Tuesday 19 September 2017

பொங்கல் வெளியீடாக சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' வரும் பொங்கல் பண்டிகையின்போது வெளியீடு காண்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதோடு, இரண்டாவது சிங்கள், டீசர், டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அன்பான ரசிகர்கள் ஆசைப்பட்டதால், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இரண்டாவது சிங்கள் அக்டோபர் மாதத்திலும் டீசர் நவம்பரிலும் இசை வெளியீடு, டிரைலர் டிசம்பர் மாதத்திலும் வெளியீடு காணவுள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

ஸ்டுடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்திற்கு இசையமைப்பாளர்ர் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ஆனந்தராஜ், சரண்யா, ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமைய்யா, செந்தில், கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, சத்யன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment