Monday 11 September 2017

9/11: கறுப்பு அத்தியாயத்தின் ரத்த சரித்திரம்

ஆக்கம்: கோ.பத்மஜோதி

ஒரு தீவிரவாதத்தின் வெறியாட்டம் 16 ஆண்டுகளைக் கடந்து இன்னமும் பலரது நினைவுகளில் நீங்கிடாத கறுப்பு அத்தியாயமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆம்... 9/11.... இந்த நாளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திடவும் முடியாது; அதன் சோகச் சுவடுகளை எளிதாக கடந்திடவும் முடியாது.
உலக வல்லரசு நாடான அமெரிக்கா மீது தீவிரவாதத் தாக்குதலை முன்னெடுத்த அல்- கய்டா தீவிரவாத அமைப்பு,  உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீது இரு விமானங்களை மோதி தள்ளியது.

உலகமே அதிர்ச்சியில் உறைந்த இந்த சம்பவத்தில்  இந்த கட்டடத்தில் இருந்த 2,900க்கும் மேற்பட்டோர்  உட்பட விமானப் பயணிகளும் விமானப் பணியாளர்களும் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இவ்விரு விமானங்களை மட்டுமல்லாது ஏனைய இரு விமானங்களை கடத்தி தற்கொலை தாக்குதலை நடத்தினர்.

தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட நான்கு விமானங்களின் விபரம்:

விமான எண் 11:- அமெரிக்க வான் போக்குவரத்துக் கழகம்
 11 விமானப் பணியாளர்கள், ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 76 பயணிகளுடன், அதிகாலை 7.59 மணிக்கு பாஸ்டனிலிருந்து கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 8.46 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கோபுரத்தைத் தகர்த்தனர்.

விமான எண் 175:- ஐக்கிய வான் போக்குவரத்துக் கழகம்
 9 விமானப் பணியாளர்கள்,  ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 51 பயணிகளுடன், காலை 8.14 மணிக்கு லோகன் விமான நிலையத்திலிருந்து லாஸ் பாஸ்டனிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 9.03 மணிக்கு, உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தை தகர்த்தனர்.
விமான எண் 77:- அமெரிக்க வான் போக்குவரத்துக் கழகம் 
 6 விமானப் பணியாளர்கள், ஐந்து கடத்தல்காரர்களைத் தவிர 53 பயணிகளுடன், காலை 8.20 மணிக்கு வொ்ஜினியாவிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 9.37 மணிக்கு, பென்டகன் மீது மோத வைத்தனர்.

விமான எண் 175:- ஐக்கிய வான் போக்குவரத்துக் கழகம்
7 விமானப் பணியாளர்கள், நான்கு கடத்தல்காரர்களைத் தவிர 33 பயணிகளுடன், காலை 8.42 மணிக்கு நீவர்க் விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 10.03 மணிக்கு, பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள ஷான்க்ஸின் நிலப்பகுதியின் மீது மோத வைத்தனர்.
தீவிரவாதத்தின் வீரியத்தை உலகுக்கு எடுத்துரைத்த இந்த கொடுஞ்செயலுக்கு பின் தீவிரவாதத்திற்கு எதிரான  போரை உலக நாடுகள் முன்னெடுத்தன. உலகமே அதிர்ச்சியில் உறைந்த இந்த தற்கொலை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின் லேடன், அமெரிக்காவின் பல ஆண்டு கால தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அமெரிக்க சீல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
16 ஆண்டுகளை கடந்த பின்னரும் இன்னமும் வரலாற்றில் மறக்கப்படாத சோகச் சுவடான  9/11 தாக்குதல், தீவிரவாதத் தாக்குதலின் கொடூர சின்னமாகவே இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.ஒரு கறுப்பு அத்தியாயத்தின் ரத்த சரித்திரமே 9/11 ஆகும்.

No comments:

Post a Comment