Tuesday 12 September 2017

சேலை 'ஜாக்கெட்டில்' இந்து தெய்வ உருவங்கள்? சமூக வலைதளத்தில் எதிரொலிக்கும் கண்டனம்

புனிதா சுகுமாறன்

இந்து தெய்வ உருவங்களை இழிவுப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பங்கள் அரங்கேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது பெண்களின் சேலை 'ஜாக்கெட்டில்' தெய்வ உருவங்களை பதிவு செய்துள்ளதற்கு பல்வேறு கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

காலணி, மதுபான போத்தல் சின்னம், ஆட்டிறைச்சி  விளம்பரம் என அண்மைய காலமாக இந்து தெய்வ உருவங்களை இழிவுப்படுத்தும் செயல் இந்துக்களிடையே பெரும் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பெண்கள் அணியும் சேலை 'ஜாக்கெட்டில்' தெய்வ உருவங்களை பதித்து அணிந்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

இந்து சமயத்தை இந்துக்களே இழிவுப்படுத்தும் இத்தகையை நடவடிக்கையை பலர் கண்டித்துள்ளதுடன் சிலர் கிண்டல் கேலியும் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

கைகூப்பி வணங்கும் தெய்வ உருவங்களை ஆடையில் அணிந்து செல்வதற்கு அவை கண்காட்சி பொருட்கள் அல்ல என்பதை நமது சமயப் பெண்கள் உணர வேண்டும்.

No comments:

Post a Comment