Sunday 10 September 2017

ரோஹிங்யா மக்கள் விவகாரத்தில் 'பொம்மையாக' இருக்காதீர்கள் - துணைப் பிரதமர் சாடல்

புத்ராஜெயா-
ரோஹின்யா மக்கள் மீது தொடுக்கப்படும் மனித அத்துமீறலை தடுத்த நிறுத்துங்கள்; அதை விடுத்து 'பொம்மையாக' இருக்காதீர்கள் என மியான்மார் தலைவரான ஆங் சான் சூகிக்கு துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கடுமையாக சாடியுள்ளார்.

ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான அனுபவத்தை கொண்டிருக்கும் ஆங் சான் சூகி, உலக அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றுள்ளார். இத்தகைய பெருமை வாய்ந்த தலைவர் இவ்விவகாரத்தில் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.

'ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என அன்று போராட்டம் நடத்தியவர், உலக அளவில் ஜனநாயகத்திற்கு பெயர் பெற்றவர், ரோஹிங்யா மக்கள் விவகாரத்தில் அமைதி காக்கக்கூடாது.

உலகதர நிலையிலான விருதை கொண்டுள்ள ஒரு தலைவர் தனது சொந்த நாட்டிலேயே அரங்கேற்றப்படும் கொடுமைகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகமே எதிர்பார்க்கிறது. ஆயினும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் 'பொம்மையை' போல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல என  இங்கு நடைபெற்ற மெர்டேக்கா ரைட்ஸ் 2017இன் அதிகாரப்பூர்வ நிறைவு விழாவில் உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment