Friday 15 June 2018

மின்னல் எப்.எம். வானொலியோடு உலகக் கிண்ண காற்பந்து போட்டி



இவ்வாண்டு உலக கிண்ண காற்பந்து போட்டியைப் பற்றிய நிலவரங்களை மின்னல் எப்.எம் வானொலி கொண்டு வருகிறது.

காலை காதிர் வின்வின் போட்டியின் கேட்கப்படும் புதிர்க் கேள்விகளுக்கு முதலில் அழைத்து பதில் கூறும் நேயர்களுக்கு ரொக்கப்பணம் வழங்கப்படவுள்ளது.



மேலும், நட்சத்திர மேகம், விளையாட்டாரங்கத்தில் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரையில் உலகக் கிண்ண காற்பந்து குறித்த சிறப்பு துணுக்குகள், அணிகளின் விமர்சனங்கள், நேர்காணல்கள் புள்ளி பட்டியல் நிலவரங்களை மின்னல் வானொலி தனது நேயர்களுக்காக பிரத்தியேகமாக கொண்டு வருகின்றது.

இதற்கிடையில், ஃபிபா உலகக் கிண்ண காற்பந்து போட்டியை முன்னிட்டு சிறப்பு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஆர்.தி.எம் தொலைக்காட்சியின் RTM TV 1 அலைவரிசையின் வாயிலாக இம்முறை 27 போட்டிகளை நேரலையாகவும் 13 போட்டிகள் தாமதமாகவும் ஒளிபரப்படவுள்ளது.



இவ்வாண்டும் ரஸ்ஸியாவில் நடைபெறும் ஃபிபா உலக கிண்ண காற்பந்தாட்ட கொண்டாட்டத்தை உடனுக்குடன் வழங்கிறோம் என மின்னல் வானொலி செய்திப்பிரிவு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment