Saturday 9 September 2017

கேமரன் மலை விவகாரம்: தேமு தலைவரிடமே முடிவை ஒப்படைக்கிறோம்- மைபிபிபி


கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கான தீர்வு தேசிய முன்னணியின் தலைவர் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என  மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் நடுநிலையான, ஆக்கப்பூர்வமான முடிவை ஏதுவாக டத்தோஶ்ரீ நஜிப்பிடம் கட்சி முழுமையாக ஒப்படைத்துள்ளது.
தேமு தலைவரிடம் முடிவு ஒப்படைக்கப்பட்டாலும் வழக்கம்போல் சேவைகளை மேற்கொள்ளும் எனவும் கேமரன் மலை தொகுதியில் தேமு பங்காளி கட்சிகளுடனான ஒற்றுமை பேணப்படும் எனவும் அவர் கூறினார்.

இவ்விவகாரத்தில் தேமு தலைவர் ஒரு சிறந்த முடிவை எடுப்பார் என நான் உணர்கிறேன். இரு தரப்பு நடவடிக்கைகளையும் சேவைகளையும் ஆராய்ந்து இம்முடிவு எடுக்கப்படும் என நம்பிக்கை கொள்வதாக புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற தேமு உச்சமன்றக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிடவிருப்பதாக டான்ஶ்ரீ கேவியஸ் இதற்கு கூறி வந்துள்ளார்.

ஆயினும் அது மஇகாவின் தொகுதி. அங்கு மஇகா வேட்பாளர்களே போட்டியிட்டு வருவதால் 14ஆவது பொதுத் தேர்தலில் தேமு சார்பில் மஇகா வேட்பாளரே களமிறக்கப்படுவதோடு அத்தொகுதியை மஇகா தற்காக்கும்  என அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அண்மையில் அறிவித்தார்.

No comments:

Post a Comment