Friday 15 September 2017

1989ஆம் ஆண்டு கோர தீ விபத்தில் பாடம் கற்கவில்லையே!- துன் மகாதீர் வேதனை

கோலாலம்பூர்-
1989ஆம் ஆண்டு கெடா மாநிலத்தில் நிகழ்ந்த கோர தீச்சம்பவத்தில் நாம் பாடம் கற்கவில்லையே; அதனை முன்னுதாரணமாக கொண்டிருந்தால் தற்போது சமயப்பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 22 மாணவர்களையும் இரு ஆசிரியர்களையும் பறிகொடுத்திருக்க மாட்டோமே? என முன்னாள் பிரதமர் துன்  டாக்டர் மகாதீர் முகமது வேதனையுடன் தெரிவித்தார்.
கெடா, குவா செம்படாக்கில் 1989ஆம் ஆண்டு மட்ரஸா தஃபிக் அல்-கைரியா சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர். இத்தீ விபத்தில் பள்ளியும் 8 புளோக் தங்கும் விடுதியும் முற்றிலும் நாசமானது.
அந்த தங்கும் விடுதியில் ஒரு நபர் ஏற்றி வைத்த தீயே அங்கு நிகழ்ந்த தீ விபத்துக்கு காரணமாக அமைந்தது என அவர் பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

தங்கும் விடுதியை கொண்ட கட்டடங்களை நிர்மாணிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவரசமாக வெளியேறுவதற்காக வழிகளை நிர்மாணிக்க வேண்டும் என்ற சட்டவிதியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.

'தீப்பிடித்த சமயப்பள்ளியில் இரு கதவுகள் மட்டுமே உள்ளன. அதனால்தான் தீ ஏற்பட்டபோது வெளியேற முடியாலம் பலர் அதில் சிக்கிக் கொண்டுள்ளனர்'.

'பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமானவையாகும். தீச்சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றனா என்பது குறித்து அனைத்து பள்ளிகளும் ஆய்வு நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக கோலாலம்பூர் மருத்துவமனையில் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தபோது துன் டாக்டர் மகாதீர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
நேற்று அதிகாலை ஜாலான் கிராமாட்டில் உள்ள சமயப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்த தீச் சம்பவத்தில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் மரணமடைந்தனர். படுகாயமடைந்த பலர் கோலாலம்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment