Tuesday 12 September 2017

கெடா சுல்தான் நல்லுடக்கு மாமன்னர் இறுதி அஞ்சலி

அலோர் ஸ்டார்-
மரணமடைந்த கெடா சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸம் ஷாவின் நல்லுடக்கு நாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் வி இறுதி மரியாதை செலுத்தினார்.

அனாக் புக்கிட் அரண்மனையில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸம் ஷா நல்லுடல் வைக்கப்பட்டிருந்தது.
89 வயதான சுல்தான் முகமட் ஹலிம் முவாட்ஸம்  ஷா நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அனாக் புக்கிட் அரண்மனைக்கு வருகை புரிந்த மாமன்னர் சுல்தான் முகமட் வி அவரின் நல்லுடலுக்கு அஞ்சலில் செலுத்தினார்.

மேலும், அலுவல் பணி காரணமாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவரின் பிரதிநிதியாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கெடா மாநில ராஜா மூடா துங்கு சாலேஹூடின், கெடா அரச உறுப்பினர்கள், கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ  அஹ்மாட் பாஷா முகமட் ஹனிபா உட்பட பிற மாநில சுல்தான்களும்  மாநில மந்திரி பெசார்களும் இறுதி அஞ்சலில் செலுத்தினர்.

மேலும் முன்னாள் பிரதமர்களாக துன் டாக்டர் மகாதீர் முகமது, துன் அப்துல்லா அகமட் படாவி, அவரின் துணைவியார் துன் ஜீன் அப்துல்லா, தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன், சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோர் சுல்தான் அப்துல்  ஹலிம் முவாட்ஸம் ஷாவின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment