ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதாக தொழிலதிபர் டத்தோ நடராஜா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கில் பல சேவைகளை செய்து வருகின்ற நிலையில் அச்சேவைக்கு ஓர் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இத்தேர்தலை குறி வைத்துள்ளேன்.
இங்கு தேர்தலில் களமிறங்குவதற்கு ஏதுவாக சுங்கை சிப்புட் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவை நாடியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இங்கு வேட்பாளராக களமிறங்கினால் மக்களுக்கான சேவைகள் அதிகமான முன்னெடுக்கப்படும் என டத்தோ நடராஜா சொன்னார்.
சுங்கை சிப்புட் மமச கட்சி தலைவர் தாஸ் அந்தோணிசாமியை சந்தித்த டத்தோ நடராஜா, தனக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என கூறினார்.
இதனிடையே, தேசிய முன்னணியில் தோழமைக் கட்சியாக உள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சி தேமு வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் களமிறங்கும் நிலையில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனின் முடிவை பொறுத்தது.
ஆதலால், டத்தோஶ்ரீ தனேந்திரனிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என தாஸ் குறிப்பிட்டார்.
டத்தோஶ்ரீ தனேந்திரன், தாஸ் அந்தோணிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவுக்கு தாம் கட்டுபடுவதாக டத்தோ நடராஜா மேலும் கூறினார்.
No comments:
Post a Comment