Monday 18 September 2017

திவால் நிலையில் 294,000 மலேசியர்கள்

கோலாலம்பூர்-
நாட்டில் 2 லட்சத்து 94 ஆயிரம் பேர் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் திவால் வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளனர் என திவால் இலாகா தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் புத்ரா தாஹா தெரிவித்தார்.

தனிக்கடன், கடனாக வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாமை, கடன் பட்டுவாடா அட்டை, வீட்டுக் கடன்கள், கடனுக்கு உத்தரவாத கையெழுத்து போட்டது ஆகியவற்றிம்ன் அடிப்படையில் இவர்கள் திவால் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் 8 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை பல்வேறு காரணங்களுக்கு திவாலாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 70 விழுக்காட்டினர் 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைபட்டவர்கள் என தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

தங்களுடைய கடன் பிரச்சனைகளைத் தொடர்ந்து நீடிக்காமல் தவிர்ப்பதற்குத் திவாலானவர்கள், தாங்களாகவே முன்வந்து திவால் இலாகா, கடன் ஆலோசனை மற்றும் கடன் நிர்வாகத் துறையுடன் கலந்துப் பேசவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

திவால் நிலையிலிருந்து நீங்கள் மீள்வதற்கு நாங்கள் உதவி செய்யத் தயராக இருக்கிறோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment