Friday, 1 June 2018

24 மணிநேரத்தில் வெ. 7 மில்லியன் நன்கொடை - லிம் குவான் எங்

புத்ராஜெயா-
நாட்டின் கடனை அடைக்க தொடங்கப்பட்ட 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்காக ஒரே நாளில் (24  மணி நேரம்)  வெ.7.07 மில்லியன் (70 லட்சம் வெள்ளி) வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

நேற்று தொடங்கப்பட்ட இந்த நிதி திட்டத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிவரை  7 மில்லியன் வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.

நாட்டின் கடனை அடைக்க 'தாபோங் ஹராப்பான் மலேசியா'வுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நாட்டின் கடன் 1 டிரில்லியன் வெள்ளி (ஒரு லட்சம் கோடி) உள்ளது என பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்தார்.

நாட்டின் கடன் சுமையை அடைக்க பல ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்த பிரதமர் மகாதீர், மலேசியர்களிடமிருந்து நிதி திரட்டும் வகையில் 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்தை நேற்று அறிவித்தார்.

No comments:

Post a comment