Thursday 31 May 2018

நாட்டின் கடனை அடைக்க சிறப்பு திட்டம் - துன் மகாதீர்கோலாலம்பூர்
நாட்டின் கடனை அடைக்க மலேசியர்கள் நிதியுதவி அளிக்கும் பொருட்டு சிறப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்தவிருப்பதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்

14 வது போது தேர்தலில் பக்காத்தான் ஹாராபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் 1எம்.டி.பி. முறைகேடு உட்பட பல திட்டங்களினால்    நாட்டின்  கடன் அதிகளவு பெருகியுள்ளது  என்று அவர் தெரிவித்தார்

நாட்டின் கடனை அடைக்கும் பொருட்டு மக்களிடமிருந்து நிதியுதவி பெறு  வகையில் 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்தை தொடங்கவிருப்பதாக பிரதமர் கூறினார்.

பக்காத்தான் ஹாராப்பானின் முக்கிய பொறுப்புகள் வகிக்கும் தரப்பினரகளிடமிருந்து பெறப்பட்ட நிதி அனைத்தும் நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள தேசப்பற்றை விவரிப்பதாகவும் அனைத்து தரப்பினருக்கும்  தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

எம்ஆர்டி 3 திட்டம் ரத்து; கல்வி அமைச்சின் கீழ் 'பெர்மாத்தா' - பிரதமர் மகாதீர் அறிவிப்பு


கோலாலம்பூர்-
கோலாலம்பூர்- சிங்கப்பூர் இடையிலான அதிவேக ரயில் சேவை (HSR) திட்டத்தை ரத்து செய்த ஒரு நாளிலேயே எம்ஆர்டி 3 ரத்து செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரதமர் துன் மகாதீர்.

இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் பேசிய துன் மகாதீர், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின்  துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின் தலைமையில் செயல்பட்ட 'பெர்மாத்தா' அமைப்பு இனி கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் என்றார்.

அதோடு இன்னும் பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

* நாட்டின் கடனை அடைக்க மலேசியர்களிடமிருந்து நிதி திரட்டும் வகையில் 'தாபோங் ஹராப்பான் மலேசியா' (Tabung Harapan Malaysia) சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

* 41 கிரே ட் பெற்றுள்ள அரசு ஊழியர்களுக்கு 400 வெள்ளி போனசும் அத்ற்கு குறைவாக உள்ளவர்களுக்கு 200 வெள்ளி வழங்கப்படும. இது ஜூன் 6ஆம் தேதி வழங்கப்படும்.

 * வரும் செப்டர்ம்பர் மாதல் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அகற்றப்பட்டு அதற்கு பதிலாக விற்பனை, சேவை வரி செம்படம்பர் மாதல் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

* ரோன் 95 பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதோடு  ரோன் 97 பெட்ரோல் விலை சந்தை விலையை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

* நோன்புப் பெருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்னதாக அனைத்து நெடுஞ்சாலைகளில் 50% கழிவு வழங்கப்படும்.

* பெருநாள் காலங்களில் விலை கட்டுப்பாட்டு திட்டத்தை அமல்படுத்த விவசாய ஆலோசனை மன்றம் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

அந்நிய நாட்டவரிடம் 'கைநீட்டும்' அதிகாரியின் அத்துமீறல் -வைரலாகும் காணொளி

கோலாலம்பூர்-

அந்நிய நாட்டவர் ஒருவரை கை நீட்டி அடிக்கும் குடிநுழைவுத் துறை அதிகாரியின் அத்துமீறிய செயல் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஜோகூர்பாருவில் உள்ள குடிநுழைவுத் துறை  அலுவலகத்தில் அந்நிய நாட்டவர் கைரேகை பதிவு செய்யப்படும் நடவடிக்கையின்போது சம்பந்தப்பட்ட அதிகாரி அவரை தலையில் 'அடித்ததோடு' மிகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது மலேசிய குடிநுழைவுத் துறை இலாகா கடுமையான நடவடிக்கை எடுக்கும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

பொது மக்களுக்கு சேவை வழங்குவோர் அந்த இலாகாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கையில், இச்சம்பவத்தை கடுமையாக கருதுவதாகவும் சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சகதி நீரில் தட்டுகளை கழுவுவதா? பங்சார் உணவகத்தை மூடியது டிபிகேஎல்


கோலாலம்பூர்-
சகதி நீரில் உணவு தட்டுகளை கழுவும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பங்சாரில் செயல்பட்டு வந்த ராஜ்'ஸ் உணவகத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)மூடியுள்ளது.

சுகாதார பாதுகாப்பை காரணம் காட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் சுகாதார பிரிவின் துணை இயக்குனர் சந்திரகாந்த் பட்டேல் தெரிவித்தார்.

சமையல் அறையில் முறையான கழுவும் வசதியை கொண்டிராதது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அவர், இன்றுக் காலை சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்ற அதிகாரிகள் அதனை மூடினர்.

மறு அறிக்கை வெளியிடப்படும் வரை அந்த உணவகம் மூடப்பட்டிருக்கும் என அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட உணவக ஊழியர்கள்  தேங்கி கிடக்கும் சகதி நீரில் உணவு தட்டுகளை கழுவும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
இச்சம்பவம் தற்போது நடந்தது எனவும் இக்காணொளியில் இடம்பெற்றுள்ள ஊழியர்கள் புதியவர்கள் என்பதால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் உணவகம் இதற்கு முன் மாநகர் மன்றத்தின் சுகாதார சான்றிதழை பெற்றுள்ளது என அதன் உரிமையாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

'செடிக்' மானியம் நிறுத்தம்; பிரதமரே தலையிடுங்கள் - ஆசிரியர்கள் வேண்டுகோள்


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
'செடிக்' அமைப்பு வழங்கி வந்த அலவன்ஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் எங்களது வாழ்விலும் கல்வியிலும் ஒளியேற்றுமாறு பாலர் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் பிரதமர் துன் மகாதீரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது பிரதமர் துறை இலாகாவின் கீழ் செயல்பட்டு வந்த 'செடிக்' அமைப்பு மலேசிய பாலர் பள்ளி இயக்கத்திற்கு மானியங்களை வழங்கி வந்தது.

2016, 2017ஆம் ஆண்டுகளில் மானியம் முறையாக வழங்கப்பட்டதால் 438 ஆசிரியர்கள், துணை ஆசிரியர்களுக்கான அலவன்ஸ் எவ்வித தடையுமின்றி வழங்கப்பட்டது.

ஆனால் 2018ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 7,031,316 வெள்ளியை 'செடிக்' அமைப்பே நேரடியாக வழங்குவதாக உறுதியளித்த நிலையில், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத அலவன்ஸ் தொகை காலதாமதமாக வழங்கப்பட்டது எனவும் ஏப்ரல் மாத அலவன்ஸ் இன்னும் வழங்கப்படாத சூழலில் மே மாத அலவன்ஸ் கேள்விக்குறியாக உள்ளது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது மனவேதனை அண்மையில் செய்தியாளர் கூட்டத்தில் வெளிபடுத்தினர்.

இந்நிலையில் எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அலவன்ஸ் தொகை  வழங்கப்படுவதோடு அது தொடரப்பட வேண்டும் எனவும் 205 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 7,000 மாணவர்களின் கல்வி போதனையும் பாதிக்கப்படக்கூடாது என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களின் புதிய நம்பிக்கையில் ஆட்சியமைத்துள்ள 'நம்பிக்கைக் கூட்டணி' அரசு ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் எனவும் பிரதமர் துன் மகாதீர் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆசிரியர்களும் மாணவர்களும் கேட்டுக் கொண்டனர்.

Wednesday 30 May 2018

சொத்தா? கட்சி தேர்தலா?; ம இகாவில் வெடித்தது 'பூகம்பம்'

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

சொத்து விவரங்களா? கட்சி தேர்தலா?  என்ற இரு வேறு கேள்விகளோடு மஇகா மத்திய செயலவைக் கூட்டம் காரசாரமாக அரங்கேறியுள்ளது.

கட்சியின் சொத்து விவரங்கள் குறித்து தவறான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்து வருவதால் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் இதனால் கட்சி உறுப்பினர்களும் முழுமையான சொத்து விவரங்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் கட்சி தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குரலெழுப்பியுள்ளார்.

இதன்போது உடனே பேசிய கட்சி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம்,  இவ்விவகாரத்தை பேசி நீங்கள் ஹீரோவாக வேண்டாம். இப்போது கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதில் கவனம் செலுத்துவோம் என குரலை உயர்த்தியுள்ளதாக தெரியப்படுகிறது.

கட்சித் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பூதாகரமான சூழல் மஇகாவை அடுத்தக்கட்டத்திற்கு எவ்வாறு கொண்டுச் செல்லப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலர்பள்ளி ஆசிரியர்கள் அலவன்ஸ் தொடர்பில் அமைச்சர் குலசேகரனை சந்திக்கிறேன் - டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன்


கோலாலம்பூர்-
மலேசிய பாலர்பள்ளி இயக்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய மானியம் தொடர்பில் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என 'செடிக்' இலாகாவின் இயக்குனர் பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வியக்கத்திற்கு 'செடிக்' மூலம் 2016, 2017ஆம் ஆண்டு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான மானியமாக 70 லட்சத்து 31 ஆயிரத்து 316 வெள்ளி (வெ.7,031,316.00) ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் வழி 438 ஆசிரியர்களுக்கு அலவன்ஸ் வழங்கப்பட்ட நிலையில் இப்போது ஆட்சி மாற்றத்தினால் ஆசியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களின் அலவன்ஸ் தொகை காலதாமதமாக செலுத்தப்பட்ட நிலையில் ஏப்ரல், மே மாத அலவன்ஸ் எப்போது வழங்கப்படும்? என ஆசிரியர்கள் ஏக்கத்தில் தவிக்கின்றனர்.

இது குறித்து டத்தோ இராஜேந்திரனை 'பாரதம்' இணைய ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அலவன்ஸ் தொகை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால,'செடிக்' மானியம் ஒதுக்கிய நிதி தொடர்பில் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுடன் நாளை (30ஆம் தேதி) நேரில் சந்திக்கவிருப்பதாகவும் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவிருப்பதாகவும் டத்தோ இராஜேந்திரன் தெரிவித்தார்.

'செடிக்' அலவன்ஸ் நிறுத்தம்; எங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்குமா?பெட்டாலிங் ஜெயா-
கால தாமதமாக வழங்கப்பட்ட அலவன்ஸ் தொகையால் பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ள நிலையில் இன்னும் 2 மாதங்களுக்கான அலவன்ஸ் தொகை கிடைக்கப்பெறுமா? என்ற கேள்விக்குறியோடு எங்களது நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என பாலர்பள்ளியில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த 'செடிக்' அமைப்பின் மானியத்தோடு அலவன்ஸ் பெற்று குடும்ப, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தோம்.

வீடியோ இணைப்பு:

ஆனால் தற்போது நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்தினால்  எங்களது அலவன்ஸ் கேள்விகுறியாகியுள்ள நிலையில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளோம் என பாலர் பள்ளி ஆசிரியர்களான பரமேஸ்வரி, ரேவதி, அமுதா, பாலர் பள்ளி இயக்குனர் ர.கணேசன், இயக்கத்தின் செயலைவை உறுப்பினர் பிரான்சிஸ் ஆகியோர் தங்களது வேதனையை வெளிபடுத்தினர்.


கல்வி போதனையின் வழி மாணவர்களுக்கு திறம்பட கல்வியை போதிக்க முனைகின்ற எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அலவன்ஸ் தொகை நிறுத்தப்பட்டதால் குடும்பத்தின் தேவைகளுக்கும் சிறார்களின் உணவு, பயிற்சி புத்தகங்களுக்கு செலவிடும் நடவடிக்கை கேள்விக்குறியாகிறது.

வீடியோ இணைப்பு:

எங்களின் விவகாரத்தை அரசாங்கம் தீர ஆராய வேண்டும் எனவும் நிலுவையில் உள்ள பணம் ஆகியவை வழங்கப்படுவதற்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Will the Pre schools receive the allocated funds by SEDIC? - 438 teacher's life at risk


    Pre schools which were operating through Socio-economic Development of Indian Community or best known as (SEDIC), are stumped as they stopped receiving the funds that granted for them due to uncertain reasons. In accordance to that,  438 teachers, assistant teachers and almost 7000 students future has become question mark. Dato Batumalai Ramasamy, President of Pertubuhan Prasekolah Malaysia claimed that they are going through tough time because the situation is getting worst day by day. This issue affects the students academic progress. 

     The 5 ngo's which has been operating since 2015, played a major role in 7000 underprivileged students life where the students has been offered an opportunity to get the education equally as other children. The preschools were receiving granted funds accordingly for the past two years. As per Instructions received from Prime Minister Depatment on 2018, the NGOs came out with a statement stating that they will operate the funds themselves and pay the salaries, EPF and SOCSO directly from January 2018 onwards. 

     Unfortunately, the allowance for the months of January and February  were not received accordingly by the teachers where they received it two months later from the scheduled date. They received their allowances for the month of January on March and February month's allowance on April respectively. They yet to receive their allowances for the months of April and May till to date. During the press meet held recently, they expressed their disappointment as this issue distracts the teaching and learning process.


     The 5 NGOs which were funded by SEDIC through PPM are Persatuan Guru Tadika Zon Utara Semanjung Malaysia, Child Information, Learning And Development Centre, Pertubuhan Pusat Pembangunan, Malaysia Hindu Sangam Yayasan Atmah, and The Divine Life Society Senawang which were successfully operating 205 preschools nationwide.

   It is known that he NGOs has been funded with RM 9,694,200.00 for the year of 2016 and RM 5,149,000.00 for 2017 whereas RM 7,031,316 has been allocated for this year. 

     The teachers faced multiple challenges in running their family without any source of income due to the delay in receiving their salaries. The teachers EPF and SOCSO are still pending since January 2018 which was promised to be released to the respective NGOs. Not only that, the student's insurance are also still pending which means the teachers are required to spend more time looking after the children's safety.

        Among those who attended in the press meet which was organized recently are Dr R.Rupa Saminathan, Deputy President, secretary of Pertubuhan Prasekolah Malaysia, Surya, committee members and some of the pre school teachers.

      With the form of new federal government which was formed after the attack of political Tsunami on 9th May, they strongly believe that the funds allocated by SEDIC will be released to the respective NGOs as soon as possible. The decision which will be made by new federal government towards this issue will decide the 430 teachers and 6 350 students future. Will they get a solution?

தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?; தேமுவின் தவறுகள் இனி தொடராது- சிவநேசன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தகுதி வாய்ந்தவர்களுக்கு  உரிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படாத அவலம் தொடர்கதையாகின்ற சூழலில் அதனால் வேலை வாய்ப்பில்லாமல் பாதிக்கப்படும் இளைஞர்களின் வாழ்வாதாரம் சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதை போல் பொதுச் சேவை துறைகளில் சில நேரங்களில் தகுதி வாய்ந்தவர்கள் புறக்கணிக்கப்படும் அவலம் நீண்டு கொண்டிருக்கிறது.

25 வயதான எம்.தேவேந்திரா  பெட்ரோனாஸ் உபகாரச் சம்பளத்தில் உயர்கல்வியை சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சிறந்த மாணவராக இருந்தாலும் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதில் இனம், மத வேறுபாடு காட்டப்படக்கூடாது. அனைவரும் மலேசியர் என்ற கோட்பாட்டின் கீழ் தகுதியுடைவர்கள் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது மிக அவசியமானதாகும்.

தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதை மனிதவள அமைச்சும் மாநில அளவிலான மனிதவளப் பிரிவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த தேமு ஆட்சியின் போது நிகழ்ந்த இந்த தவறுகளை சரி செய்ய தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என கூறியசிவநேசன், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் இதுபோன்ற  5 புகார்களை பெற்றுள்ளதாக  கூறினார்.

தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கபடுவது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் நீடிக்காது எனவும் மாநில பொதுச் சேவை இலாகாவின் வாயிலாக தேவேந்திராவுக்கு வேலை உறுதி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

Tuesday 29 May 2018

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரிக்கு சிவநேசன் உதவிக்கரம் நீட்டினார்


புனிதா சுகுமாறன்

ஈப்போ:
பக்கவாத நோயோடு 2 பிள்ளைகளுடன் மிகவும்  வறுமையான சூழலில் வாழும்  தனித்து வாழும் தாயாரான திருமதி ஆர்.முனீஸ்வரிக்கு (32) பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் உதவிக்கரம் நீட்டினார்.

கணவரால் கைவிடப்பட்ட நிலையில் பாதுகாப்பற்ற ஃபர்ஸ்ட் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில்  வாழ்ந்து வருவதாகவும் 3 மாத வாடகை பணம் செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் சமூகநல உதவித் தொகை வெ.200 மட்டுமே கிடைத்து வருவதாகவும் திருமதி முனீஸ்வரி கண்ணீர் மல்கக் கூறினார்.

திருமதி முனீஸ்வரியின் பிரச்சினைகளை கேட்டறிந்த சிவநேசன், அவரின் தற்போதைய நிலைமையை சரி செய்ய அம்மாதுவுக்கு மாநகராட்சி அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவதாகவும்  தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட 'செடிக்' மானியம் கிடைக்கப்பெறுமா? ஏக்கத்தில் 438 ஆசிரியர்கள்


பெட்டாலிங் ஜெயா-
மலேசிய பாலர்பள்ளி இயக்கத்திற்கு வழங்கி வந்த 'செடிக்' நிறுத்தப்பட்டுள்ளதால் கடந்த இரு மாதங்களாக எவ்வித அலவன்ஸும் இல்லாமல்  438 ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் 6,350 மாணவர்களின் கல்வியும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அதன் தலைவர் டத்தோ பத்துமலை ராமசாமி குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 2016, 2017இல் மானியம் வழங்கி வந்த 'செடிக்' இவ்வாண்டு பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கும் துணை ஆசிரியர்களுக்கும் நேரடியாக நாங்களே அலவன்ஸ் வழங்குகிறோம் என கூறினர்.

ஆனால் ஜனவரி மாத அலவன்ஸ் கடந்த மார்ச் மாதமும் பிப்ரவரி,மார்ச்  மாத அலவன்ஸ் முறையே ஏப்ரல், மே மாதங்களில் செலுத்தப்ப்பட்டன. ஆனால் ஏப்ரம், மே மாதத்திற்கான அலவன்ஸ் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ள சூழலில் வழங்கப்பட வேண்டிய அலவன்ஸ் தொகை கிடைக்காததால் ஆசிரியர்கள் பெரும் இன்னலை எதிர்நோக்கி வருகின்றனர் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

Persatuan Guru Tadika Zon Utara Semanjung Malaysia, Child Information, Learning And Development Centre, Pertubuhan Pusat Pembangunan, Malaysia Hindu Sangam Yayasan Atmah, The Divine Life Society Senawang ஆகிய ஐந்து இயக்கங்களின் கூட்டமைப்பில் செயல்படும் மலேசிய பாலர்பள்ளி இயக்கத்தின் கீழ் 205 சமூக பாலர்பள்ளிகள் செயல்படுவதோடு 438 ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் 7,000 மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் போதனையை பயிற்றுவித்து வருகின்றனர்.இவ்வியக்கத்திற்கு 2016ஆம் ஆண்டு வெ.9,694,200.00, 2017ஆம் ஆண்டு 5,149,000.00 வழங்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு வெ.7,031,316.00 ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த தொகை எங்களுக்கு நேரடியாக கிடைக்கவில்லை.

காலதாமதமாக கிடைக்கப்பெற்ற அலவன்ஸ் தொகையினால் ஆசிரியர்களும் குடும்ப, அத்தியாவசிய தேவைகளுக்கான பணத்தட்டுபாடு நிலவியதோடு இபிஎஃப், சொக்சோ தொகையும் செலுத்தப்படவில்லை. அதோடு, மாணவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய காப்புறுதி பணமும் செலுத்தப்படாததால் தினந்தோறும் பாதுகாப்பு சார்ந்த சவால்களை ஆசியர்களும் மாணவர்களும் எதிர் கொண்டுள்ளனர்.

மே 9ஆம் தேதிக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியுள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் 6,350 மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் 'செடிக்' அமைப்பு ஒதுக்கிய மானியத்தை வழங்க வேண்டும் எனவும் இல்லையேல் ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் மாணவர்களின் கல்வி போதனா முறையும் பாதிக்கப்படும் என டத்தோ பத்துமலை தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.ரூபா சாமிநாதன், செயலாளர் சுதா, செயலவை உறுப்பினர் பிரான்சிஸ் உட்பட சில பாலர்பள்ளி ஆசியர்களும் கலந்து கொண்டனர்.

ஈப்போ இந்தியர் மேம்பாட்டு இயக்கம், ஈப்போ மக்கள் சமூகநல இயக்கம் ஏற்பாட்டில் 'அன்னையர் தின விழா'
புனிதா சுகுமாறன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஈப்போ இந்தியர் மேம்பாட்டு இயக்கம், ஈப்போ மக்கள் சமூகநல இயக்கம் ஆகியவை இனைந்து மிக விமரிசையாக அன்னையர் தின விழவை தாமன் ரிஷா பெர்மாயில் கொண்டாடியது.

இந்நிகழ்வில் ஈப்போ இந்தியர் மகளிர் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவி திருமதி லெட்சுமி தலைமையுரை ஆற்றுகையில், கடந்த 6ஆண்டு காலமாக அன்னையர் தினத்தை கொண்டிவருவதாகவும் நம்மை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் அவர்களின் தியாகத்திற்கும் இந்த தினம் சமர்பணம் ஆகும் என்றார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜிபி  ஃபூட் கோர்ட் (GP food Court) நாசி கண்டார் உரிமையாளர் திருமதி சுமதி, அன்னையரின் புகழை பேச தமக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்ததுடன் தாம் இன்று ஒரு கடையின் உரிமையாளராக வலம் வர தமது தாயார் ஒரு முக்கிய காரணம் என்று தமது உரையில் தெரிவித்தார்

மேலும் இந்நிகழ்வில் அன்னையர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு அனிச்சல் வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தேமுவிலிருந்து விலகி பக்காத்தான் கூட்டணிக்கு 'தாவவில்லை' - டான்ஶ்ரீ கேவியஸ்கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் தேசிய முன்னணியை விட்டு விலகவில்லை; மாறாக, நாங்கள் 'பந்தாட'ப்பட்டதால் தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவை மைபிபிபி எடுத்துள்ளது என
அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை பெறுவதற்காக பல இன்னல்களை அனுபவித்தோம். முதலில் சேவையாற்றுபவர்களுக்கே தொகுதிகள் என கூறினர். பின்னர் பாரம்பரியம் என சொல்லி கேமரன் மலையில் 4 ஆண்டுகளாக நான் ஆற்றிய சேவைக்கு மதிப்பளிக்காமல் மஇகாவுக்கு கொடுத்தனர்.

தேமு கூட்டணியில் பங்காளீ கட்சியாக இருந்தபோதிலும் 'பந்தாடப்பட்டோம்'. வெற்றி பெற முடியாத சிகாம்புட் தொகுதியை வழங்கி போட்டியிடுங்கள் என தேமு தலைமை வலியுறுத்தியது.

அதுமட்டுமல்லாது மைபிபிபி கட்சியின் நிர்வாகத்திற்குள்ளேயே தலையிட்டு கட்சிக்குள் பிரிவினையை உண்டாக்கினர். கட்சிக்குள் தலைமைத்துவப் போராட்டத்தை உண்டாக்கி விட்டனர்.இச்சூழலில் தேமு கூட்டணியில் நீடிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதால் தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஆட்சியை அமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மைபிபிபி 'தாவி' விடவில்லை.

ஒரு சுயேட்சை கட்சியாக இருந்து மக்களுக்கு தேவையான பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் அதே வேளையில் மக்கள் நலனுக்காக நடப்பு அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவாக இருப்போம் என டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.

இந்தியர்களின் முதலீட்டு, சொத்துடைமை திட்டங்களை ஆராய சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்படலாம்- குலசேகரன்


ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் முதலீடு செய்துள்ள திட்டங்கள் மட்டுமின்றி இந்தியர்களுக்கு சொந்தமாக வேண்டிய சொத்துடைகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படலாம் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன்ன் தெரிவித்தார்.

இந்தியர்கள் முதலீட்டுத் திட்டங்களான மைக்கா ஹோல்டிங்ஸ், பெஸ்தினோ, ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், டிஎன்பி, டெலிகோம் பங்குகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள சுயேட்சை விசாரணை மன்றம் அமைக்கப்படலாம்.

இங்குள்ள இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் மூலம் பல சொத்துடைமை பங்குகளும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இன்னும் சில திட்டங்களில் இந்தியர்களே தானாக முதலீடு செய்தனர்.

ஆனால் அவற்றில் பல திட்டங்கள் தோல்வி அடைந்த நிலையில் அதனால் இந்தியர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்தனர்.இன்னும் பல திட்டங்களில் முதலீட்டு பணம் கிடைக்காமலே உள்ளது.

இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் அதன் மூலம் அவற்றின் இன்றைய நிலை ஆராயப்படும் என குலசேகரன் சொன்னார்.

மகாத்மா காந்தி கலாசாலையின் சுற்றுச் சுவர் வேலியை சீரமைக்க வெ.10,000 மானியம்- சிவநேசன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மகாத்மா காந்தி கலாசாலையின் சுற்றுச்சுவர் வேலியை சீரமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இந்த சுற்றுச்சுவர் வேலியை சீரமைப்பதற்காக மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 10,000 வெள்ளி வழங்குவதாக கூறிய அவர், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இன்னும் ஆக்ககரமாக செயல்பட ஒத்துழைப்பு நல்கப்படும் என்றார்.
அண்மையில் மகாத்மா காந்தி கலாசாலைக்கு வருகை புரிந்த சிவநேசனிடம், பள்ளி நிலவரம் குறித்து தலைமையாசிரியை திருமதி சாந்தகுமாரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபி ஆகியோர் விவரித்தனர்.

மழை காலத்தின்போது பள்ளிக்கு அருகிலுள்ள ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து பள்ளிக்குள் புகுவதால் பெரும் சேதம் எதிர்கொள்வதாக குறிப்பிட்ட கோபி, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட இலாகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிவநேசன் கூறினார்.

Monday 28 May 2018

எதிர்க்கட்சியாய் இனி சிறந்த சேவையை வழங்குவோம்- தினாளன் ராஜகோபாலு


புனிதா சுகுமாறன்
படங்கள்: ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்து விட்ட தேசிய முன்னணியுடன் கைகோர்த்து இனி எதிர்க்கட்சியாய் திறம்பட செயலாற்றுவோம் என மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் தினாளன் ராஜகோபாலு தெரிவித்தார்.

முன்பு ஆளும் கட்சியாய் இருந்த நாம் செய்யத் தவறிய சில விஷயங்களின் பின் விளைவுகளாலேயே இன்று மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளோம். அந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இனி எதிர்க்கட்சியாய் திறம்பட செயலாற்ற நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

முன்பு எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் செய்த வேலையை நாம் இப்போது செய்தாக வேண்டும்.  நம்மை நாடி வரும் மக்களின் பிரச்சினைகளுக்கு காது கொடுத்து கேட்டு அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும்.

தோல்வியை கண்டு துவண்டு விடாமல் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு சிறந்த எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கு சேவை வழங்கும் அதே வேளையில் மஇகாவை மீண்டும் புதிய கட்டமைப்புடன் ஏற்றம் பெறச் செய்ய வேண்டும் என நேற்று இங்கு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவினருடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தினாளன் ராஜகோபாலு இவ்வாறு கூறினார்.

பத்துமலை திருத்தலத் தலைவர் பதவியை டான்ஶ்ரீ நடராஜா ராஜினாமா செய்ய வேண்டும்- அருண் துரைசாமி


ரா.தங்கமணி
படங்கள்: வி.மோகன்ராஜ்

பத்துமலை திருத்தலத்தில் காணப்படும் முறைகேடுகள் நிவர்த்தி செய்யப்பட அதன் நிர்வாகம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுவதோடு கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ டத்தோ ஆர்.நடராஜா ராஜினாமா செய்ய வேண்டும் என ஆகமம் அணியின் ஒருங்கிணைப்பாளர் அருண் துரைசாமி வலியுறுத்தினார்.

பத்துமலை திருத்தல நிர்வாகம் ஒரு கட்டுப்பாட்டிக்குள் இயங்கிக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர். பொதுவில் மக்களுக்காக செயல்பட வேண்டிய ஆலய நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவது பொதுமக்களில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பத்துமலை திருத்தலத்தின் நிர்வாகம் இன்னமும் ஆர்.ஓ.எஸ். எனப்படும் தேசிய சங்கங்களின் பதவிலாகாவில் பதிவு செய்யப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதுவே ஆலய நிர்வாகம்   ஒரு வாரியத்தின் கீழ் செயல்படுவதாக கூறப்படுவது ஏற்புடையதாகாது.

மேலும் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பல தெய்வ சன்னிதிகள் அமைந்துள்ள நிலம் இன்னமும் ஆலயத்தின் பெயரில் பதிவு செய்யப்படாமல் அரசு நிலமாகவே உள்ளது.

ஆலயத்தை நாங்களே நிர்வகிப்போம் என கூறும் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்காததோடு ஒரு தனி சாம்ராஜியத்தையே நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் பங்களிப்பும் சமூகச் சேவைகளுக்கும் ஒரு தலமாக விளங்க வேண்டிய பத்துமலை நிர்வாகமும் அதன்  தலைவரும் அதன் பொறுப்பிலிருந்து விலகி நிற்பதால் வரும் ஜூன் 17ஆம் தேதிக்குள் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஆகமம் அணி ஏற்பாட்டில் இன்று பெட்டாலிங் ஜெயா, சிவிக் சென்டரில் நடைபெற்ற 'பத்துமலை உருமாற்றத்திற்கான மக்கள் மாநாடு' கலந்துரையாடலில் உரையாற்றியபோது அருண் துரைசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

பத்துமலை நிர்வாகத்தை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்- அமைச்சர் குலசேகரன்


ரா.தங்கமணி 
படங்கள்: வி.மோகன்ராஜ்

பெட்டாலிங் ஜெயா-
'பத்துமலையை உருமாற்றுவோம்' எனும்  இயக்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப பத்துமலை நிர்வாகம் மாற்றியமைக்கப்பட வேண்டியது காலத்தின்  கட்டாயமாகும். அதற்கேற்ப பக்காத்தான் ஹராப்பானின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்து அறப்பணி வாரியம் தோற்றுவிக்கப்பட்டு அதன் கீழ் ஆலயங்கள் ஒருங்கிணைப்படும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ளது போன்ற இந்து அறப்பணி வாரியத்தின் சட்டத்திட்டங்களை பின்பற்றி சில மாறுதல்களையும் மேம்பாடுகளையும் செய்து ஒவ்வொரு மாநிலத்திலும் இந்து அறப்பணி வாரியம் தோற்றுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

பத்துமலைத் திருத்தல நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதே 'பத்துமலை உருமாற்றம்' இயக்கம் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்து அறப்பணி வாரியம் தோற்றுவிக்கப்பட்டு நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களும் முறையாக நிர்வகிக்கப்படுவது உறுதி செய்யப்படும் நிலையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சில பொது இயக்கங்களும் இணைக்கப்பட்டு 'சிறப்பு கூட்டம்' நடத்தப்பட்டு அதன் சட்டத்திட்டங்கள் முறையாக வரையறுக்கப்படும் என இன்றுஆகமம் அணி ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா, சிவிக் சென்டரில் நடைபெற்ற 'பத்துமலை உருமாற்றத்திற்காக மக்கள் மாநாடு' கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குலசேகரன் இவ்வாறு கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில் நுழைய மஇகாவுக்கு தடை விதிக்கப்படாது - அ.சிவநேசன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, தமிழ்ப்பள்ளிகளில் மஇகாவினர் நுழைவதற்கு எவ்வித தடையும் விதிக்காது என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளே வென்ற பக்காத்தான் கூட்டணி உறுப்பினர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

சுங்காய் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கே அங்குள்ள பள்ளிகளில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மஇகா எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் நுழைவதற்கு எங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை போன்று அவர்களுக்கு விதிக்கப்படாது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர்கள் வழங்கும் சேவையை தடுக்க மாட்டோம். ஆனால் அங்கு அரசியல் செய்யப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதேபோன்று ஆலயங்களிலும் அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் வலியுறுத்தினார்.


தேமுவிலிருந்து விலகும் முடிவு ஏப். 17ஆம் தேதியே எடுக்கப்பட்டது

ரா.தங்கமணி
படங்கள்: வி.மோகன்ராஜ்

தேசிய முன்னணியின் கூட்டணியிலிருந்து  வெளியேறும் முடிவை ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியே எடுத்து விட்டேன். ஆனால் கட்சி உச்சமன்றக் கூட்டத்திற்கு கட்டுப்பட்டே அம்முடிவை அப்போது அறிவிக்கவில்லை என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இம்முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

ஆனால் இந்த முடிவு பொதுத்  தேர்தலில் பாதகமான விளைவை ஏற்படுத்தி விடும் என உச்சமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தேமுவில் இருந்து வெளியேறும் முடிவு அப்போது ஒத்தி வைக்கப்பட்டதாக டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

நம்பியவர்களே 'துரோகிகளாக' மாறி முதுகில் குத்தினர்- டான்ஸ்ரீ கேவியஸ் ஆதங்கம்


ரா.தங்கமணி
படங்கள்: வி.மோகன்ராஜ்

தனக்கும் கட்சிக்கும் உண்மையாக இருப்பார்கள் என நம்பி உயர் பதவிகளையும் விருதுகளையும் வழங்கியவர்களே இன்று "துரோகிகளாக" மாறி முதுகில் குத்தி விட்டனர் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் வலியுறுத்தினார்.

இன்று எனக்கு எதிராக திரும்பி நிற்கும் தரப்பினர் சிலருக்கு டத்தோஸ்ரீ, டத்தோ போன்ற விருதுகளை வழங்கியுள்ளதோடு இருவரை செனட்டராக்கி துணை அமைச்சராகவும் உயர் பதவியில் அமர வைத்தேன்.

எனக்கு பிறகு கட்சியை சிறப்பாக வழி நடத்துவார்கள் முழுமையாக நம்பினேன்.  ஆனால் உயர் பதவியும் அங்கீகாரமும்   வழங்கிய என் முதுகிலேயே குத்தி "துரோகிகளாக" மாறி விட்டனர் என மைபிபிபி கட்சியின் 65ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டான்ஸ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

மைபிபிபி-இன் அங்கீகரிக்கப்பட்ட தலைவன் நானே - டான்ஸ்ரீ கேவியஸ்

ரா.தங்கமணி
படங்கள்: வி.மோகன்ராஜ்

தேசிய சங்கங்களின் பதிவிலாகா அங்கீகரித்துள்ள தலைவன் நானே ஆவேன். எனது தலைமையிலான கட்சி அதிகாரப்பூர்வமான மைபிபிபி ஆகும் என அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம். கேவியஸ் கூறினார்.

ஜூன் 5ஆம் தேதிக்குள் கட்சி ஆண்டுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஆர்ஓஎஸ் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆண்டுக் கூட்டம் நடத்தப்படுகின்ற நிலையில் எனது தலைமையிலான கட்சியே அங்கீகரிக்கப்பட்டதாகும்.

'நாங்கள்தான் மைபிபிபி கட்சியினர்' என ஓர் அணியினர் சொல்லி கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் 'மைபிபிபி கட்சியை சீரழிக்க முயன்ற "துரோகிகள்" ஆவர் என இன்று காலை கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் 65ஆம் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் டான்ஸ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

Sunday 27 May 2018

11 முறை சுடப்பட்ட ஆடவர் காயங்களுடன் உயிர் தப்பினார்

புக்கிட் மெர்தாஜம்-
முகமூடி அணிந்த ஆடவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயது ஆடவர் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினார்.

கைத்தொலைபேசி விற்பனையாளரான தான் யீ சின், இன்று காலை தாமான் செந்தோசாவில் உள்ள உணவகத்தில் தனது நண்பருடன் உணவருந்தி விட்டு தனது காரில் ஜாலான் செந்தோசாவிலிருந்து ஜாலான் கூலிம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளை நிற காரில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் தான் யீயை நோக்கிச் சுட்டுள்ளார். 11 முறை சுடப்பட்ட நிலையில் மூன்று தோட்டாக்கள் மட்டுமே தானின் மீது பாய்ந்துள்ளன.

தோள் பட்டை, உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில்  காரின் இடதுபுறமாக வெளியேறி உயிரை காப்பாற்றி கொண்டார் தான்.

முகமூடி அணிந்த அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் சூடுபட்ட தான் பொதுமக்களின் உதவியோடு புக்கொட் மெர்தாஜம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என செபெராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நிக் ரோஸ் அஸான் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் செக்‌ஷன் 307 கொலை முயற்சி சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.

Friday 25 May 2018

தேமு தொடங்கிய நலத் திட்டங்கள் முடக்கப்படாது- பேரா மந்திரி பெசார்

ரா.தங்கமணி

ஈப்போ-
கடந்த கால ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளது என்றால் அதனை தொடர்வதில் பக்காத்தான் ஹராப்பானுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என மாநில மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமு தெரிவித்தார்.

கடந்த தேசிய முன்னணி  அரசாங்கம் மாநில மக்களுக்காக பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்த திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர் எனும்போது அதனை தவிர்க்க முடியாது.

மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை ஆளும் பக்காத்தான்  ஹராப்பான் கூட்டணி ஒருபோதும் தடுத்து விடாது. அந்த திட்டங்கள் சிறப்பானது எனும் நிலையில் அரசியல் பாகுபாடு காட்டி அத்திட்டத்தை முடக்கும் சாத்தியம் கிடையாது என்ற அவர், ஆனால் அது குறித்து தீர ஆராயப்படும் என்றார்.

நேற்று நடைபெற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

தேமு ஆட்சியின்போது நடத்தப்பட்ட 'லங்காவி கலந்துரையாடல்' நிகழ்ச்சி பக்காத்தான் ஆட்சியில் தொடரப்படுமா? என கேள்வி கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார்.

எம்ஏசிசி விசாரணைக்கு மீண்டும் வந்தார் நஜிப்

புத்ராஜெயா-
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு நிதி வழங்கப்பட்டது தொடர்பிலான விசாரணைக்க்காக  மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வந்தார்.

இரண்டாவது முறையாக இந்த விசாரணைக்காக டத்தோஶ்ரீ நஜிப் வந்தார்.
1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி நிறுவனத்திற்கு நிதி வழங்கப்பட்டது தொடர்பில் டத்தோஶ்ரீ நஜிப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த செவ்வாய்க்கிழமை எம்ஏசிசி விசாரணைக்கு வந்த நிலையில் இன்று மீண்டும் டத்தோஶ்ரீ நஜிப் விசாரணைக்கு வந்துள்ளார்.

Thursday 24 May 2018

நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது வெ.120 மில்லியன்?


கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டுள்ளதாக தி ஸ்டார் நாளிதழ் தகவல் வெயிட்டுள்ளது.

கடந்த மே மாதம்  21ஆம் தேதி முதல் இந்த பணத்தை எண்ணத் தொடங்கினர்.  சுமார் 30 பெட்டிகளிலிருந்த மொத்த பணத்தையும்  பேங்க் நெகாரா அதிகாரிகளின் உதவிகளுடன் போலீசார் எண்ணினர்.

அனைத்து பெட்டிகளிலிருந்தும் எண்ணப்பட்ட பணத்தின் மொத்த தொகை  120 மில்லியன்    ஆகும். விலைமதிப்புள்ள கைப்பை, கடிகாரம் உட்பட அயல் நாட்டு நோட்டுகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுக்கு அன்பளிப்புகள் வேண்டாம்; துன் சித்தி ஹஸ்மா வேண்டுகோள்


பெட்டாலிங் ஜெயா-
நாட்டின் 7ஆவது பிரதமராக பதவியேற்றிருக்கும் துன் டாக்டர் மகாதீருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், எனக்கும் என் கணவருக்கும் (மகாதீர்)  எந்தவோர் அன்பளிப்பும் பூங்கொத்தும் வழங்க வேண்டாம் என்று மகாதீரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா கேட்டுக் கொண்டார்.

எங்களுக்காக செலவழிக்கும் அந்த பணத்தை கொண்டு ஆதரவற்ற இல்லங்களிலுள்ள சிறார்களுக்கு ஏதேனும் உதவிகளை வழங்கலாம்.

தற்போது நடப்பில் உள்ள அரசாங்கம் இதுபோன்ற அன்பளிப்புகளை  ஏற்றுக் கொள்ளாது. அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்து, உணவுகள் போன்ற அன்பளிப்புகள் வழங்குவதை தவிர்ப்பதே பக்காத்தான் ஹராப்பானின் கொள்கையாகும்.

எங்களின் இந்த வேண்டுகோளை மக்கள் ஏற்று கொள்ளுமாறு துன் சித்தி ஹஸ்மா கேட்டு கொண்டார்.