Wednesday 13 June 2018

கோகிலாவை மீண்டும் பணியில் அமர்த்துவதை பேங்க் நெகாரா உறுதி செய்ய வேண்டும்- அமைச்சர் குலசேகரன்

கோலாலம்பூர்-
ஜிஎஸ்டி-க்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒய்.கோகிலாவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பேங்க் நெகாராவை மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் வலியுறுத்தினார்.

2016ஆம் ஆன்டு தொழிலாளர் தினத்தில் நடத்தப்பட்ட ஜிஎஸ்டிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டதை காரணம் காட்டி தன்னை பணியிலிருந்து நீக்கியது நியாயமானது அல்ல; முறையான காரணங்கள் இன்று தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக' அவர் நேற்று பிரதமர் துறை இலாகாவில் மகஜர் சமர்பித்துள்ளார்.

இது குறித்து பேசியகுலசேகரன், நீதிமன்றத்திற்கு போகாமல் இவ்விவகாரத்தை பேங்க் நெகாரா முடிவுக்கு கொண்டு வர வேண்டும். முந்தைய அரசாங்கம் அமல்படுத்திய ஜிஎஸ்டி திட்டத்தை எதிர்த்ததற்காக அவர் (கோகிலா) பணீ நீக்கம் செய்யப்பட்டது வருத்தத்திற்குரிய நடவடிக்கையாகும் என குலசேகரன் கூறினார்.

12 ஆண்டுகளாக பேங்க் நெகாராவில் பணியாற்றிய கோகிலா, அப்பேரணியில் பேங்க் நெகாராவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்  வகையில் நடந்து கொண்டார் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என கூறியுள்ளார்.

அரசியல் நடவடிக்கையாக கோகிலாவின் பணி நீக்கம் அமைந்துள்ளது என்பதால் அதனை பேங்க் நெகாராவிடமே விட்டு விடுவோம், கோகிலாவுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைப்பதை பேங்க் நெகாரா உறுதி செய்ய வேண்டும் என குலசேகரன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment