Friday 1 June 2018
நாட்டின் 'கடனை' அடைப்பதில் ஆர்வம் காட்டும் மலேசியர்கள்
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியுள்ள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் அதன் ஓர் நாட்டின் 'கடனை' அடைக்க எடுத்துள்ள முயற்சிக்கு மலேசியர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.
நாட்டின் கடன் 1 திரில்லியன் வெள்ளி ( ஒரு லட்சம் கோடி வெள்ளி) என அண்மையில் பிரதமர் துன் மகாதீர் முகம்மது அறிவித்தார். அதனை நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் உறுதிப்படுத்தினார்.
நாடு கொண்டிருக்கும் கடனை அடைக்க ஒரு சில மலேசியர்கள் தன்னிச்சையாக நன்கொடை வழங்கிய சூழலில், 'தாபோங் ஹராப்பான் மலேசியா' எனும் சிறப்பு திட்டத்தை துன் மகாதீர் நேற்று அறிவித்தார்.
நாட்டின் கடனை அடைக்க வேண்டும் என்ற பக்காத்தான் ஹராப்பானின் முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் பலர் சம்பந்தப்பட்ட திட்டத்தின் வங்கி கணக்கில் நிதி செலுத்தியதோடு பிறரையும் நிதி அளிக்க வேண்டும் என தன்னார்வ முறையில் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
அரசாங்கம் முன்னெடுக்கும் ஆக்ககரமான திட்டங்களுக்கு மலேசியர்கள் தங்களது ஆதரவை புலப்படுத்துவர் என்பதை நாட்டின் கடனை அடைக்கும் முயற்சியில் நிரூபித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment