Thursday 30 April 2020

ஆடு, புலி அல்ல; குள்ளநரிகளை வீழ்த்தியல் அரசியல் சாணக்கியர் டான்ஶ்ரீ கேவியஸ் #HBDTanSriKayveas

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அரசியலில் வீழ்ந்தவனை காட்டிலும் வீழ்த்தப்படுவனை சுற்றி நடக்கும் சதுரங்க ஆட்டம் என்பது எளிதில் அவிழ்க்கப்படாத முடிச்சாக நீடிக்கும். அத்தகையதொரு அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தன்னை சுற்றி நடந்த பல்வேறு துரோகச் செயல்களுக்கு மத்தியிலும் தன் பின்னால் அனிவகுத்த உறுப்பினர்களுக்கும் தனியொரு தலைவனாய் உயிர்த்தெழுந்தார் பிபிபி 
கட்சியின் தேசியத் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.

2013ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தனது ஆட்சி நிர்வாகத்தை நிலைபடுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது அன்றைய தேசிய முன்னணி அரசாங்கம், மக்கள் சேவை, ஆக்ககரமான திட்டங்களுக்கு மத்தியில் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள முற்பட்டார் அன்றைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்.

தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளாக திகழ்கின்ற அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான், மைபிபிபி உட்பட பல கட்சிகள் தாங்கள் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் சேவையை முன்னெடுக்க ஆயுத்தமாகின.

அதன் அடிப்படையில் பகாங் மாநிலத்திலுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடிவெடுத்து களத்தில் இறங்குகிறார் டான்ஶ்ரீ கேவியஸ்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தேர்ந்தெடுப்பதற்கு இரு காரணங்களே டான்ஶ்ரீ கேவியசுக்கு முக்கியமானதாக அமைந்தன

 1)  மஇகாவின் தேசியத் தலைவராகவும் கேமரன் மலை நாடாளுமன்றஉறுப்பினராக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுயேட்சை நாடாளுமன்றஉறுப்பினராக அறிவிக்கப்பட்ட பின்னர் அன்றைய மஇகாதலைமைத்துவம் அத்தொகுதியில் களப்பணி ஆற்ற தவறியது.. 


2)   பகாங் மாநிலத்தில் பிறந்த வளர்ந்ததினாலும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகம்மது (தேமு ஆட்சியில்) 2002இல் கேமரன் மலை தொகுதியை தனக்காக உருவாக்கிக் கொடுத்ததும் அதை அன்றைய மஇகாவின் முன்னாள் தலைவர் துன் ச.சாமிவேலு அபகரித்துக் கொண்டதும், தன் கையை விட்டுப் போன தொகுதியை தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற இறுமாப்புமே ஆகும்.

கேமரன் மலை தொகுதியின் மீது தீராத காதல் கொண்டதன் விளைவாக டான்ஶ்ரீ கேவியஸ் ஆற்றிய களப்பணி அளவிட முடியாதது ஆகும்.
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு இரு வருடங்களுக்கு முன்னரே தொடங்கிய மக்கள் சேவையில் அத்தொகுதியே தனக்கே உரியதாக்கப்படும் என எண்ணிக் கொண்டிருந்த டான்ஶ்ரீ கேவியசின் எண்ணத்தில் பேரிடியை இறக்கியது மஇகா.

தன் கட்சி பிரதிநிதி ஒருவரை அத்தொகுதியின் வேட்பாளராக களமிறக்க 
மஇகா எத்தனித்தபோது டான்ஶ்ரீ கேவியசுக்கும், மஇகாவுக்கும் இடையே பனிப்போர் மூண்டது. இந்த பனிப்போரின் உச்சக்கட்டமாக கேமரன் மலை தொகுதி மஇகாவுக்கே என தீர்மானித்த தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் அதிரடி முடிவால் உருகுலைந்த டான்ஶ்ரீ கேவியசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கட்சி தலைமைத்துவ ‘அன்பர்கள்’ நம்பிக்கை துரோகிகளாக உருவெடுக்க துணிந்த நாடகமும் ஒருசேர அரங்கேறியது.

கேமரன் மலை தொகுதி கைவிட்டுப் போன நிலையில் ‘கேவியஸ் இனி அவ்வளவுதான். அவர் பின்னால் இருப்பதை தேமுவுக்கு விசுவாசியாய் மாறுவதே நமக்கு சிறப்பு’ என்ற சுயநலப்போக்கு சட்டப் போராட்டம் நடத்தி பிபிபி கட்சியை மீட்டெடுத்து அதற்கொரு அங்கீகாரமும் செல்வாக்கும் பெற்றுத் தந்த டான்ஶ்ரீ கேவியசையே கட்சியை நீக்கும் படலமாக விரிந்தது.

கட்சியை விட்டு நீக்குவதை விட நானே விலகிக் கொள்கிறேன் என தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியும்  அதை ஏற்க மறுத்த துரோக அணியினர், டான்ஶ்ரீ கேவியசை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தனர்.

உனக்குள்ளே மிருகம் உறங்கிவிட நினைக்கும்; எழுந்து அது நடந்தால் எரிமலையே வெடிக்கும்’ என்ற பாடல் வரியை போல் தான் உருவாக்கிய கட்சியை தானே அவமதிக்க விரும்பவில்லை என்ற அவரின் அமைதியை பரிசோதிக்க நினைத்தவர்களுக்கு ‘புயல் காற்றாய்’ சுழன்று வீசினார்.

14ஆவது பொதுத் தேர்தலினால் போட்டியிடும் வாய்ப்பை இழந்து, பண மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியிருந்த போதிலும் ‘வீழ்ந்தாலும் மீண்டும் எழுவேன்’ என சொல்லி மீண்டும் சட்டப் போராட்டம் நடத்தி மைபிபிபி கட்சியை தன் வசமாக்கிக் கொண்டார்.
எந்து துரோகத்தில் வீழ்த்த நினைத்தார்களோ அந்த துரோகத்தையே தனது படிகற்களாக்கி  கட்சி உறுப்பினர்களின் பேராதரவோடு மீண்டும் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவராக உயர்ந்தார். மைபிபிபியையும் பிபிபி என உருமாற்றினார்.

அரசியலில் எனும் ஆடுகளத்தில் ஆடும் புலியும் மோதிக் கொள்ளும். இதில் சில நேரங்களில் குள்ளநரிகளும் எட்டிப் பார்க்கும். ஆட்டை வேட்டையாடுபவன் வேட்டையன். புலியை துரத்தியடிப்பவன் சத்ரியன். குள்ளநரிகளை வீழ்த்துபவனே சாணக்கியன். அவ்வகையில்  ஆடு (மஇகா), புலியை (தேமு) காட்டிலும் தன்னை சுற்றியிருந்த குள்ளநரிகளை (துரோக அணியினர்) வீழ்த்தியதில்தான் உங்களின் அரசியல் சாணக்கியத்தனம் விடிவெள்ளியாய் போற்றப்படுகிறது.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் டான்ஶ்ரீ கேவியசுக்கு ‘பாரதம்’ இணைய ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. #HBDTanSriKayveas

Wednesday 29 April 2020

பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்குமானால் எம்சிஓவை முடிவுக்குக் கொண்டு வருவதில் பயனில்லை

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்குமானால்  நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை (எம்சிஓ) மீட்டுக் கொள்வதில் எவ்வித பயனும் இல்லை என்று தற்காப்பு முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வரும் நிலையில் அதனை காரணம் காட்டி எம்சிஓ முடிவுக்கு கொண்னு வரப்படலாம்.

ஆனால் அதன் பின்னர் அந்த வைரசினால் பாதிக்கப்படுவோரின் , எண்ணிக்கை அதகரிக்கத் தொடங்கினால் மீண்டும் தொடக்கக்கட்ட நிலையிலான நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்ள வேண்டி வரும்.

மக்கள் தற்போது பொறுமை காக்க வேண்டும். எம்சிஓ நடைமுறைகளை பின்பற்றினாலே சுமூகமான நிலையில் அதனை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று அவர் சொன்னார்

மலேசிய தமிழ் இசைத்துறையின் புரட்சி் நாயகன் திலீப் வர்மன் #HBDDhilipVarman

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசிய தமிழ் இசைத்துறை வளர்ச்சி கண்டாலும் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லாமல் தென்னிந்திய இசைகளுக்கே மலேசிய இந்தியர்களை அடிமையாக்கி வைத்திருந்தது.

80ஆம்,90ஆம் ஆண்டு காலகட்டங்கள் யாவும் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இசை உலகை அரசாட்சி செய்ய மலேசிய இசை கலைஞர்களும் தங்களை இசையின் பரிணாம வளர்ச்சியில் தங்களை மெருகேற்றி கொண்டிருந்தனர்.

எலிகேட்ஸ், ஓஜி நண்பா, டார்க்கி உட்பட  பல கலைஞர்கள் தங்களை இசைத்துறையில் முத்திரை பதிக்க முயற்சி செய்ய தென்னிந்திய இசைக்கு நிகரில்லாமல் தனி ஒரு பாணியில் மலேசிய இசைத்துறை பயணித்துக் கொண்டிருந்தது.

அந்த தருணத்தில் தான் 'உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ' எனும் மெல்லிய குரலிசையில் மலேசியர்களின் காதுகளுக்கு தேனிசையாய் பாய்ந்தது ஒரு குரல்.

 மலர்களை வட்டமிடும் தேனீக்களை போல் வானொலி அலைவரிசையில் திரும்ப திரும்ப ஒலிக்கும் அந்த பாடலை  கேட்பதற்கே ஒரு ரசிகர் கூட்டம் உருவாக்கி கொண்டிருந்தது அந்த குரல் தான் பின்னாளில் இசை புரட்சியின் வித்து என்பதை உணராமலே.

ஆம்... அந்த தேனிசை குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் திலீப் வர்மன் ஏற்படுத்திய மாயை மலேசிய தமிழ் இசைத்துறையையே சுழற்றி போட்டது.

அதுவரை மேலை நாட்டு இசைத்துறைக்கு மட்டுமே அடிமையாகி இருந்த மலேசிய இந்தியர்கள் மெல்ல மெல்ல மெல்லிசை பாடலுக்கு தங்களை அடிமையாக்கிக் கொள்ள தயாராகினர்.

இசையமைப்பாளர் ஜெய்-இன் இசையில் திலீப் வர்மன் குரலில் ஒலித்த 'உயிரை தொலைத்தேன்' பாடலே இன்று மலேசிய இசைத்துறையில் நிகழ்ந்துள்ள அதிரடி மாற்றத்திற்கான ஆரம்பம் என்பதை மறுக்க முடியாது.

'கனவெல்லாம் நீதானே' எனும் பாடலுக்கு இசையமைத்து உயிர் கொடுத்த திலீப் வர்மனின் மற்றொரு படைப்பு 90ஸ் கிட்ஸ்களின் ஆல் டைம் பேவரைட் பாடல் ஆகும்.

தமிழக இசைக் கலைஞர்களான ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன், சங்கர் மகாதேவன் போன்ற இசை கலைஞர்களுக்கு மத்தியில் இசை நாயகனாய் உருவெடுத்தது திலீப் வர்மனின் குரலிசைக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் ஆகும்.

தனது காந்த குரலில் மூலம் இளைஞர்களை சென்றடைந்த பாடல்களின் இசைத்துறையில் நீங்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார் திலீப் வர்மன்.

மீண்டும் மீண்டும் ஓயாமல், என்னவளே என்னை மறந்தது ஏனோ என திலீப் வர்மன் செய்தது எல்லாம் இசை புரட்சியே.

100் பாடல்களுக்கும் மேல் பாடி  இசை வானில் வெற்றி கொடி நாட்டி, இசைத்துறையில் ஈடுபட நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு முகவரியாய் திகழும் திலீப் வர்மனின் மாயக் குரல் ஓய்வில்லாமல் என்றும் இசை புரட்சியை செய்திட வேண்டும்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர், பாடகர் திலீப் வர்மனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

 #HBDDhilipVarman

மக்கள் நலச் சேவையில் மிரள வைக்கும் கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடங்கி கிடக்கின்றனர்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் வருமானம் ஏதுமின்றி பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நடுத்தர வர்க்கத்தினர்தங்களுக்கு யாரேனும்  உதவ மாட்டார்களா? என ஏங்கி கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய மக்களுக்கு தனது சட்டமன்ற உறுப்பிர் மக்கள் சேவை மையத்தின் வழி உதவிக்கரம் நீட்டியுள்ளார் YB வீ.கணபதிராவ்.

மக்கள் சேவை மையத்தின் வழி ஆயிரக்கணக்கான மக்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார்.

தன்னோடு மட்டும் அந்த சேவை நின்றுவிடாமல் தன்னை சார்ந்துள்ள மாவட்ட மன்ற உறுப்பினர்கள்,  கிராமத் தலைவர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் ஆகியோரையும் களத்தில் இறக்கியுள்ளார்.

அதோடு, சமய விழாக்களை நடத்துவது மட்டும் ஆலயங்களின் திருப்பணி ஆகாது; இதுபோன்ற தருணங்களில் மக்களுக்கு சேவை செய்வதே மகேசனுக்கு செய்யும் தொண்டு என்பதை வலியுறுத்தி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆலயங்கள் தங்களது பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிட வேண்டும் எனும் நோக்கில் 'அட்சயப் பாத்திரம்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ஆலயங்களுக்கு மாநில அரசு வழங்கும் மானியத்தில் ஒரு பகுதியை இத்திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று சிந்தனையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு மட்டுமல்லாது மலாய்க்காரர்கள், சீனர்களுக்கும் உதவிப் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள கணபதிராவ, அவர்களது சமூகத் தலைவர்களின் வாயிலாக உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார்.

ஆலயங்கள் மட்டுமல்லாது பள்ளிவாசல், தேவாலயங்கள், சீன ஆலயங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

கோவிட்-19 வைரஸ் பரவல் ஏற்படுத்தியுள்ள இக்கட்டான சூழலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது எனும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலச் சேவையில் கணபதிராவ் மிரள வைக்கின்றார்.

Monday 27 April 2020

கோவிட்-19: உயிர்பலி 2 லட்சத்தை தொட்டது

வாஷிங்டன்-
உலகெங்கிலும் பரவி உயிர்சேசத்தை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை உலகளிவில் 203,990தொட்டுள்ளது.

சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.

இந்நோய் தாக்கத்தினால் அமெரிக்காவிலேயே அதிக உயிர்பலி ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 53,000 பேர் உயிரந்துள்ளர்.

கோவிட்-19: மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது- டாக்டர் நோர் ஹிஷாம்

போலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் அபாயம் நீங்கி பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களி்ல் வசிக்கும் மக்கள் தற்கால சூழலை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள தர நிர்ணய நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Friday 24 April 2020

எம்சிஓ- மே 12 வரை நீட்டிப்பு- பிரதமர்

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடமாட்ட கட்டுபாட்டு ஆணையை மே 12 ஆம் தேதி மலேசிய அரசு நீட்டித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கோவிட்-19 வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 26 லட்சம் மக்கள் பாதித்துள்ள நிலையில்  ஒரு லட்சத்து 85 ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர்.

மலேசியாவில் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 18ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தார்.

இன்று நேரலையின் மூலம் மக்களிடம் பேசிய அவர், வரும் 28ஆம் தேதியுடன் நிறைவு பெறும் மூன்றாம் கட்ட எம்சிஓ ஆணை 29ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு எம்சிஓ-வை நீட்டிக்கும் பரிந்ரதுரையை அமைச்சரவை அனுமதித்துள்ளது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19; அறிகுறிகள் ஏதுமில்லா 80% நோயாளிகள்

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 80 விழுக்காடு நோயாளிகளுக்கு இந்நோயின் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

வெளிநாடுகளை போல் அல்லாமல் சில நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாங்கள் கண்டறிந்தால் அவர்களை  மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

கோவிட்-19 நோயாளிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

1) அறிகுறிகள் ஏதும் இல்லை

2) லேசான அறிகுறிகளை கொண்டது

3) அழற்சியை கொண்டது. ஆனால் ஆக்ஸிஜன் உதவி தேவையில்லை

4) அழற்சியை கொண்டது. ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது

5) 'ஐசியு' பிரிவில் அனுமதித்து சிகிச்சை, சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது

இதுவே அந்த 5 வகையான நடைமுறையாகும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19- வறுமை குடும்பங்களுக்கு பெட்போர்ட் தோட்ட ஆலய நிர்வாகம் உதவி

கிள்ளான் -
கோவிட்-19 வைரஸ் தொற்றால் வறுமை சூழலில் வாழும் மக்களுக்கு சிலாங்கூர்  தஞ்சோங் சிப்பாட், பெட்போர்ட் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் உதவிப் பொருட்களை வழங்கி உதவினார்.

அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 70 குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் வருமானத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் வறுமையில் வாடி விடக்கூடாது எனும் நோக்கில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அறிமுகப்படுத்திய 'அட்சயப் பாத்திரம்' திட்டத்தின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி இல்லை- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா-
நாட்டின் தலைநகரில் வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி் இல்லை என்று முதன்மை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமலில் உள்ள இக்காலகட்டத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி் வழங்கப்படவில்லை. இதற்கு முன்னர் வெளியான தகவலில் குழப்பம் அடைய வேண்டாம்.

தலைநகரில் மட்டுமல்லாது பிற இடங்களில் வசிக்கும் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் இணையம் மூலமாகவும் போலீசிலும் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படும்.

சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்காக நடைமுறை செயல் திட்டம் வரையப்படும் என்ற அவர், அதன் அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்படுவதோடு அனுமதி வழங்கப்படும் நபர்கள் அதனை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

எம்சிஓ நீட்டிப்பா? - மக்களை நேரலையில் சந்திக்கிறார் பிரதமர்

புத்ராஜெயா-
கோவிட்-19;வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பதை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவிப்பார்.

இன்று இரவு 8.00மணியளவில் மக்களுடனான தொலைகாட்சி நேரலையில் பிரதமர் இம்முடிவை அறிவிக்கக்கூடும்.

உலக நாடுகளை உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மார்ச் 18ஆம் தேதி தொடங்கி நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் எம்சிஓ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 16 April 2020

கோவிட்-19: இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகும் சீனா

பெய்ஜிங்-
சீனாவின், வுஹான் மகாணத்தில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தற்போது 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி பல மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்நோயின் இரண்டாவது கோரத் தாண்டவத்திற்கு சீனா தயாராகியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த திணறிய சீனா, 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 3,000 பேர் இந்நோய் தொற்றுக்கு பலியாகினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனாவில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என சீனா அறிவித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 89 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று சீனா அறிவித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று முழுவதுமாக முறியடிக்கப்பட்டது என நிம்மதி பெருமூச்சு விட தொடங்கிய சீனா, தற்போது இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.


கோவிட் -19: பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதன்முறையாக சரிந்தது

புத்ராஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக மலேசியாவில் அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது முதன் முறையாக அவ்வெண்ணிக்கை குறைந்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருந்து வந்தது. நேற்று மட்டும் 189 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவ்வெண்னிக்கை 85ஆக குறைந்துள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்நோயால் பாதிக்கபப்பட்டிருந்தவர்கள் 85ஆக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்நோய் தொற்றால் ஒருவர் மரணமுற்றார் என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதுவரை இந்நோயால் 5,072 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 83 பேர் மரணமடைந்துள்ளனர். 2,647 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

எம்சிஓ ஜூன் வரை நீட்டிப்பா? இஸ்மாயில் சப்ரி விளக்கம்

புத்ராஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவது சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

மக்கள் பிடிவாதத்தன்மையுடன் நடந்துக் கொண்டால்  எம்சிஓ காலவரம்பு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ அப்தில் ஹமிட் படோர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, எம்சிஓ காலவரம்பு நீட்டிப்பு சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தே அரசாங்கம் முடிவெடுக்கும் என்று சொன்னார்.

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் ரத்து - கல்வி அமைச்சர்

புத்ராஜெயா-

கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான  யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் அவர்களின் கல்வி அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு ஆக்கப்பூர்வ திட்டங்கள் விகுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ரட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார்.

இம்முடிவு மாணவர்களின் கல்வி அடைவு நிலையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதோடு, இவ்வாண்டுக்கான எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகள் அடுத்தாண்டு முதலாம் காலாண்டிற்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

Friday 10 April 2020

MCO விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் முன்பு போல் இருக்க முடியாது

கோலாலம்பூர்-
மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் முந்தைய காலம் போன்று சுதந்திரமான முறையில் செயல்பட முடியாது என்று பாதுகாப்புத் துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதியுடன் மக்கள்  நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருகிறது. ஆயினும் அந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது.

உதாரணத்திற்கு, பொது கூட்டங்கள், பேரணி போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில் சில கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்படலாம் என்றார் அவர்.

இந்த புதிய கட்டுப்பாடுகளின் மூலம் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஒத்திவைக்கபடலாம். இது ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்ற அவர், மக்களின் நலனை காக்கும் பொருட்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றர் அவர்.

MCO நீட்டிப்பு: சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது

கோலாலம்பூர்-
தற்போது அமலில் உள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பு செய்வது சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது என்று பாதுகாப்பு துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? இல்லையா என்பது நாளை முடிவு செய்யப்படும்.

ஆயினும் இந்நடவடிக்கை நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது சுகாதார அமைச்சின் ஆலோனையை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் மக்களிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் மார்ச் 18ஆம் தேதி மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே, மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பதை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு மக்களின் நலன் கருதி பிரதமர் அறிவிக்கப்போகும் முடிவு என்ன? என்பதே மலேசியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

MCO கண்காணிப்பு: போலீசுடன் ஜேபிஜே இணைந்து செயலாற்றும்

கோலாலம்பூர்-
மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டை மீறும் நடவடிக்கையை குறைப்பதற்கு ஏதுவாக இனி போலீஸ் படையினருடன் இணைந்து சாலை பாதுகாப்பு இலாகாவினர் இணைந்து பணியாற்றுவர் என்று பாதுகாப்பு துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவ்வெண்ணிக்கை 300க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

கட்டுப்பாட்டு ஆணையை மீறும் தரப்பினரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ஜேபிஜே இலாகாவினரும் இனி சாலை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் அவர்.

மார்ச் 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட கட்டுப்பபாட்டு ஆணையை 95 விழுக்காட்டினர் மட்டுமே மதித்து வீட்டில் முடங்கியுள்ள நிலையில் ஏனைய 5 விழுக்காட்டினர் பல்வேறு காரணங்களைச் சொல்லி வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களிடேயே சமூக இடைவெளியை உருவாக்கும் நோக்கில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை  அமல்படுத்தப்பட்டது.

Saturday 4 April 2020

கோவிட்-19: உலக அளவில் 54 ஆயிரம் பேர் உயிரிழப்பு

கோவிட்-19 வைரஸ் காரணமாக உலக அளவில்1,030,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 54,229 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 220,003 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர். இது இன்றைய இரவு 7.45 மணி வரைக்குமான நிலவரம் ஆகும்.

மலேசியா
* கோவிட்-19 வைரஸ் தொற்றால் மலேசியாவில் மொத்தம் 3,333 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 53 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று வரை 50ஆக இருந்த இவ்வெண்ணிக்கை இன்று 3 பேர் உயிரிழந்ததால் 53ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 217 பேர் இந்நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா
* உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் 245,442 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6,098 பேர் மரணமடைந்த நிலையில் 10,411 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர்.

இத்தாலி
கோவிட்-19 வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நாடாக இத்தாலி திகழ்கிறது. அங்கு இதுவரை 115,242 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  13,915 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ள நிலையில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாகவும் இத்தாலி திகழ்கிறது. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடாக இத்தாலி திகழ்வதால் அங்கு மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூர்
* உலகில் சிறிய நாடாக கருதப்படும் சிங்கப்பூரில் இதுவரை 1,114 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

Friday 3 April 2020

கோவிட்-19: மிக தாமதமாக அனுமதிக்கப்பட்டதாலேயே இளைஞர்கள் மரணம்

புத்ராஜெயா-
கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மிக தாமதமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாலே அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தலைமை  இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.,
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 27, 34 வயதுடைய இளைஞர்கள் மூன்றாவது,நான்காவது கட்ட அபாய நிலையிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர்.

மூச்சு விடபெரும் சிரமத்தை எதிர்நோக்கிய அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மிக தாமதமாக வந்த காரணத்தினாலேயே அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19: மரண எண்ணிக்கை 50-ஐ தொட்டது

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ தொட்டது.
சீனா, ஹுவானின் இறைச்சின் சந்தையில் உருவான கோவிட்-19 வைரஸ் தொற்று இன்று 205 நாடுகளில் பரவி 47,000க்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளனர்.

மலேசியாவில் பரவியுள்ள இந்நோய் தொற்றின் காரணமாக இதுவரை 3,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Wednesday 1 April 2020

கோவிட்-19; பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பலியானவரகளின் எண்ணிக்கை 43ஐ எட்டியது.
நாட்டில் பரவியுள்ள வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,766ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 146 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வரை இந்த வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 37ஆக இருந்த நிலையில் இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில் அவ்வெண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 7 பேர் பதவியேற்பு

ஈப்போ-
பேராக் மாநிலத்தில் தேசிய கூட்டணி (பெரிக்காத்தான் நேஷனல்) ஆட்சியமைத்துள்ள நிலையில் 7 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் புதிதாக பதவி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
21 மாதங்கள் நீடித்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து தேசிய கூட்டணி அங்கு ஆட்சி அமைத்தது. அதன் மந்திரி பெசாராக  அஸுமு பைசால் பதவியேற்றுக் கொண்ட பின்னர் அம்னோ, பாஸ், பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பேராக் அம்னோ தலைவர் டத்தோ சரானி முகம்மட் (கோத்தா தம்பான்), டத்தோ டாக்டர் வான் நோராஸிகின் வான் நோர்டின் (கம்போங் காஜா), டத்தோ ஷாருல் ஸமான் யாஹ்யா (ருங்குப்),  பாஸ் கட்சியைச் சேர்ந்த  ரஸ்மான் ஸக்காரியா (குனோங் செமாங்கோல்), முகமட் அக்மால்  கமாருடின் (செலாமா), பெர்சத்து கட்சியைச் சேர்ந்த  டத்தோ நோலி அஸிலின் (துவாலாங் செக்கா), அப்துல் யூனுஸ் ஜமாரி (குவாலா குராவ்) ஆகியோரே பேராக் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.

தெங்கு கிளானா உட்பட பல சாலைகள் மூடப்படுகின்றன

கிள்ளான்-
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கிள்ளானிலுள்ள பல சாலைகள் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை மூடப்படவுள்ளன
ஜாலான் தெங்கு கிளானா உட்பட KM 3.5 Jalan Shapadu Lama, KM 3.7 Jalan Shapadu Lama - Rantau Panjang, Jambatan Raja Muda Nala (Jalan Tanjung Syawal), Jambatan Musaeddin (Jalan Batu Tiga Lama) ,  Jalan Paip/ Jalan Bukit Cherakah ஆகியவை மூடப்படவுள்ளன.

மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வேறு பாதைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூருல்ஹுடா முகமட் சாலே தெரிவித்தார்.