Wednesday 13 June 2018

சரவாக் தேமு கலைக்கப்பட்டது; புதிய கூட்டணி அமைத்தன 4 கட்சிகள்

கூச்சிங்-
சரவாக் தேசிய முன்னணியில் இடம்பெற்றிருந்த 4 கட்சிகளும் அதிலிருந்து வெளியேறி 'கபோங்கான் பார்ட்டி சரவாக்' (ஜிபிஎஸ்) புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

பிபிபி கட்சியின் தலைவரும் சரவாக் மாநில முதலமைச்சருமான டத்தோ பத்திங்கி அபாங் ஜொஹாரி துன் ஒபெங் கூறுகையில், இன்று (ஜுன் 12) நடைபெற்ற நான்கு கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் இம்முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

சரவாக் மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி), பார்ட்டி பெர்சத்துராக்யாட் சரவாக் (எஸ்யூபிபி), பார்ட்டி ராக்யாட் சரவாக் (பிஆர்எஸ்), பார்ட்டி பிரோக்ரெசிஃப் டெமோக்ராக்டிக் (பிடிபி) ஆகிய 4 கட்சிகளே தேமு கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளன.

ஜிபிஎஸ் பக்காத்தான் ஹராப்பானுடன் இணையவில்லை. ஆனால் கூட்டாட்சி அரசியலமைப்பு, மலேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய நலனுக்காகவும் மாநில உரிமைகளுக்கும் மத்திய அரசாங்கத்துடன் "இணைந்து ஒத்துழைக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment