பாகான் செராய்-
கையெறி குண்டுகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு முஸ்லீம் அல்லாதோரை தாக்க திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதி ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
பாகான் செராயில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய தீவிரவாதி ஒருவன் தென் தாய்லாந்தையும் மலேசியாவையும் சேர்ந்த முஸ்லீம் அல்லாதோரையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் தனிநபராக தாக்க திட்டமிட்டிருந்தார்.
துப்பாக்கி வாங்குவதில் தோல்வி கண்டால், கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்த எண்ணம் கொண்டிருந்தான். இம்மாதம் 8ஆம் தேதி ஆயுதக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு ஆயுதம் வாங்க முற்பட்டபோது அவன் போலீசில் போலீசில் பிடிபட்டான்.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மலேசியா, தென் தாய்லாந்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிருந்த இந்தத் தீவிரவாதியைக் கைது செய்ததோடு வெடிகுண்டு தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களையும் போலீசார் கைப்பற்றினர் என்று ஐஜிபி டான்ஶ்ரீ முகமட் ஃபுசி ஹருன் கூறினார்.
சிரியாவிலுள்ள தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த மலேசியத் தலைவனுடன் அவன் தொடர்பு வைத்திருந்தான். மேலும், தென் பிலிப்பைன்சிலுள்ள தீவிரவாதிகளுடனும் தொடர்பில் இருந்ததாக நம்பப்படுகிறது.
மேலும், அபு ஷயாஃப் தீவிரவாதக் கும்பலுடன் இணைந்து மராவி போரில் ஈடுபட்டுவரும் மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் டாக்டர் மாமூட் அமாட்டை என்ற தீவிரவாதத் தலைவனை அவன் 'குரு'வாக கருதிவந்தான்.
கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய தீவிரவாதிகளுடன் தென் பிலிப்பைன்சிற்குச் தப்பிவிட்ட டாக்டர் மாமூட், கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கு, வெடிகுண்டு செய்ய கற்றுக் கொடுத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
இம்மாதம் 8-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 3 தீவிரவாதிகளைப் போலீசார் கைது செய்தனர்.
கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி 38 வயதுடைய செண்டோல் வியாபாரி கைது செய்யப்பட்டார். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொடியையும் அதன் செயல்பாடுகளையும் மக்களுக்கு பரப்பியதால் அவன் கைது செய்யப்பட்டார்.
மேலும், அதே தேதியில் இவ்வாண்டில் சிரியா ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய திட்டமிட்டிருந்த 41 வயதுடைய பேருந்து ஓட்டுனரைப் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்ததாக அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment