Friday 15 September 2017

பினாங்கில் எண்ணிலடங்கா மேம்பாடே வெள்ளத்திற்கு காரணம் - மக்கள் அதிருப்தி

சுகுணா முனியாண்டி 
செபெராங் பிறை-
முன்பு இருந்த சூழல் தற்போது பினாங்கு மாநிலத்தில் இல்லை. முன்பெல்லம் இரு வாரங்களுக்கு அடைமழை பெய்தாலும் வராத வெள்ளம் தற்போது இரண்டே நாட்கள் பெய்த மழையினால் வெள்ளக்காடாகியிருக்கும் அவலம் மக்களிடையே அதிருப்தி நிலையை  ஏற்படுத்தியுள்ளது .

கடந்தாண்டு இதுபோன்று வெள்ளம் ஏற்பட்ட போது அதற்காண நிவார பணிகள் செய்யப்படும் என பினாங்கு மாநில அரசு அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லையா……அல்லது அந்த அறிவிப்பு வெறும்  கண்துடைப்பு தானா என வெள்ளத்தால் \பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பினாங்கில் ஒவ்வோர் ஆண்டும் மேம்பாடு கண்டு வருகின்றது,ஆனால் மக்கள் இது போன்ற இன்னலுகளுக்கு ஆளாக்கும் நிலை மாற்றப்படவில்லை என்பது பெரும் வேதனையாக இருப்பதாக மக்கள் குமுறுகின்றனர்.

வெள்ளம்.... இயற்கை பேரிடர்;  இதை எங்களால் மாற்றியமைக்க முடியாது என காரணம் காட்டும் பினாங்கு மாநில அரசு தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்ய போகின்றது? என கேள்வி எழுப்பியுள்ள மக்கள், தோட்டபுறங்களிலும் பள்ளத்தாக்கான இடங்களிலும் வாழும் நாங்கள் எங்கள் உடைமைகள் இழந்து குழந்தைகளோடு எங்கு போவோம்? எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரோடு வினவினர்.

No comments:

Post a Comment