Tuesday 19 September 2017

இபிஎப் பணம் அமெரிக்காவில் முதலீடு; மலேசியர்களுக்கே அதிக லாபம் - டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர்-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎப்) லாப ஈவு விகிதாச்சாரம் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என மஇகா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் டத்தோ சி.சிவராஜ் தெரிவித்தார்.

ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎப்) அமெரிக்காவின் பொருளாதாரத்தில் முதலீடு செய்துள்ளதால் அதன் அதிகமான லாப ஈவு  மலேசியர்களையே வந்தடையும்.

அண்மையில் அமெரிக்காவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், அமெரிக்காவின் பொருளாதாரத்தில் 3 முதல் 4 பில்லியன் அமெரிக்க டாலர்  வரை ஊழியர் சேமநிதி வாரியம் முதலீடு செய்யும் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அறிவித்தார்.

இது ஓர் ஆக்ககரமான முதலீட்டு திட்டம் என வர்ணித்த டத்தோ சிவராஜ், இத்தகைய முதலீட்டுத் திட்டத்தின் மூலம் இபிஎப்-இன் லாப ஈவு தொகை இன்னும் அதிகமாக வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

நாட்டின் பிரதமராக 2009ஆம் ஆண்டில் பதவியேற்ற டத்தோஶ்ரீ நஜிப், 5.65
விழுக்காடாக இருந்த லாப ஈவு தொகையை 2014ஆம் ஆண்டில் 6.75 விழுக்காடாக உயர்த்தினார்.

2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையில் 6 விழுக்காடு லாப ஈவு தொகை நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

இபிஎப் முதலீடு அதன் நிர்வாகத்திற்கு உட்பட்டது. பிரதமர் நஜிப் சுட்டி காட்டியுள்ளபடி, அமெரிக்காவில் இபிஎப் 6 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்து இதுவரை நல்ல வருமானத்தையே மலேசியாவுக்கு ஈட்டித் தந்துள்ளது.

லாபகரமான  முதலீட்டுத் திட்டங்களிலேயே மக்களின் பணம் முதலீடு செய்யப்படுகிறது. அதன் அதிகமான லாப ஈவு தொகையும் மக்களுக்கே வழங்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கைக் கூட்டணியினர்தான் இதற்கு எதிர்மறையான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என டத்தோ சிவராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment