ஈப்போ-
ஐபிஎப் கட்சியின் நீண்டகால கோரிக்கையான செனட்டர் பதவியை அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் ஏற்கவுள்ளார் என்ற செய்தி மகிழ்ச்சியை தருவதோடு டத்தோ சம்பந்தனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முனைவர் கி.பா.வேலாயுதம் கூறினார்.
20ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணியின் வெற்றிக் கு பாடுபடும் ஐபிஎப் கட்சி, முன்னாள் தேசியத் தலைவர் அமரர் டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதனுக்கு பிறகு செனட்டர் பதவி கேள்விக்குறியானது.
பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்னர் தற்போது கிடைத்துள்ள 'செனட்டர்' பதவி, காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்டாலும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே.
'செனட்டர்' பதவியை ஏற்கவிருக்கும் டத்தோ சம்பந்தன், இக்கட்சி தொடங்கப்பட்ட நோக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்ய ஆக்ககரமான திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்.
அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதன் இக்கட்சியை தோற்றுவித்தார். அவரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் டத்தோ சம்பந்தன் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
மக்களின் மேம்பாட்டுக்கும் வாழ்வாதார சூழலுக்கும் எந்தவொரு செனட்டரும் முன்வைக்காத கோரிக்கைகளை எழுப்பி 'கர்ஜிக்கும் சிங்கமாக' டத்தோ சம்பந்தன் திகழ்ந்திட வேண்டும்.
அப்போதுதான் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் கண்டதற்கு ஓர் அர்த்தம் இருக்கும் என பெர்மாசிப் இயக்கத்தின் பேராக் மாநில பெர்மாசிப் தலைவருமான கி.பா.வேலாயுதம் கூறினார்.
No comments:
Post a Comment