Saturday, 16 September 2017

வெள்ளத்தில் மாண்ட பெண்மணியின் உடல் மீட்பு

- சுகுணா முனியாண்டி 
செபெராங் ஜெயா-
நேற்று தொடங்கி இடைவிடாது பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாண்ட பெண்மணியின் உடலை புக்கிட் ஜெம்புல் ஆற்றோரப் பகுதியில்  மீட்பு படையினர் மீட்டனர் .

தொழிற்சாலை ஊழியரான  அஃபிடா  யாயுணாஸ் (வயது 30) நேற்று வேலை முடிந்து தமது மோட்டார் சைக்கிளில்  வீட்டிற்கு பினாங்கு, பாயா தெருபோங் வழி பாதையை பயன்படுத்தியுள்ளார் .அங்கு ஏற்பட்டிருந்த கடுமையான வெள்ளத்தில் சிக்கிய அவர்,  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் .
20 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிக்கு பின்னர் வெள்ளத்தில் மாண்ட பெண்மணியின் உடல் இன்று காலை 7.45 மணியளவில் மீட்டப்பட்டுள்ளது .

பெண்மணியின் உடல் சவப் பரிசோதனைக்கு பினாங்கு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என மாநில தீயணைப்பு,  பாதுகாப்பு துறை அதிகாரி அஸ்மான் ஊசேன் தெரிவித்தார்

அப்பெண்மணி வெள்ளப் பெருக்கில் விழுந்ததை நேரில் கண்டதாகவும்  அப்போது காப்பாற்ற முயற்சித்தும் தம்மால் காப்பாற்ற இயலவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்ட வி.பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment