Friday 1 June 2018

பிடிபிடிஎன்; கறுப்புப் பட்டியலிலிருந்து பெயர்கள் அகற்றப்படும் - கல்வி அமைச்சர்

புத்ராஜெயா-
பிடிபிடிஎன் கல்விக் கடனுதவி பெற்று குடிநுழைவுத் துறையினரால் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் பெயர்களை விடுவிக்கும் பணி ஜூன் மாத நடுவில் முழுமை அடையும் என கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வழங்கிய வாக்குறுதிக்கேற்ப கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் பெயர்களை விடுவிக்கும் பணி கடந்த மே 24 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும்.

ஜூன் மாத மத்தியில் இந்த பணி யாவும் தீர்க்கப்படும் என இன்று புத்ராஜெயாவில் 2017ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வை முடித்த மாணவர்களுக்கு பொது உயர்கல்வி கழகத்துக்கான நுழைவு கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார்.

ஆட்சியை கைப்பற்றினால் பிடிபிடிஎன் கடனுதவி பெற்றவர்களின் பெயர்கள் கறுப்புப் பட்டியலிருந்து அகற்றப்படும் எனவும் 4,000 வெள்ளிக்கும் குறைவான வருமானம் பெறுவோருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் பக்காத்தான் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தது.

No comments:

Post a Comment