Friday 1 June 2018

மலேசியா வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி


கோலாலம்பூர்-
நாட்டின் 7ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள துன் டாக்ர மகாதீர் முகம்மது சந்திக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா வந்தடைந்தார்.

இந்தோனேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த நரேந்திர மோடி, இன்று காலை 11.00 மணிக்கு சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ரம்லான் இப்ராஹிம் வரவேற்றார். அவருடன் மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுல் குமாரும் வரவேற்றார்.

சிங்கப்பூருக்கு செல்லவிருக்கும் நரேந்திர மோடி, 9ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற துன்  மகாதீருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.

No comments:

Post a Comment