பினாங்கில் சுனாமி பேரலைகள் ஏற்படப்போவதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இந்த தகவலில் உண்மையில்லை என மலேசிய வானிலை மையம் மறுத்துள்ளது. அது ஒரு பொய்யான தகவல் என மலேசிய வானிலை ஆராய்சி மையத்தின் துணை இயக்குனர் டாக்டர் முகமது ரோசைடி சே அப்பாஸ் 'தி ஸ்டார்' இணையத்தளத்திடம் உறுதிப்படுத்தினார்.
காலை 11.00 மணி முதல் அதிகாலை 1.00 மணிவரை பினாங்கு மாநிலத்தை சுனாமி பேரலைகள் தாக்கலாம் என அத்தகவலில் பகிரப்பட்டு வருகிறது.
இதில் பத்து பிரிங்கி, தஞ்சோங் பூங்கா, தஞ்சோங் தொக்கோங், கர்னி டிரைவ் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்தோனேசியா, சுமத்ரா தீவை மையம் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலை பினாங்கு மாநிலத்தையும் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment