Saturday 9 September 2017

விடாது பெய்த அடைமழை; வீடுகளில் புகுந்தது வெள்ளம்

சுங்கை பூலோ ஆற்றை சுத்தம் செய்யப்படுவதை கண்காணிக்கும் டத்தோ சூல்கிப்ளி,           டத்தோ டான்,  மணிமாறன், குடியிருப்பாளர்கள்.
ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்,
கடுமையாக பெய்த மழையை தொடர்ந்து இங்குள்ள ஆறு நீர் நிரம்ப் வழிந்து அருகிலுள்ள கம்போங் பெக்லைன், பெரிய மார்க்கெட், சுங்கை பூலோ, மகாத்மா காந்தி கலாசாலை  உட்பட பல பகுதிகள் வெள்ள நீர் புகுந்தது.
வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிடும் டாக்டர் ஜெயகுமார், பிஎஸ்எம் கட்சியினர்.
கால் முட்டியளவு புகுந்த வெள்ள நீரை விடிய விடிய சுத்தம் செய்யும் அவலநிலைக்கு இங்குள்ள குடியிருப்பாளர்கள் தள்ளப்பட்டனர்.
இங்குள்ள பெரிய மார்க்கெட்டில் வெள்ள நீர் புகுந்ததில் பல கடைகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இங்கு வர்த்தகம் மேற்கொள்ளும் சந்திரன் கூறுகையில், தனது கடைகளில் வெள்ள நீர் புகுந்து  பல பொருட்கள் நாசமாகின. அரிசி, பருப்பு, உப்பு போன்ற பல மளிகைப் பொருட்கள் சேதமடைந்தன என்றார்.
இந்த வெள்ளச் சம்பவத்தைத் தொடர்ந்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார், லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, ஜாலோங் சட்டமன்ற கெராக்கா ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ, சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிலவரங்களை கண்டறிந்தனர்.
வெள்ளம் பெருகியதை அடுத்து பெரிய மார்க்கெட், தெராத்தாய் உணவகம் போன்ற பகுதிகளில்  நிலவிய சேறு சகதிகளை  மாவட்ட தீயணைப்புப் படையினர், கோலகங்சார் மாநகர் மன்ற ஊழியர்கள்  சுத்தம் செய்தனர்.
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பல பொருட்கள் சேதமடைந்தன என பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டனர்.
இதனிடையே, பொறுப்பற்ற முறையில் மக்கள் குப்பைகளை சாக்கடைகளில் வீசுவதால் அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடைபட்டதால் இந்த வெள்ளம் ஏற்பட்டது என மணிமாறன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment