ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மலேசிய தமிழ் இசைத்துறை வளர்ச்சி கண்டாலும் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லாமல் தென்னிந்திய இசைகளுக்கே மலேசிய இந்தியர்களை அடிமையாக்கி வைத்திருந்தது.
80ஆம்,90ஆம் ஆண்டு காலகட்டங்கள் யாவும் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இசை உலகை அரசாட்சி செய்ய மலேசிய இசை கலைஞர்களும் தங்களை இசையின் பரிணாம வளர்ச்சியில் தங்களை மெருகேற்றி கொண்டிருந்தனர்.
எலிகேட்ஸ், ஓஜி நண்பா, டார்க்கி உட்பட பல கலைஞர்கள் தங்களை இசைத்துறையில் முத்திரை பதிக்க முயற்சி செய்ய தென்னிந்திய இசைக்கு நிகரில்லாமல் தனி ஒரு பாணியில் மலேசிய இசைத்துறை பயணித்துக் கொண்டிருந்தது.
அந்த தருணத்தில் தான் 'உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ' எனும் மெல்லிய குரலிசையில் மலேசியர்களின் காதுகளுக்கு தேனிசையாய் பாய்ந்தது ஒரு குரல்.
மலர்களை வட்டமிடும் தேனீக்களை போல் வானொலி அலைவரிசையில் திரும்ப திரும்ப ஒலிக்கும் அந்த பாடலை கேட்பதற்கே ஒரு ரசிகர் கூட்டம் உருவாக்கி கொண்டிருந்தது அந்த குரல் தான் பின்னாளில் இசை புரட்சியின் வித்து என்பதை உணராமலே.
ஆம்... அந்த தேனிசை குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் திலீப் வர்மன் ஏற்படுத்திய மாயை மலேசிய தமிழ் இசைத்துறையையே சுழற்றி போட்டது.
அதுவரை மேலை நாட்டு இசைத்துறைக்கு மட்டுமே அடிமையாகி இருந்த மலேசிய இந்தியர்கள் மெல்ல மெல்ல மெல்லிசை பாடலுக்கு தங்களை அடிமையாக்கிக் கொள்ள தயாராகினர்.
இசையமைப்பாளர் ஜெய்-இன் இசையில் திலீப் வர்மன் குரலில் ஒலித்த 'உயிரை தொலைத்தேன்' பாடலே இன்று மலேசிய இசைத்துறையில் நிகழ்ந்துள்ள அதிரடி மாற்றத்திற்கான ஆரம்பம் என்பதை மறுக்க முடியாது.
'கனவெல்லாம் நீதானே' எனும் பாடலுக்கு இசையமைத்து உயிர் கொடுத்த திலீப் வர்மனின் மற்றொரு படைப்பு 90ஸ் கிட்ஸ்களின் ஆல் டைம் பேவரைட் பாடல் ஆகும்.
தமிழக இசைக் கலைஞர்களான ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன், சங்கர் மகாதேவன் போன்ற இசை கலைஞர்களுக்கு மத்தியில் இசை நாயகனாய் உருவெடுத்தது திலீப் வர்மனின் குரலிசைக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் ஆகும்.
தனது காந்த குரலில் மூலம் இளைஞர்களை சென்றடைந்த பாடல்களின் இசைத்துறையில் நீங்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார் திலீப் வர்மன்.
மீண்டும் மீண்டும் ஓயாமல், என்னவளே என்னை மறந்தது ஏனோ என திலீப் வர்மன் செய்தது எல்லாம் இசை புரட்சியே.
100் பாடல்களுக்கும் மேல் பாடி இசை வானில் வெற்றி கொடி நாட்டி, இசைத்துறையில் ஈடுபட நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முகவரியாய் திகழும் திலீப் வர்மனின் மாயக் குரல் ஓய்வில்லாமல் என்றும் இசை புரட்சியை செய்திட வேண்டும்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர், பாடகர் திலீப் வர்மனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HBDDhilipVarman
Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts
Wednesday, 29 April 2020
Sunday, 22 March 2020
அனைத்து மலேசியர்களுக்கும் ஆஸ்ட்ரோ கோ; இப்பொழுதே ஸ்ட்ரீம் செய்யுங்கள்
கோலாலம்பூர் –
வீட்டில் இருக்கும்போது மலேசியர்கள் மிக விரைவாக களைப்படைவதை
எங்களால் உணர முடிகின்றது. அதனால்தான் ஆஸ்ட்ரோ
கோ உங்களை களைப்பின்றி உற்சாகத்துடன் வைத்திருப்பதை நாங்கள் விரும்புகிறோம். தற்பொழுது ஒவ்வொரு மலேசியரும் தங்களின் கைப்பேசியை பயன்படுத்தி
மிகவும் எளிமையான முறையில் ஆஸ்ட்ரோ கோவினுல்
நுழைந்து ஆன் டிமாண்ட் தலைப்புகள் உட்பட 31 மார்ச் 2020 வரை இலவசமாக கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட ஆஸ்ட்ரோ
அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதன் வழி தங்களையும் தங்கள்
அன்பானவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்.
Astro Awani மற்றும் Bernama TV-உடன் நாட்டு நடப்புகளையும்
முக்கிய செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். Cartoon Network-இல் குழந்தைகள் தங்களுக்கு
விருப்பமான நிகழ்ச்சிகளைக் கண்டுக் களிக்கும் வேளையில் அல்லது Astro Tutor TV-இல் கல்வி கற்று கொண்டிருக்கும் வேளையில் நீங்கள்
GO SHOP-இன் வழி உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்களாம். விளையாட்டு மற்றும் மின் விளையாட்டு ரசிகர்கள் Arena மற்றும் eGG மூலம் உடனுக்குடனான
விளையாட்டுச் செய்திகளை அறிந்துக் கொள்ளலாம். ஆஸ்ட்ரோ கோ-இல் 22 இலவச அலைவரிசைகளில் Dua Takdir Cinta, Happy
Prince, All is Well, Travel for Love, Allungal Vellungal, Rajiniyudan Naan மற்றும் பல சுவாரஸ்சியமான நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள். 22 இலவச அலைவரிசைகள் பின்வருமாறு:
·
Astro Prima
·
Astro Oasis
·
Go Shop HD
RUUMA
·
Go Shop HD GAAYA
·
Astro Vaanavil
·
Makkal TV
·
Astro AEC
·
GO SHOP Chinese
·
TV Alhijrah
·
Celestial Movies
·
Celestial Classic Movies
·
CCTV4
|
·
Astro Xiao Tai Yang
·
Astro Awani
·
Bernama TV
·
Astro Tutor TV UPSR
·
Astro Tutor TV PT3
·
Astro Tutor TV SPM
·
Astro Arena
·
eGG
·
HELLO
·
Cartoon Network
|
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள்
அல்லாதவர்கள் ஆஸ்ட்ரோ கோ-ஐ அணுக பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
படி 1: App Store அல்லது Google Play-ஐ பயன்படுத்தி ஆஸ்ட்ரோ கோ-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.
படி 2: “ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்
அல்ல” என்பதைக் கிளிக் செய்க
படி 3: ஒரு ID-ஐ அமையுங்கள்
படி 4: உங்கள் மின்னஞ்சலுக்கு
அனுப்பப்பட்ட 6 இலக்கு pin-இன் முலம் உங்கள் ID-ஐ சரிபார்க்கவும்
உங்கள் மடிக்கணினி/கணினி முலமாக ஆஸ்ட்ரோ கோ-ஐ அணுக, astrogo.com.my என தட்டச்சு செய்து, மேலே குறிப்பிட்டுள்ள அதே படிகளைப் பின்பற்றவும்.
*நீங்கள் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களேயானால், “ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்”
என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சந்தா தொகுப்புகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஸ்ட்ரீம் செய்து
மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ
கோ-இல் இந்த இலவச அணுகலை பற்றிய
மேல் விபரங்களுக்கு www.astro.com.my
எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
Thursday, 31 October 2019
பென்னி தயால்- ஆண்ட்ரியா கலக்கும் ‘மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சி
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
அரேனா குளோபல் இன்டர்நேஷனல் ஏற்பாட்டில் தமிழ்த் திரைப்பட பாடகர்கள் பென்னி தயால்- ஆண்ட்ரியா ஆகியோரின் இசை படைப்பில் மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர்-
அரேனா குளோபல் இன்டர்நேஷனல் ஏற்பாட்டில் தமிழ்த் திரைப்பட பாடகர்கள் பென்னி தயால்- ஆண்ட்ரியா ஆகியோரின் இசை படைப்பில் மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
டத்தோ ஈஸ்வரன் பெருமாள் வழங்கும்
இந்த இசை வரும் டிசம்பர் 21ஆம் தேதி செராஸ் பிஜிஆர்எம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ரசிகர்கள் விரும்பும் வகையில்
ஒரு மாறுபட்ட இசை நிகழ்ச்சியாக இது அமையும் என கூறிய பென்னி தயால், நான்கு மணி நேரமும்
முழுக்க முழுக்க ரசிகர்களை கொண்டாட்டம் போட்ட வைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது
என்றார்.
தமிழ் நாட்டு கலைஞர்கள் மட்டுமல்லாது
உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையி ஹேவொக் பிரதர்ஸ் நவீன் – மதன் ஆகியோரும்
இதில் இசை விருந்து படைக்கவுள்ளனர்
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு
இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாக கூறிய டத்தின் தீபா, இனி தொடர்ந்தாற்போல்
பல நிகழ்ச்சிகளை படைக்க அரேனா குளோபல் இண்டர்நேஷனல் திட்டம் வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.
‘மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற விரும்புவோர் அரோனா குளோபல் இண்டர்நேஷனலின் அகப்பக்கம்,
முகநூல் பக்கத்தை நாடலாம்.
ADVERTISEMENT
Wednesday, 23 October 2019
ஆஸ்ட்ரோவில் களைகட்டும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
கோலாலம்பூர்-
இவ்வாண்டு தீபாவளிக்கு அனைத்து
மலேசியர்களும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ என்ஜோய் மற்றும் ஆஸ்ட்ரோ உலகம் வாயிலாகக் கண்டு மகிழலாம்.
அவ்வகையில்,
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி (அலைவரிசை 231)-இல் புத்தம் புதிய உள்ளூர் நிகழ்ச்சிகள்
ஒளியேறவுள்ளது.
பாரம்பரிய மற்றும் இந்தியர்களின் உணவுகளைத் தயாரிக்கும் வழிமுறைகளைக்
காட்டும் சமையல் நிகழ்ச்சி,
தீபாவளி அனல் பறக்குது;
கவிதா
தியாகராஜன், வினோஷன் மற்றும் நிவதாரன் நடிப்பில் மர்ம
நிறைந்த தொடர் நாடகம், யாழி; பாலகணபதி, சங்கீதா
கிருஷ்ணசாமி, சசி குமார் மற்றும் அருண் நடிப்பில்
நகைச்சுவை நாடகம், அடாவடி தீபாவளி; ஸ்ரீ சோனிக் மற்றும் காயத்ரி தொகுத்து
வழங்கு Savalukku Ready Ah கேம் ஷோ; மலேசியா முழுவதும் உள்ள சிறந்த
உணவகங்களில் எடுத்து காட்டும் பக்கா லோக்கல்;
மலேசியர்களை நேர்காணல் செய்து யார் சிறந்த நடிகர் என ஆராயும் யார் உங்க கோலிவுட் கிங் போன்ற
நிகழ்ச்சிகள் அடங்கும்.
அதோடு, உள்ளூர் திரைப்படங்களான வெடிகுண்டு பசங்க, அழகிய தீ, திருடாதே பாப்பா திருடாதே மற்றும் சட்ட; Lock-up குழுவினர்களின் இசைப் படைப்புகள் கொண்ட Lock-up Live
Concert; இளம் இயக்குனர் மதன்
இயக்கத்தில் வெளிவந்த Love in 12 hours எனும் குறும்படம்; பாலகணபதி தொகுத்து வழங்கும் ரசிக்க
ருசிக்க சீசன் 5-இல் மலேசியாவிலுள்ள சிறந்த வாழை இலை
உணவுகள் கொண்ட உணவகங்கள் காட்டும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி என ஆகிய
உள்ளடக்கங்களைக் கண்டு மகிழலாம்.
அக்டோபர் 21-ஆம் தேதி
தொடக்கம் நவம்பர் 20-ஆம் தேதி வரை என்ஜோய்
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241) வாங்கும் போது ரிம 5 கழிவு
அனுபவிக்கலாம். இதன் மூலம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த
சிந்துபாத், சிவகார்த்திகேயன், சத்யராஜ், தர்சன் ஆகியோர் நடித்துள்ள கனா, மாலைக்கண் நோயால்
பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின், வாழ்க்கையில் நடக்கும் கலவரங்களைக்
கலகலப்பாகக் காட்டும் திரைப்படம் சிக்சர், நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடிப்பில் கழுகு 2 மற்றும் இயக்குனர் ராஜு விஸ்வாந்த் இயக்கத்தில்
அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகிபாபு நடித்த லீசா ஆகிய
திரைப்படங்களைக் கண்டு களிக்கலாம்.
ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை,
கூறுகையில், “தமிழ் மொழி, கலை மற்றும்
கலாச்சாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் கலைஞர்களை
உருவாக்குவதில் தொடர்ந்து ஆஸ்ட்ரோ கடமைப்பட்டுள்ளது. அவ்வகையில்,
இவ்வாண்டு தீபாவளிக்கு ஆறு புத்தம் புதிய நிகழ்ச்சிகளான தீபாவளி அனல் பறக்குது, யாழி, அடாவடி தீபாவளி,
Savalukku Ready Ah, பக்கா லோக்கல் மற்றும் யார் உங்கா கோலிவுட் கிங்
எனும் நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளோம்.
அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள்
வெளியூர் நிகழ்ச்சிகளோடு டிஜிட்டல் உள்ளடக்கங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை ராகா, ஆஸ்ட்ரோ உலகம் மற்றும் கோ ஷோப் வாயிலாக எதிர்பார்க்கலாம். ஆகவே, நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த உள்ளடக்கங்களைத்
தொடர்ந்து வழங்குவோம்”, என்றார்.
அடாவடி தீபாவளி நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பால
கணபதி வில்லியம், கூறுகையில், “பெரும்பாலும் நம்முடைய தீபாவளி
கொண்டாட்டங்களில் ஆஸ்ட்ரோ ஒரு பகுதியாகும். நகைச்சுவை
நிறைந்த அடாவடி தீபாவளி எனும் தலைப்பில் தொலைக்காட்சி நாடகத்தின் மலேசியர்களுக்கு
வழங்குவதற்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். அதோடு, அடாவடி தீபாவளி எனும் அதே பெயரில் வெளிவந்த ஆஸ்ட்ரோவின் இவ்வாண்டும்
தீபாவளியின் தீம் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகவுள்ளது. இந்நாடகத்தில்
பிரபல நம் உள்ளூர் கலைஞர்களான சங்கீதா, சத்தியா, சசி குமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியத்தில் பெருமைக் கொள்கிறேன்.
அதோடு, வளர்ந்து வரும் கலைஞர்களான ஹேமா, சுபாஷினி மற்றும் அருண் இந்நாடகத்தில் நடித்துள்ளார்கள். மலேசியர்கள்
இந்நாடகத்தை விரும்பி பார்ப்பார்கள் என்றும் மலேசிய கலையுலகம் வளர அதிகமான
வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்”.
Savalukku Ready Ah மற்றும் பக்கா லோக்கல் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளர், ஸ்ரீ சோனிக், கூறுகையில், “ஆஸ்ட்ரோவில்
தொடர்ந்து இரண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது எனக்குக் கிடைத்த அரிய
வாய்ப்பாகும். அதே போல் பிற உள்ளூர் கலைஞர்களுக்கும் இவ்வகையான வாய்ப்புகள்
கிடைக்க வேண்டும்”, என்றார்.
சமூக
வளத்தளங்களில் 2
மில்லியன் பார்வையார்களைக் கொண்ட ஆஸ்ட்ரோ உலகம், முதல் முறையாக “Deepavali Then and Now” எனும்
தலைப்பில் அன்று மற்றும்
இன்று எவ்வாறு தீபாவளி கொண்டாடப்பட்ட தகவலை உள்ளடக்கிய நான்கு அத்தியாயங்கள் கொண்ட
தீபாவளி குறுந்தொடர் காணொளிகள் தயாரித்துள்ளது. அதோடு, 2018-ஆம்
ஆண்டின் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் போட்டியாளர் லாச்மேன் இசையில் ‘அன்பின்
ஒளி’ எனும் தீபாவளி பாடலில் நம்முடைய உள்ளூர் கலைஞர்களும் கலர்ஸ் அறிவிப்பாளர்களும்
இடம்பெற்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி, தீபாவளி குறித்த 20 காட்டுரைகள் மற்றும் 40 சமையல் காணொளிகள் astroulagam.com.my/AnbinOli அகப்பக்கத்தில்
கண்டு களிக்கலாம்.
மேலும்,
இவ்வாண்டு தீபாவளிக்கு வாடிக்கையாளர்கள் அக்டோபர் 31-ஆம் தேதி வரை கோ ஷோப் வாயிலாக
குறிப்பிட்ட பொருட்களுக்கு குறைந்தபட்சம் ரிம 120-க்குப் செலவு செய்தால் 10% கழிவு
அனுபவிக்கலாம். ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கோ ஷோ நிகழ்ச்சியின் நேரலையை ஒவ்வொரு
நாளும் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் மதியம் 12 அல்லது மாலை 5.30 மணிக்கு மற்றும் ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 231-இல் வீட்டிற்குத் தேவையான அடிப்படை
பொருட்களின் தகவல்களைப் பெற்று கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு, goshop.com.my அகப்பக்கம் அல்லது
கோ ஷோப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இதைத்
தவிர்த்து, வறுமையில் கஷ்டப்படும் ஜந்து
குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் ராகா கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் சமையல்
பொருட்கள், குழந்தைகளுக்கான பால் மாவு எனத் தங்களுடைய
ரசிகர்களிடமிருந்து பெற்று அக்குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதுமட்டுமின்றி, ஜெய் இசைமைப்பில் “வந்தாச்சு நமக்கு தீபாவளி”
எனும் தலைப்பில் இவ்வாண்டுக்கான தீபாவளி பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை
ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடியுள்ளார்கள். SYOK செயலி வாயிலாக
மலேசியர்கள் ராகாவை எங்கு இருந்தாலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் கேட்டு
மகிழலாம்.
ஆஸ்ட்ரோ தீபாவளி நிகழ்ச்சிகள் குறித்த மேல் விவரங்களுக்கு, www.astroulagam.com அகப்பக்கத்தை
வலம் வருங்கள்.
Wednesday, 16 October 2019
ஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’
கோலாலம்பூர்-
தீபாவளி திருநாளை முன்னிட்டு ‘தீபாவளி அனல் பறக்குது’ எனும் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் இன்று ஒளியேறவுள்ளது.
இவ்வாண்டு தீபாவளிக்கு நம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு சுவையான உணவுகளைத் தயாரித்து உபசரிப்பது எனும் தகவல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும். அதோடு, அந்த உணவுகளை சமைக்கும் வழிமுறைகளும் இந்நிகழ்ச்சியில் கண்டு அறிந்து கொள்ளலாம்.
விழுதுகள் அறிவிப்பாளர் ரேவதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ரசிக்க ருசிக்க பால கணபதி, நவி இந்திரன் பிள்ளை, நீருக்குள் நீண்ட நேரம் மூழ்கியிருக்கும் வித்தையில் மலேசியா சாதனையாளர் விருது பெற்ற விக்னேஸ்வரன் அழகு, மலேசியாவில் சமூக வலைத்தளங்களின் புகழ் நந்தினி பாலகிருஷ்ணன், என் வீட்டுத் தோட்டத்தில் திரைப்படத்தின் கதாநாயகி ஜெயா கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளார்கள்.
அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்குக் கண்டு களிக்கலாம். இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இரவு 9.30 மணிக்கு ஒளியேறும். அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியின் அனைத்து அத்தியாயங்களும் ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு மகிழலாம்.
இந்நிகழ்ச்சியில் தயாரிக்கப்படும் உணவுகளின் செய்யும் முறைகளை www.astroulagam.com.my/AnbinOli அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.
Tuesday, 8 October 2019
பிக் பாஸ் டைட்டிலை வென்றார் முகேன் ராவ்
சென்னை-
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வெற்றியாளர் டைட்டிலை முகேன் ராவ் வென்றுள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வெற்றியாளர் டைட்டிலை முகேன் ராவ் வென்றுள்ளார்.
கடந்த
100 நாட்களாக தனியார் விஜய் தொலைகாட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவைச்
சேர்ந்த முகேன் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட அனைத்து விளையாட்டுகளிலும் திறம்பட விளையாடி ரசிகர்களின் அன்பை மட்டுமல்லாது
விளையாட்டுகளிலும் வென்றார்.
நேற்று நிகழ்ச்சியின்
இறுதி நாளில் முகேன் ராவை வெற்றியாளராக நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன்
அறிவித்தார்.
'பிக் பாஸ்' வின்னர் முகேன் ராவுக்கு கேடயமும் 50 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
Tuesday, 1 October 2019
ஒரே நாளில் திரைக்கு வரும் யோகிபாபுவின் 4 திரைப்படங்கள்
சென்னை-
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு நடித்த 4 திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரும் சுந்தர் சியின் ’இருட்டு’, வருண் நடித்த 'பப்பி', தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’, ‘பட்லர் பாபு' ஆகிய 4 திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு நடித்த 4 திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரும் சுந்தர் சியின் ’இருட்டு’, வருண் நடித்த 'பப்பி', தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’, ‘பட்லர் பாபு' ஆகிய 4 திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகாவில் ‘கேளுங்கோ சொல்லுங்கோ’ போட்டியில் ரிம 1,000 வெல்லலாம்
கோலாலம்பூர்–
செப்டம்பர் 30ஆம் தேதி தொடக்கம் ராகாவில் ‘கேளுங்கோ சொல்லுங்கோ’ போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொண்டு ரிம 1,000 ரொக்கப் பரிசு தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்து கொண்டிருகிறது.
இப்போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்றால் ரசிகர்கள் ராகாவுடன் காலை முதல் இரவு வரை இணைந்திருந்து அறிவிப்பாளர்கள் அழைக்கலாம் என்று சொன்னவுடனே 03-95430993 எண்களுக்கு அழைக்க வேண்டும். பிறகு, ‘‘கேளுங்கோ சொல்லுங்கோ’ போட்டியின் அழைப்பாளருக்கு அறிவிப்பாளர்கள் 10 பாடலின் துணுக்குகள் ஒலியேற்றுவார்கள். பிறகு, ஒலியேற்றப்பட்ட 10 பாடலின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கண்டு பிடிக்க வேண்டும்.
10 பாடல்களின் பெயர்களைச் சரியாக கண்டு பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு ரிம 1000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அப்படி கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டால் சரியாக கண்டு பிடித்த பாடல்களுக்கு மட்டும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு சரியான பாடலுக்கு ரிம 10 வழங்குவார்கள்.
மேல் விவரங்களுக்கு, raaga.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)