லரசு நாட்டின் எதிர்காலத்தை பற்றி கனவு காணும் மிகச் சிறந்த தலைவர், அதற்கு இளைஞர்களே சிறந்த களம் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.

  ஆம்.. அந்த கனவை தற்போது விதைத்துள்ளவர் வேறுயாருமில்லை. அமெரிக்காவை 8 ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஒபாமா தான்.

  அதிபர் பதவியிலிருந்து விலகிய மூன்று மாத கால ஓய்வுக்கு பின்னர், தன்னுடைய சொந்த மகாணமான சிக்காகோவில் 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடியிருந்த சிக்காகோ பல்கலைக்கழகத்தில் அடுத்த தலைமுறை இளைஞர்களுடன் பேசினார் ஒபாமா.

 அமெரிக்காவில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க எடுக்கப்படும் முதல் முயற்சி என இந்த சந்திப்புக்கு அவர் காரணம் கூறியுள்ளார். அமெரிக்காவின் எதிர்காலத்தை பற்றி மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தற்போதைய தலைவர்களை தாண்டி இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே ஒபாமாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  ‘நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்ய முடியும் என்றால், அது இந்த நாட்டின் அடுத்த தலைமுறையான உங்களை, ஆகச்சிறந்த தலைவர்களாக மாற்ற எடுக்கும் முயற்சியாகத் தான் இருக்க முடியும்என்று தெரிவித்துள்ளார்.

  இளம் தலைமுறையினர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஒபாமாவின் கனவுவல்லரசு  நாடான அமெரிக்காவுக்கு மட்டும் பொருந்தாது. வளர்ச்சி காணும் துடிக்கும் பிற நாடுகளுக்கும் பொருந்தும்.

  இளைஞர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்பதால்தான் வயது நிரம்பியவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தளமாக அது மாறியுள்ளது, அரசியலில் வயது முதிர்ந்தவர்களே நிரம்பியிருந்தால் உருமாற்றம் எதனையும் காண முடியாது.

  அரசியலில் உருமாற்றம் காண இளைஞர்கள் அதில் களமிறங்க வேண்டும். அப்போதுதான் அங்கு நவீன காலத்திற்கான உருமாற்றம் முன்னெடுக்கப்படும்.

   அரசியல் என்பது வெறும் கட்சிகளை மட்டுமே அடித்தளமாகக் கொண்ட ஆளுமை கிடையாது. மாறாக, அது ஓர் அரசாங்கத்தை நிறுவுகின்ற அதீத சக்தி வாய்ந்த கருவி ஆகும்.

 இதனை நன்கு உணர்ந்து இளைஞர்களும் தங்களை அரசியலில் இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் அரசியல் உண்மையான அரசியல் தளமாக மாறும்.

  இதை முடிக்கும் முன் 1999இல் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் நடிகர்       மணிவண்ணன் அர்ஜுனுடன் பேசிய சினிமா வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இன்னிக்கு இருக்கிற இளைஞன் எவன கேட்டாலும் டாக்டர், இஞ்ஜினியர், வக்கீல் ஆகனும்னு சொல்லுறான்.

 எவனாவது ஒருத்தன் அரசியல்வாதி ஆகணும்னு சொல்லுறானா? கேட்டா அரசியல் ஒரு சாக்கடை என்பானுங்க. சாக்கடையா இருந்தா இறங்கி சுத்தம் பண்ண வேண்டியது தான? அத விட்டுட்டு கண்ட கண்ட அரசியல்வாதிங்க கிட்ட நாட்டை கொடுத்து அந்த நாத்தத்திலேயே வாழ்ந்து பழகிட்டானுங்க”.

King’s birthday Postponed to July

மாமன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஜூலைக்கு மாற்றம்!


புத்ராஜெயா-
நாட்டின் 15ஆவது மாமன்னராக முடி சூடப்பட்டுள்ள சுல்தான் முகமட் வி அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டம் ஜூன் மாதத்திலிருந்து ஜூலை மாதத்திற்கு மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜூன் முதல் வார சனிக்கிழமை கொண்டாடப்பட வேண்டிய மாமன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஜூலை மாத இறுதி வார சனிக்கிழமை கொண்டாடப்படும். இது 2017 முதல் 2021 வரை அமலில் இருக்கும் என் பிரதமர் துறை இலாகா வெளியிட்டுள்ள அறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 முதல் 2019 வரை ஜூன் முதல் வார சனிக்கிழமை ரமடான் மாதம் அனுசரிக்கப்படுவதால் மாமன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாமன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஜூலை 29ஆம் தேதி நடைபெறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மலர்ந்துவிட்டது ‘மாணவர் முழக்கம் 2017’

மீண்டும் மலர்ந்துவிட்டது 

மாணவர் முழக்கம் 2017



கோலாலம்பூர்-
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலை வெளிக்கொணரும்  மாணவர் முழக்கம் 2017  மீண்டும் மலர்ந்து விட்டது. கடந்தாண்டு அனைத்துல அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டி மீண்டும் புத்துயிர் பெறுகிறது.

ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து படைக்கும் இந்த  மாணவர் முழக்கத்தின் இவ்வாண்டுக்கான முதல் மண்டலப் போட்டி அண்மையில் தலைநகரில் நடத்தப்பட்டது.

முன்னதாக இந்த போட்டியில் பங்கெடுக்க நாடு முழுவதிலுமிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொளி வாயிலாக தங்களது பேச்சாற்றல் பதிவை தேர்வு சுற்றுக்கு அணுப்பி வைத்திருந்தனர். அதில் 120 மாணவர்களை மட்டுமே நடுவர் குழு தேர்வு செய்தது.

இந்த முதல் மண்டல சுற்றில் சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், பகாங் மாநிலத்தைச் சேர்ந்த 30 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அரையிறுதி  போட்டி  நடைபெற்றது.
சிறப்பான படைப்பை வெளிபடுத்திய இந்த 30 மாணவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே  மாணவர் முழக்கத்தின் இறுதிச் சுற்றுகு தேர்வாகினர்.

சஞ்சிதா பெரியசாமி (வெஸ்ட்கன்ரி தமிழ்ப்பள்ளி,சிலாங்கூர்), நவீன் செல்வசுப்ரமணியம், விலோஷனா மனோகரன் (காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்), முகிலன் கந்தசாமி (மெத்தடிஸ்ட், காப்பார் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்), சச்சிந்திரன் வீரங்கன், யாசிகா கலைமணி (பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி, பகாங்) ஆகியோரே இறுதிச் சுற்றுக்கு தேர்வான மாணவர்கள் ஆவர்.

இன்னும் முன்று சுற்றுகள் எஞ்சியிருக்கும் வேளையில் மாபெரும் இறுதிச் சுற்றில் வாகை சூடும் மாணவர்கள் மலேசியாவை பிரதிநிதித்து இம்முறை இந்தியாவில் நடைபெறவிருக்கும் அனைத்துலகை மாணவர்க முழுக்க போட்டியில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.



பெட்ரோல், டீசல் விலை சரிவு!

பெட்ரோல், டீசல் விலை சரிவு!


கோலாலம்பூர்-
இன்று தொடங்கி பெட்ரொல், டீசல் விலை இறக்கம் காண்கிறது. 27ஆம் தேதி முதல் ரோன் 95 ஒரு லிட்டருக்கு 2.21 வெள்ளியாகவும் ரோன் 97 ஒரு லிட்டருக்கு 2.49 வெள்ளியாகவும் விற்பனை செய்யப்படும். இதன்வழி ரோன் 95 6 காசும், ரோன் 97 5 காசும் இறக்கம் கண்டுள்ளது.

அதே போன்று டீசல் யூரோ 2எம் வெ.2.14 (7 காசு இறக்கம்), யூரோ 5 வெ.2.24 (7 காசு இறக்கம்) என விற்கப்படும்


Wednesday, 26 April 2017

SG. SIPUT SITF OFFICE LAUNCHING BY DATO SERI DR. SUBRAMANIAM

சுங்கை சிப்புட் எஸ்ஐடிஎஃப் அலுவலகத்தை திறந்து வைக்கிறார் டத்தோஸ்ரீ சுப்ரா

     



       லேசியாவிலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாள அட்டை, குடியுரிமை, பிறப்புப் பத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணும் வகையில் அமைக்கப்பட்ட இந்தியர் விவகார சிறப்பு பணிக்குழுவின் (எஸ்ஐடிஎஃப்) கிளை அலுவலகம் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் திறப்பு விழா காண்கிறது.


     நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே இன்னுமும் குடியுரிமை இல்லாமல் வாழ்வோரின் வேதனைகள் சொல்லில் அடங்காதவை. பிறப்புப் பத்திரம் இல்லாததால் தங்களது கல்வியை பாதியிலேயே கைவிட்டவர்களும் உள்ளனர்.

    இத்தகைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண தொடங்கப்பட்ட எஸ்ஐடிஎஃப் நாடு முழுவதும் சிறப்பான சேவையை மேற்கொண்டு வரும் வேளையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அதன் கிளை அலுவலகத்தை மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நாளை 27ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.


     அதோடு ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி, ஆலயங்களுக்கு மானியம் ஆகியவற்றையும் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் வழங்கவுள்ளார் என சுங்கை சிப்புத் தொகுதி மஇகா தலைவர் இளங்கோ முத்து கூறினார்.

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் வெறும் 'வெட்டிப் பேச்சல்ல'

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள்வெறும் 'வெட்டிப் பேச்சல்ல'











இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அன்று விதைக்கப்பட்ட கனவு இன்று நிஜமாக்கப்பட்டுள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  தெரிவித்தார்.

நாட்டின் 11ஆவது மலேசியத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது இந்திய சமுதாயத்திகான வியூகச் செயல் வரைவுத்  திட்டம் (புளூபிரிண்ட்உருவாக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.




இந்திய சமுதாயத்திற்கான புளூபிரிண்ட் 11ஆம் தேதி மே மாதம் 2015இல் அறிவிக்கப்பட்டது. அன்று அறிவிக்கப்பட்ட இந்திய சமுதாயத்திற்கான 'கனவு திட்டம்' இன்று நிஜமாக்கப்பட்டுள்ளது.

இது ஒன்றும் 'வெட்டிப்  பேச்சல்ல'. மாறாக இது 'நிஜமானது'. இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தேசிய முன்னணி அரசாங்கம் முன்னெடுத்துள்ள வரைவு திட்டம் ஆகும் என டத்தோஸ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற வியூக வரைவுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.