Thursday 14 September 2017

மலேசியாவில் ஜனநாயகம் செழிப்புடன் இருக்கிறது - பிரதமர் நஜிப்

வாஷிங்டன் -
என்னுடைய தலைமைத்துவத்தில் இப்போது சர்வாதிகாரம் கிடையாது. தற்போது மலேசியாவில் ஜனநாயகம் செழித்து நிற்கிறது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ஒருவரின் தலைமைத்துவத்திலே சர்வாதிகாரம் கடைபிடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் என்னுடைய தலைமைத்துவத்தில் மலேசியா செழிப்புடன் நிலைத்து நிற்கிறது.  அதுவும் முன்பை விட இப்போது வலுவாக உள்ளது.
சர்வாதிகாரத்தின் பிடிக்குள் சிக்கிவிடும் அபாயத்தில் மலேசியா இல்லை.

மலேசியாவை பற்றி தவறான தோற்றம் பரப்பப்படுவது உண்மையில் அபத்தமான ஒன்றாகும் என அமெரிக்காவின் கல்வியாளர்கள் கூட்டத்தில்   உரையாற்றியபோது டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

முன்னாள் பிரதமர் ஒருவரே அவரது ஆட்சிக் காலத்தில் சர்வாதிகாரியாக இருந்தார் என எதிர்க்கட்சிகளே ஒப்புக் கொண்டுள்ளன. 'இசா' சட்டம் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானவர்களை சிறையில் தள்ளியது, பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது, நீதித்துறையில் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.   அன்றைக்கு செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் இன்றைக்கூட சாமான்ய மலேசியர்களுக்கு பெரும் சுமையாக திகழ்கின்றன என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment