Sunday 17 June 2018

பிரிம் இயக்கத் தலைவர் முகமட் அரிஃப் அலியாவின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்


புனிதா சுகுமாறன்

ஈப்போ:

நோன்புப் பெருநாளை முஸ்லீம் அன்பர்கள் தங்களது குடும்பத்தினருடனும் உற்றார்  உறவினர்களுடனும்  கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவ்வகையில் ஈப்போ, பெர்ச்சாம் பகுதியைச்  சேர்ந்த பேராக் மாநில இந்திய முஸ்லீம் இயக்கத்தின்( பிரிம்) தலைவர் முகமட் அரிஃப் அலியா தமது குடும்பத்தினர்களான  அப்துல் அசிஸ் குடும்பத்தினர் (Abdul Azis), அலாவுதின் குடும்பத்தினர் (Alaudin),  சுபைடா பானு குடும்பத்தினர்
 (Zubaidah banu), டத்தோ காசிம் குடும்பத்தினர்  (Dato Kassim ), பேராக் பிரிம் இயக்கத்தின் செயலவை உறுப்பினர் அனைவருடனும்  நோன்புப் பெருநாளை  கொண்டாடி மகிழ்ந்தார்.

உற்றார்  உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வருகையோடு நோன்புப் பெருநாளை கொண்டாடி மகிழும் அதே வேளையில் மலேசியா வாழ் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை முகமட் அரிஃப்  குடும்பத்தினர்  தெரிவித்துக் கொண்டனர்.



No comments:

Post a Comment