Friday 26 June 2020

இந்தியர், சீனர் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படாதது ஏன்? மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில அரசில் இந்தியர்களையும் சீனர்களையும் பிரதிநிதிக்கக்கூடிய பிரதிநிதிகள் இன்னமும் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு மஇகா இளைஞர் பிரிவு தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகாவும் மசீசவும் ஓர் அங்கமாக வகித்துள்ளன.

ஆனால் பேரா மாநிலத்தில் கடந்த மார்ச்  ஆட்சி அமைத்த பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணயணி இந்தியர்,சீனர் பிரதிநிதிகளை இன்னமும் நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்துவது வேடிக்கையாக உள்ளது என்று மஇகா இளைஞர் பிரிவு மத்திய செயலவை உறுப்பினர் ஸ்ரீ முருகன் குறிப்பிட்டார்.

முந்தைய தேசிய முன்னணி அரசில் சிறப்பு ஆலோசகர் பதவி மஇகாவுக்கு வழங்கப்பட்டது.  ஆனால் இப்போது இந்தியர், சீனர் பிரதிநிதிகள்  இல்லாமல் இருப்பது மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது.

குறிப்பாக, மாநில அரசின் உதவிகளை பெற விரும்பும் இந்தியர்கள் இந்திய பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில் தங்களது தேவைகளுக்கு எவ்வாறு உதவிகள் கிடைக்கப்பெறும்.

இந்தியர்களும் சீனர்களும் மாநில அரசில் பங்களிப்பை வழங்காத நிலையில் சிறப்பு நியமனங்களின் வழி இவ்விரு சமூகத்திற்கும் மாநில உதவித் திட்டங்கள் சென்றடைவதற்கு பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும்.

இந்த நியமனத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் ஃபைசால் சீக்கிரமே அமல்படுத்த வேண்டும் என்று ஸ்ரீ முருகன் மேலும் சொன்னார்.

Wednesday 24 June 2020

மஇகா,இந்தியர்கள்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு மாபெரும் பணி காத்திருக்கிறத...

ரா.தங்கமணி

தைப்பிங்-
மேலவை சபாநாயகர் பதவியிலிருந்து நிறைவு பெற்றாலும் மஇகாவையும் இந்திய சமுதாயத்தையும் வலுபடுத்தி மேம்படுத்தும் மாபெரும் பொறுப்பு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வசம் உள்ளது என்று மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்தின் தாய்க்கட்சியாக திகழ்கின்ற மஇகாவை இன்னும் வலுபடுத்துவதற்கு ஆக்ககரமான செயல் திட்டங்கள் தேவை.


மூன்று அரசாங்கம், மூன்று பிரதமர்கள் என பல தலைமைத்துத்தின் கீழ் திறம்பட செயலாற்றியுள்ளார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.


டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தில் மஇகா வலுபெறும் நிலையில் அதனை இன்னும் வலுபடுத்துவதற்கான செயல் திட்டங்களை  அவர் முன்னெடுப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என்று தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினருமான வீரன் குறிப்பிட்டார்.

பிரதமர் பதவியை வேறு வழியில் தேடி கொள்கிறேன் - துன் மகாதீர்

பிரதமர் பதவியை அடைவதற்கு வேறு வழியை தேடிக் கொள்கிறேன். இனி டத்தோஸ்ரீ அன்வாருடன் ஒத்துழைக்க மாட்டேன் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்தார்.

என்னுடன் அன்வார் ஒத்துழைக்காதபோது நானும் இனி அவருடன் ஒத்துழைக்க போவதில்லை.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இனி தாம் இல்லை என்ற போதிலும் அமானா, டிஏபி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்.

           
அன்வார் பரிந்துரைத்த மூத்த அமைச்சர் பதவியை நிராகரித்த துன் மகாதீர்,  பிரதமர் பதவியை அடைவதற்கு வேறு வழியை தேடி கொள்கிறேன் என்று துன் மகாதீர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிஎச் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரை ஏற்க முடியாது என அண்மையில் பிகேஆர் கட்சி திட்டவட்டமாக அறிவித்த நிலையில் பதவி போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Tuesday 23 June 2020

திருமணப் பதிவில் மூவருக்கு மட்டும் அனுமதியா? ஜேபிஎன் முடிவில் நிலவும் அத...

கோலாலம்பூர்-
பதிவு திருமணத்தின்போது மூவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்ற தேசிய பதிவுத் துறையின் முடிவு புதிய திருமண ஜோடிகள் கலக்கத்தில் உள்ளனர்.

ஜூலை 1ஆம் தேதி முதல் பதிவு திருமணத்தில் இரு சாட்சியாளர்கள், ஒரு புகைப்படக் கலைஞர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி என தேசிய பதிவுத் துறை அறிவித்துள்ளதாக திருமணப் பதவதிகாரி ஒருவர் ஊடக்கத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.


கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனும் நோக்கில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் தியேட்டர்கள், மால்களில் எல்லாம் 250க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணம் புரியவிருக்கும்  தம்பதியரின் திருமணத்தை பெற்றோர்கள் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது எவ்வகையில் நியாயமாகும்? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

பொது இடங்களில் கூட சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 20 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் சூழலில் பதிவு திருமணத்திற்கு மூவருக்கு மட்டுமே அனுமதி என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்பதை தேசிய பதிவுத் துறை உணர வேண்டும்.

அம்னோவுக்கு கொடுக்கப்பட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளை மஇகாவுக்கே வழங்குக-டத்தோ இளங்கோ


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்தில் அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் மீண்டும் மஇகாவிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பேரா மாநில மஇகாத் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ வ.இளங்கோ வலியுறுத்தினார்.

2008இல் நிகழ்ந்த அரசியல் சுனாமிக்குப் பின்னர் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நாட்டின்  13ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகளான பாசீர் பஞ்சாங், பெராங் ஆகிய தொகுதிகளில் அம்னோ வேட்பாளர்கள் போட்டியிட களமிறக்கப்பட்டனர்.

வீடியோவில் காண்க: https://www.youtube.com/watch?v=8EI7K-G2wRs


அதேபோன்று 2018இல் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலிலும் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது மஇகா. ஆனால் 2018ஆம் ஆண்டு தேர்தலில் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அம்னோ, பெராங், பாசீர் பாஞ்சாங் தொகுதிகளில் தோல்வி கண்டது.

கடந்த இரு தேர்தல்களில் தனது பாரம்பரியத் தொகுதிகளை விட்டுக் கொடுத்த மஇகா அதற்கு பதிலாக சுங்காய், புந்தோங், ஜெலாப்பாங் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அங்கு தோல்வியையே மஇகா சந்திக்க நேர்ந்தது.

மூன்று தொகுதிகளிலும்  மஇகா தோல்வி கண்டதால் மாநில அரசில் இடம்பெற முடியாமல் இந்தியர்களை பிரதிநிதிக்கும் வகையில் சிறப்பு ஆலோசகர் பதவியை பெற்று செயலாற்றி வந்தது. 

இதனடிப்படையில் மஇகாவிடமிருந்து பெறப்பட்ட பெராங், பாசீர் பாஞ்சாங், ஊத்தாங் மெலிந்தாங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு களமிறங்கும் வகையில் திரும்ப மஇகாவிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.

அங்கு ம இகா தனது வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெற்று மாநில அரசில் இடம்பெறும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று டத்தோ இளங்கோ கூறினார்.

PKR Kapar: கட்சி தொண்டர்களிடம் வசமே உள்ளது மதுரை வீரன் அறிவிப்பு

காப்பார்- 

பி.கே.ஆர் காப்பார் தொகுதி கட்சி தொண்டர்களிடம் வசமே உள்ளது என்று அத்தொகுதியின் துணைத்தலைவரும் கிள்ளான் நகரண்மை கழக உறுப்பினருமான மதுரை வீரன் மாரிமுத்து  தெரிவித்தார்.
தொண்டர்கள் வியர்வை சிந்தி வளர்க்கப்பட்ட கட்சி பிகேஆர். சில தலைவர்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக மக்கள் சேவையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட கட்சியை விட்டு வெளியேறுவது கட்சிக்கு செய்யும் துரோகம் என்றும் காப்பார் தொகுதியை பொருத்தவரை அது இன்னமும் உண்மையான தொண்டர்கள் வசமே உள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

புதிய தற்காலிக தலைவர் கோ பூன் பொக்  கட்சிக்காக கடுமையாக போராட வேண்டும் என்று கூறினார். 

கட்சியின் பெண்கள் தலைவியான திருமதி லெட்சுமி  காப்பார் தொகுதி நிலைத்திருக்க கடுமையாக போராடுவோம் என்று கூறினார்.

காப்பார் தொகுதியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மதுரைவீரன், தம்மால் இயன்ற அனைத்து சேவைகளையும் இனபாகுபாடின்றி செய்து வந்துள்ளதாகவும் இனிமேல் தன் சேவையை இன்னும் சிறப்பாக செயல்ப்படுத்த விருப்பதாகவும் அவர்  கூறியதுடன் யாருக்கும் தான் விலைபோக மாட்டேன் என்றும் மேலும் கூறினார்.

சமீபகாலமாக கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், குறைப்பாடுகள் காரணமாக பி.கே.ஆர் கட்சியின் தலைவராக இருந்த செமந்தா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில துணை சபா நாயகருமான டாக்டர் டரோயா அல்விஸ் , அத்தொகுதியின் துணைத்தலைவரும்  முன்னாள் ஹிண்ட்ராப் போராட்டவாதியுமான வசந்தகுமார் பி.கே.ஆர் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் தங்களை சுயேட்சைகளாகவும் அறிவித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது

Monday 22 June 2020

டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு உயரிய பதவி வழங்குக

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மேலவை சபாநாயகர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தலைமைத்துவ மாண்பை அங்கீகரிக்கும் வகைjயில் உயரிய பதவியை வழங்க பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் முன்வர வேண்டும் என்று சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன்  வலியுறுத்தினார்.

மூன்று அரசாங்கம், மூன்று பிரதமர்கள் என சேவையாற்றியுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனைத்துத் தர நன்மதிமதிப்பையும் பெற்றவராக திகழ்கிறார்.

துடிப்பாற்றல் மிக்கவராக, சிறந்த சேவையாளராக விளங்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் செயல் நடவடிக்கைகள் இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு பேருதவியாக அமைந்திடும் என்பதால் அவருக்கான ஒரு பதவியை வழங்கப்படுவதை உறுதி செய்ய தேமு தலைமைத்துவமும் இணங்க வேண்டும்.

மஇகாவை வலுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு உயர் பதவி வழங்கப்படுவதன் மூலம் இந்திய சமுதாயத்திற்கு இன்னும் கூடுதலாக சேவையாற்ற முடியும் என்பதோடு அது தேமுவை வலுபடுத்த அடித்தளமாக அமையலாம் என்று மணிமாறன் குறிப்பிட்டார்.

பலவீனம் அடைந்ததாலே போட்டியிடாமல் விலகிக் கொண்டது பிஎச் கூட்டணி

பெக்கான்-

பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலேயே சண்டையிட்டுக் கொள்ளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தாங்கள் பலவீனமான கட்சி என்பதை ஒப்புக் கொள்வதாலேயே சினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டுள்ளது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

சினி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு இன்று நடைபெற்ற நிலையில் தேசிய முன்னணி தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது. சுயேட்சை  வேட்பாளர்கள் இருவரும் களத்தில் குதித்துள்ளதால் இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தற்போது பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக உருவெடுத்துள்ளது.

கோவிட்-19 பேரிடர் சூழலிலும் மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இப்போதுகூட ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் 300 கிலோவாட்டிற்கும் குறைவாக மின்சாரத்தை  பயன்படுத்தியுள்ள 4 மில்லியன் மக்களுக்கு மின்சாரக் கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான திட்டங்களை பின் கூட்டணி முன்னெடுக்கும் நிலையில் பிஎச் கூட்டணி இன்னும் பலவீனம் அடைந்து கொண்டிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதிலும் கூட கேமரன் மலை உட்பட பல்வேறு இடைத்தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியே சந்தித்து வந்தது. 

தொடர் தோல்வி, உட்கட்சி பூசல், பலவீனம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சினி இடைத் தேர்தலிலும் போட்டியிடாமல் பக்காத்தான் ஹராப்பான் ஒதுங்கி கொண்டுள்ளது என்று சினி வேட்புமனுத் தாக்கலில் தேமு வேட்பாளரை ஆதரித்து  களமறங்கிய டத்தோஸ்ரீ தனேந்திரன் இவ்வாறு கூறினார்.

Friday 19 June 2020

பிரதமர் வேட்பாளர் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிகேஆர்

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிடமிருந்து ஆட்சியை கைபற்றினால் பிரதமர் வேட்பாளர் யார் என்ற இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிகேஆர்- பிரதமர் வேட்பாளராக யாரை முன்மொழிந்துள்ளது தெரியுமா?

விரிவான செய்திக்கு வீடியோவை கிளிக் செய்யவும்



மஇகாவை எதிர்த்து களமிறங்குகிறதா வேதமூர்த்தியின் எம்ஏபி கட்சி?

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தனது எம்ஏபி (MAP) கட்சி வேட்பாளர்களை களமிறக்க முடிவெடுத்துள்ள பொன். வேதமூர்த்தி குறி வைத்துள்ள தொகுதி எது தெரியுமா?

விரிவான தகவலுக்கு வீடியோவை பார்க்கவும்




தகுதிகளின் அடிப்படையில் மெட்ரிக்குலேஷன் நுழைவுத் தேர்வுகளா? - பாரதம் செய...

ஷா ஆலம்-

மெட்டிக்குலேஷன் நுழைவுத் தேர்வுகளில் முன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த கோட்டா முறை அகற்றப்பட்டு தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பது உண்மையானால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கடுமையாக சாடினார்.

விரிவான தகவலுக்கு காணொளியை பாருங்கள்



பாரதம் செய்தி- 18/6/2020 சமய விழா, திருமணங்களை நடத்துவதற்கு தடை இல்லை- ...

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சமய விழாக்களையும் திருமணங்களையும் நடத்துவதற்கு தடையில்லை. ஆனால்....
 
முழுமையான செய்திக்கு வீடியோவை பார்க்கவும்



Thursday 18 June 2020

சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள் எப்போது செய...

பாரதம் செய்திகள்- 18.6.2020

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இஸ்லாம் அல்லோதோர் வழிபாட்டு தலங்கள் எப்போது செயல்படும்?- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதில்
வீடியோவை கிளிக் செய்யவும்

pls Subscribe Bhaaratham TV Youtube Channel.. tq

Monday 15 June 2020

அணி தாவினால் பதவியிலிருந்து விலகுக: MIV ஆனந்தன் வலியுறுத்து


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் அணி தாவும் மக்கள் பிரதிநிதிகளின் போக்கு குறித்து மலேசிய இந்தியர் குரல் இயக்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்கும் சூழலில் தங்களது பதவிகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ஆனந்தன் குறிப்பிட்டார்.

ஏனெனில் மக்கள் அளித்த வாக்கு சம்பந்தப்பட்ட கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவு ஆகும்.

கட்சியிலிருந்து வெளியேறும் ஒருவர் தனது பதவியையும் துறக்க வேண்டும்.  இதுதான் நியதியும் ஆகும்.

அரசாங்கத்தில் தங்களது குரலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இத்தகைய துரோகச் செயலை அரங்கேற்றும் நிலையில் அது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

 கட்சி தாவல் நடவடிக்கை மக்களிடையே ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கி விடுகிறது.

அரசியலில் நடத்தப்படும் இது போன்ற சதிராட்டங்களினால் மக்களுக்கான சமூக நலன்கள் பாதிக்கப்படுவதால் அவர்கள் வெறுப்படையும் சூழலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் எதிர்கால அரசியல் சூழல் எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெளிவில்லாத நிலையில் மக்களின் நம்பிக்கையுடன் விளையாட வேண்டாம். மக்களே முதன்மை நீதிபதி எனும் அடிப்படையில் அவர்களால் தண்டிக்கப்படலாம் என்று ஆனந்தன் எச்சரித்தார்.

வீடியோ காண்பதற்கு: Youtube

Friday 12 June 2020

கோவிட்-19: கட்டுப்படுத்துவது கடினம்- உலக சுகாதார நிறுவனம்

நியூயார்க்-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கடினமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் உள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரைசஸ் கவலை தெரிவித்தார்.

இந்நோய்க்கான மருத்துவப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல், நோய் தொற்று கண்டவர்க்ளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணுதல் போன்ற நடவடிக்கைகள் இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான முதன்மை அணுகுமுறையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு, கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை கண்டுப்பிடிப்பதற்கு உலக தலைவர்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஐவர் செனட்டர்களாக பதவியேற்கவுள்ளனர்

கோலாலம்பூர்-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தற்போது ஆட்சி செய்து வரும் நிலையில் மேலவை உறுப்பினர்களாக ஐவர் வரும் 16ஆம் தேதி செனட்டர்களாக பதவி பிரமாணம் எடுக்கவுள்ளனர்.

அம்னோவின் முன்னாள் அமைச்சர்களான ராய்ஸ் யாத்திம், ரட்ஸி சேய்க் அஹ்மாட் ஆகியோருடன் பாஸ் கட்சியின்  உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மாட், பாஸ் ஆதரவு கிளப்பின் தலைவர் என்.பாலசுப்பிரமணியம், துன் மகாதீரின் முன்னாள் அரசியல் செயலாளர் முகமட் ஸாயிட் முகமட் அரிப் ஆகியோரே செனட்டர்களாக நியமனம் செய்யப்படவுள்ளனர்.

 வரும் 16ஆம் தேதி காலை 10.00 மணியளவில் மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் இவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளனர்.

Thursday 11 June 2020

உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குக- மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர்-
அந்நியத் தொழிலாளர்களை காட்டிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முதலாளிமார்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.

சம்பளம் வழங்கும் அடிப்படையில் உள்ளூர் தொழிலாளர்களை விட அந்நியத் தொழிலாளர்களே முதலாளிமார்களின் தேர்வாக உள்ளது.

சில தொழில் துறைகளில் அந்நியத் தொழிலாளர்களின் பங்களிப்பை நாம் தவிர்க்க முடியாது.அதற்கு நாம் தயாராக இல்லை. குறிப்பாக தோட்டத் துறைகளில் அந்நியர்கள் பணிபுரிவது தவிர்க்க முடியாது. 
ஆனால் குமாஸ்தா போன்ற அலுவலகப் பணிகளிலும் அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதை ஏற்க முடியாது.

அதே போன்று பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் நிரப்புபப்வர்களாக அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் சில பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் நிலைய முகப்பிடங்களில் அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

3டி எனப்படும் அசுத்தமான, ஆபத்தான, அருவருப்பான துறைகளை முன்பு உள்ளூர் தொழிலாளர்கள் புறக்கணித்தனர். அது அப்போது அவர்களின் தேர்வாக இருந்தது. ஆனால் நிலைமை இப்போது வேறாக உள்ளது. 

நாட்டின் பொருளாதாரச் சூழலில் வேலைவாய்ப்பின்மையை பெரும்பாலானோர் எதிர்நோக்கியுள்ள நிலையில் 3டி துறைகளில் உள்ளூர் தொழிலாளர்கள் பணியாற்ற தயக்கம் காட்ட மாட்டார்கள் என்பதை  முதலாளிமார்கள் உணர்ந்து வேலை வாய்ப்புகளை உள்ளூர் தொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

செப்ட்ம்பரில் பள்ளிகளை திறக்கலாம்- NTUP

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் மூடப்பட்ட பள்ளிகளை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட வேண்டும் என்று NUTP எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் வரும் ஜூன் 24ஆம் தேது முதல் பள்ளிகளுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகள் எப்போது செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்பு இப்போது தணிந்துள்ள நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மீண்டும் பள்ளிகள் செயல்படுவதற்கு உத்தேசிக்கபடலாம் என்று அதன் தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்தார்.

திடீர் தேர்தலுக்கு தயார்- தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர்-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் திடீர் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மலேசிய தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அதன் ஆணையர் டத்தோ அஸார் அஸிஸான் ஹருண் தெரிவித்தார்.

அரசியல் சூழல் படுமோசமாக புகைந்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் தற்போது நாட்டில் நிலவும் கோவிட்-19 பிரச்சினைக்கு மத்தியில் திடீர் தேர்தல் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எப்போதும் விழிப்புடனே உள்ளோம் என்றார் அவர்.

தற்போதைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அதன் அரசு கலைக்கப்பட்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்சிஓ காலக்கட்டத்தில் 46.7% குற்றச்செயல்கள் குறைந்துள்ளன

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட  MCO எனப்படும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை , CMCO எனப்படும்  நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகிய காலகட்டங்களில் குற்றச்செயல்களின் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் 46.7 சதவீத குற்றச்செயல்கள் சரிவு கண்டுள்ளன என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு பிரிவின் இயக்குனஎ ஹுஸீர் முகமட் தெரிவித்தார்.

எம்சிஓ அமல்படுத்தப்பட்ட 84 நாட்களில் 10,134 குற்றச்செயல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது இவ்வெண்ணிக்கை 19.014ஆக இருந்தது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்முறை குற்றங்கள், வாகனம் திருட்டு,ம் வழிப்பறி போன்ற சொத்துடைமை குற்றம் என இருவகைப்படும் இவ்வகை குற்றங்கள் எம்சிஓ காலகட்டத்தில் 46.7 விழுக்காடு அதாவது 8,880 குற்றங்கள் குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.

Wednesday 10 June 2020

சொந்த ஊர்களுக்கு செல்வபவர்கள் எஸ் ஓபி-ஐ பின்பற்ற வேண்டும்

கோலாலம்பூர்-
வார இறுதி நாட்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்கள் தர நிர்ணய செயல்பாட்டு முறையை (எஸ்ஓபி) பின்பற்ற வேண்டும் என்று தற்காப்பு முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோர் தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அறிமுகம் செய்யப்பட்ட போது மாநிலம் கடந்து வேறு மாநிலங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டது.

இப்போது இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தங்களின் குடும்பத்தினரை பார்க்கச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவ்வார இறுதி நாட்களின் இவ்வெண்ணிக்கை கூடுதலாக அமையும். 

ஆனால் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் அரசாங்கம் அமல்படுத்தியுள்ள எஸ்ஓபி-ஐ முறையாக பின்பற்ற வேண்டும். ஆர்& ஆர் பகுதிகளில் கட்டாயம் எஸ்ஓ பி முறையை பின்பற்ற வேண்டும் என்பதோடு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மரணம்

சென்னை-

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (வயது 62) இன்று காலமானார்.

கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து விழிப்புணர்வு நடவடிக்கை, உதவி நலத்திட்டம் ஆகியவற்றை முன்னெடுத்து வந்த அன்பழகன் காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவ்வப்போது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

பிறந்தநாளான இன்று அவர் மரணம்  அடைந்துள்ளது திமுகவினரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

Tuesday 9 June 2020

ஒரு வாரத்திற்குள் ஆட்சியை கைப்பற்றுவோம்- ப.ஹராப்பான் வியூகம்

கோலாலம்பூர்-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் வியூகமாகவே இன்றைய பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டம் அமைந்துள்ளதாக ஆருடங்கள் வலுக்கின்றன.

ஒரு வார காலகட்டத்திற்குள் இந்த ஆட்சி மாற்றம் அரங்கேற்றப்படலாம். அதன் தொடர்பாக விவாதிக்கவே இன்றைய கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வாருடன் துன் மகாதீர், ஜசெக செயலாளர் லிம் குவான் எங், பக்காத்தான் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மகாதீரா? அன்வாரா?- பக்காத்தான் ஹராப்பானின் புதிய பிரதமர் வேட்பாளர் யார்?

கோலாலம்பூர்-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் புதிய பிரதமர் வேட்பாளர் துன் மகாதீரா? டத்தோஶ்ரீ அன்வாரா? என்பதன் மர்ம முடிச்சு இன்று மாலை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைமைத்துவ மன்றத்தின் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் இக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் விவகாரமும் விவாதிக்கப்படலாம்.

அதில் பக்காத்தான் ஹராப்பான் புதிய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் துன் மகாதீரா? டத்தோஶ்ரீ அன்வாரா? என்பது விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் கவிழ்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என ஆருடங்கள் வலுத்து வரும் நிலையில் அக்கூட்டணியை வழிநடத்திச் செல்லும் பிரதமர் வேட்பாளர் யார்? எனும் கேள்வி சில நாட்களாகவே ஊடங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

மகாதீரை காட்டிலும் முஹிடினே மக்கள் விரும்பும் பிரதமர்- வீரன்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிரதமர் பதவியில் துன் மகாதீரை காட்டிலும் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் தலைமைத்துவம் சிறப்பானதாக அமைந்துள்ளதோடு மக்கள் விரும்பும் நல்லாட்சி வழங்கப்பட்டு வருவதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மூ.வீரன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்தது.

ஆனால் எதிர்பார்த்தப்படி மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க முடியாமல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தடுமாறியது.

பிரதமர் துன் மகாதீரின் தலைமைத்துவம் மக்களுக்கு சோதனை நிறைந்த ஆட்சியை வழங்கிய நிலையில் மக்கள் உதவித் திட்டங்களுக்குக்கூட பணம் இல்லை என சாக்குப்போக்கு சொல்லப்பட்டது.

ஆனால் டான்ஸ்ரீ முஹிடின் பிரதமராக பொறுப்பேற்ற காலகட்டம் மிகவும் சவாலானது ஆகும்.

நாட்டில் நிலைத்தன்மையில்லா அரசியல் சூழலோடு கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டம் அது.

பொருளாதாரச் சவால் நிறைந்த சூழலிலும் மக்கள் பாதுகாப்பு முக்கியமானது எனும் நிலைப்பாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்சிஓ) அமல்படுத்திய டான்ஸ்ரீ முஹிடின், மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடுபொருளாதார மீட்சிக்கான திட்டத்தையும் வகுத்தார்.

4ஆவது பிரதமர், அரசியல் முதிர்ச்சி பெற்றவர் என்பதை தாண்டி கடந்த ஈராண்டு கால பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தோல்வி கண்ட பிரதமராக துன் மகாதீர் திகழ்கிறார்.

ஆனால் மூன்று மாத கால ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை வகுத்து மக்களை பாதுகாத்து பொருளாதாரத்தையும் வலுபடுத்தி மக்கள் விரும்பும் பிரதமராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் திகழ்கிறார் என்று தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினருமான வீரன் திகழ்கிறார்.

1,500 பேருக்கு உதவிக்கரம் நீட்டியது மஇகாவின் 'உதவி' செயலி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் நாடு முழுவமும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பி40 குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் 'உதவி' எனும் செயலியை மஇகா அறிமுகம் செய்தது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியின் வழி வறுமைக் கோட்டில் வாழும் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகாவின் சார்பாக கோவிட்-19 பேரிடர் கால உதவியாக 1,500 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக சுங்கை சிப்புட் மஇகா செயலாளர்கி.மணிமாறன் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்தில் உள்ள பி40 பிரிவுக்குட்பட்ட குடும்பத்தினருக்கு உதவிடும்  நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மஇகா தலைமைத்துவம் முன்னெடுக்கும் இத்தகைய நடவடிக்கை வறிய குடும்பத்தினருக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது என்று மணிமாறன் மேலும் தெரிவித்தார்.

''பிரதமர் பதவியில் 100 நாட்கள்''- டான்ஶ்ரீ முஹிடின் சறுக்கினாரா? சாதித்தாரா?

ரா.தங்கமணி

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதவிக்காலம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இடைக்காலப் பிரதமராக துன் மகாதீர் நியமிக்கப்பட்டபோதிலும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாட்டின் மாமன்னர் தள்ளப்பட்டார்.
அதன் அடிப்படையில் பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டின் 8ஆவது பிரதமராக நியமனம் செய்யப்பட்டார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்.

பக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகி அம்னோ, பாஸ், டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆதரவாளர்கள், சபா, சரவாக் கட்சிகள் ஆகியவற்றின் பேராதரவோடு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைத்தார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்.
மார்ச் 2ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட டான்ஶ்ரீ முஹிடின் நேற்றுடன் (ஜூன் 8) தனது 100 நாட்கள் பணியை நிறைவு செய்துள்ளார்.
பிரதமராக பதவியேற்றுக் கொண்டவர்களில் யாரும் சந்திக்காத மிகப் பெரிய சவால்களுக்கு போராட்டங்களுக்கும் மத்தியில் தனது பதவி பிரமாணத்தை செய்துக் கொண்ட முஹிடின் யாசின், அரசியல் போர்களத்துக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயான  கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டார்.

அரசியல் களம் போராட்டமானது என்றாலும் கூட மக்களின் உயிர் அலட்சியப்படுத்தி விடக்கூடாது எனும் நோக்கில் மக்கள் நலன் காக்கப்பட மார்ச் 18ஆம் தேதி தொடக்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாடு முழுமைக்கும் அமல்படுத்தினார்.

வருமானம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக  "PRIHATIN" திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுக்கு உதவிநிதிகளை வழங்கினார். மக்கள் மட்டும் போதுமா? தொழில் நிறுவனங்கள் பொருளாதார நிலையில் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக உதவித் திட்டங்களையும் "PENJAJA" திட்டத்தையும் அறிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று ஒரு முடிவு காணப்பட்டாலும் அரசியல் ரீதியிலான போராட்டங்களை சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழல் டான்ஶ்ரீ முஹிடினை நெருக்கியது.

ஒரு பக்கம் ஆட்சி, மறுபக்கம் கட்சி என இருதலை கொள்ளியாய் தவித்த முஹிடின் யாசின்  ஆக்ரோஷமாக களம் காண துணிந்தார். அதில் ஒன்றுதான் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் மகாதீர் உட்பட ஐந்து பேரை கட்சியிலிருந்து நீக்கினார்.
ஆட்சியும் கட்சியும் தன்  வசம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தனத்தில் எதிரிகளை துவம்சம் செய்து தற்போது வெற்றி நாயகனாய் அரசியல் களத்தில் உலாவ தொடங்கியுள்ளார்.

நம்பிக்கை துரோகம், ஆட்சி கவிழ்ப்பு, கட்சி அதிகாரம் என சில இடங்களில் சறுக்கினாலும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, ,மக்களுக்கான உதவிநிதி திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்திற்கான திட்டமிடல், ஆட்சியை தக்கவைக்க போராட்டம் என மக்கள் மத்தியில் ஒரு சாதனை பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் திகழ்கிறார்.

இந்த 100 நாட்களின் அரசியல் எவ்வளவு சூடாக இருந்ததோ அதை விட பிரபலமானது "Ke Sana Ke Sini" என்ற டான்ஶ்ரீ முஹிடின் உதிர்த்த வார்த்தைகள் தான்.

100 நாட்களை கடந்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு "பாரதம்" இணைய ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Monday 8 June 2020

அணி தாவும் 'தவளை'களை தடுக்க சட்டம் இயற்றுக- ராய்டு கோரிக்கை

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மக்களின் வாக்குகளை பெற்று சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுயலாபத்திற்கா 'அசி மாறும் தவளைகளாக' உருவெடுப்பதை தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் ஆலோசகர் வீ.ராயுடு வலியிறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கையின் அடிப்படையில்  மக்களினம் வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக உருவெடுத்தவர்களு இன்று நம்பிக்கை துரோகிகளாக மாறியுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் தேர்ந்தெடுத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கவிழ்க்க சுயநலவாதிகள் 'தவளைகளாக' மாறியுள்ளனர்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள பிரதிநிதிகள் அனைவரும் தங்களின் சுய அடையாளத்தில் வெற்றி பெறவில்லை. மாறாக கட்சியின் சின்னம், போட்டியிடும் கூட்டணியின் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

நிலையை இவ்வாறு இருக்க வெற்றி பெற்ற பின் அணி மாறுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து புதிய ஆட்சியை அமைப்பதும் ஜனநாயக நாட்டில் தவறான முன்னுதாரணமாகும்.

இதனை தடுக்கும் வகையில் கட்சி தாவல் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

கட்சி தாவல் செய்யும் மக்கள் பிரதிநிதியின் பதவி பறிக்கப்படுவதோடு கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் ஜனநாயக நாட்டில் பொதுத் தேர்தல் மீது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்று ராய்டு தெரிவித்தார்.

Sunday 7 June 2020

பேராவில் களமிறங்குவாரா டான்ஸ்ரீ விக்கி?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
சபாநாயகர் பதவியிலிருந்து இம்மாதம் விலகும் மஇகா தேசியத்  தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மஇகாவை வலுபடுத்தும் தீவிர முயற்சியில் களம் கண்டு வருகிறார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைந்துள்ள இந்த சூழலில் மஇகா வலுபெறவுள்ளதை உறுதி செய்யும் களப்பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் மஇகாவுக்கான அங்கீகாரம் கிடைப்படுவதோடு இந்தியர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் மாநில ரீதியிலான தமது பயணத்தை தொடங்கியுள்ளார்.

அண்மையில் பகாங் மாநில மந்திரி பெசாரைச் சந்தித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், அம்மாநில இந்தியர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அதேபோன்று ஜொகூர் மாநில மந்திரி பெசாரையும் சந்தித்துள்ள டான்ஸ்ரீ விக்கி, அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மாநிலந்தோறும் வருகை மேற்கொள்ளும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேரா மாநிலத்திற்கும் வருகை புரிய வேண்டும்.

பேரா மாநிலம் மஇகாவுக்கு என்றுமே சிறப்பானதாகும்.

மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவர்  துன் வீ.தி.சம்பந்தன் பிறந்ததும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்ததும் பேரா மாநிலத்தில் உள்ள சுங்கை சிப்புட்டில் தான்.

தற்போது மனிதவள அமைச்சராக உள்ள டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூட பேரா மாநிலத்தில் உள்ள தாப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இத்தனை பெருமைகளை கொண்டுள்ள பேரா மாநில அரசில் மஇகாவின் பிரதிநிதி யாரும் இல்லாத நிலையில் கடந்த இரு தவணைகளாக வழங்கப்பட்டு வந்த மந்திரி பெசாரினர சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் இன்னமும் மஇகா பிரதிநிதிகள் நியமிக்கப்படாமல் இருப்பது பல கேள்விகளை உருவாக்கி வருகிறது.

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து 2009இல் ஆட்சியை கைப்பற்றிய தேசிய முன்னணி அரசில் மஇகா சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் டான்ஸ்ரீ எஸ்.வீரசிங்கம் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் லுமூட் தொகுதி மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்போது பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகா அங்கத்துவம் பெற்றிருக்கும் நிலையில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவி இன்னமும் மஇகாவுக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளை மஇகாவுக்கு உறுதி செய்ய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேரா மாநிலத்திற்கு களமிறங்க வேண்டும்.

அதன்வழி பேரா மஇகாவும் இம்மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கும் ஒரு ஆக்ககரமான நடவடிக்கையை முன்னெடுக்க இது வழிவகுக்கலாம்.

நீங்க வரணும் டான்ஸ்ரீ...

வழங்கப்பட்ட மானியத்தில் அல்ல; மானியம் ஒதுக்கப்படுவதிலேயே குளறுபடி- கணபதிராவ் சாடல்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட மானியம் முறையாக வழங்கப்பட்டதா? என்ற கேள்வியை விட இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் மானியம் முறையாக வந்து சேர்கிறதா? என்பதே இப்போதைய கேள்வியாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியிறுத்தினார்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக 11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் வெ.500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2016 முதல் 2020 வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் வெ.100 மில்லியன் வழங்கப்படுகின்ற நிலையில் இந்த நிதி முறையாக இந்திய சமுதாயத்தை வந்து சேர்ந்ததா? என்பதே எனது கேள்வியாகும்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதார திட்டமிடலுக்காக உருவாக்கப்பட்ட செடிக், அதன் பின்னர் மித்ரா ஆகிய அமைப்புகளுக்கு அரசாங்கம் அறிவித்தபடி ஒவ்வோர் ஆண்டும் வெ.100 மில்லியன் வந்தடைந்ததா? எனும் ஆய்வு செய்தால் 50 முதல் 60 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்படுகிறது எனும். அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கிறது.

அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பட வேண்டிய முழு ஒதுக்கீடும் இந்தியர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளிடம் வந்து சேராத்தை இந்திய சமுதாயம் உணர வேண்டும் என்பதை தமது எண்ணமாகும்.

தனிபட்ட முறையில் பிறரை சாடுவதோ குறை கூறுவதோ தன்னுடைய நோக்கமல்ல என விவரித்த கணபதிராவ், செடிக், மித்ரா ஆற்ற தவறிய கடமைகள் குறித்து விரைவில்  கேள்வி எழுப்புவேன்.

ஆனால், அதற்கு முன்னதாக அரசாங்க அளவில் அறிவிப்புகளில் ஒதுக்கப்படும் மானியம் உண்மையிலேயே இந்திய சமுதாயத்திற்காக அரசாங்கம் செலவிடுகிறதா? என்ற உண்மையை ஒவ்வொரு இந்தியரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Thursday 4 June 2020

மித்ரா மானியம்: இந்தியர்களுக்கு மிஞ்சியது துரோகமே!- கணபதிராவ் குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான  மித்ராவின் வழி மிகப் பெரிய துரோகம் இந்நாட்டு இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டினார்.

11ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த 2016 முதல் 2020 வரை
அனைவரும் நன்கு அறிந்த மித்ராவின் (இதற்கு முன் 'செடிக்' என்று அழைக்கப்பட்டது) வழி வெ.500 மில்லியன் (50 கோடி வெள்ளி) ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

இவ்வமைப்பின் திட்டங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் வெ.100 மில்லியன் (10 கோடி வெள்ளி) இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த 500 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் பாதியளவு கூட இந்திய சமுதாயத்தைச் சென்றடையாதது உண்மையிலேயே இச்சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகமாகும்.

நம்பதகுந்த தரப்பிலிருந்து மித்ரா (செடிக்) அமைப்புக்கு எவ்வளவு பணம்  கிடைத்தது, அதில் எவ்வளவு செலவிடப்பட்டது, திருப்பி அனுப்பப்பட்ட தொகை எவ்வளவு போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

2016:  வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ.60 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ.35 மில்லியன்
திருப்பி அனுப்பபட்டது: வெ. 25 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ.65 மில்லியன்

2017: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது:  வெ.67 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ.58 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 9 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ.42 மில்லியன்.

2018: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ. 100 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ. 1 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 99 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: வெ. 99 மில்லியன்

2019: வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு
 கிடைத்தது: வெ.100 மில்லியன்
செலவிடப்பட்டது: வெ. 56 மில்லியன்
திருப்பி அனுப்பப்பட்டது: வெ. 44 மில்லியன்
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: 44 மில்லியன்

2020: வெ.100 மில்லியன் ஒதுக்கீடு
கிடைத்தது: வெ.100 மில்லியன்
செலவிடப்பட்டது: தகவல் இல்லை
திருப்பி அனுப்பப்பட்டது : தகவல் இல்லை
பயன்படுத்தப்படாத மொத்த தொகை: தகவல் இல்லை.

இந்த தரவுகளின் வழி செடிக் நிர்வாகத்தின் போது 2016-2017ஆம் ஆண்டுகளில் இந்திய சமூகத்திற்காற ஒதுக்கப்ட்ட நிதியில் 60% தொகை மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் முழுமையான தொகை ஏன் வழங்கப்படவில்லை?

தேசிய முன்னணி அரசாங்க நிர்வாகத்தின் போது அறிவித்த தொகையில் அரையளவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்தை ஏமாற்றியதாக பொருள்படாதா? கொடுக்கப்படாத மீதப் பணம் எங்கே போனது?

வழங்கப்பட்ட பாதியளவு தொகையை கூட முழுமையாக செலவிட முடியவில்லை என்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

இப்படி முழுமையாக செலவிடப்படாததற்கு காரணம் இந்த நிதி தேவைப்படவில்லையா? அல்லது இந்த பணம் செலவிடப்பட முடியாத வகையில் இந்திய சமுதாயம் பொருளாதாரத்தில் மேம்பாடு கண்டு விட்டதா?

அதேபோன்று தான் 2018ஆம் ஆண்டிலும் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை.14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 'செடிக்' உருமாற்றம் கண்டு 'மித்ரா'வாக மாறிய நிலையில் முழுமையான ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றும் அதனை முழுமையாக செலவிடவில்லை. 2019இலும் முழுமையான தொகையை செலவிடவில்லை.

99% நிதியை முழுமையாக செலவிட்டோம் என்று முன்னாள் அமைச்சரும் மித்ராவும் சொல்லி கொண்டே இருக்கின்றனர். 2019இல் தாமதமாக நிதி கிடைத்ததால் பயன்படுத்தாத நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டது என காரணம் கூறும் நிலையில், அவ்வாண்டில் உண்மையிலேயே நிதி தாமதமாகத்தான் கிடைத்ததா என்ற பெரும் கேள்விக்கு பதில் கூற முடியுமா?

11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் செடிக், மித்ரா ஆகியவற்றின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கான 50% ஒதுக்கீடு வீண்டிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

இப்படி வெறுமனே வீண்டிக்கப்பட்டுள்ள இந்த நிதியை ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த் இந்திய சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழி இந்திய சமுதாயத்திற்கு பயனுள்ள திட்டங்களை மேற்கொண்டிருக்கலாம்.

இந்த நிதி அறிவிக்கப்பட்டது முதல் இந்நாள் வரையிலும் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான எவ்வித முறையான திட்டமிடலும் மித்ராவிடமோ, ஒற்றுமை துறை அமைச்சிடமோ அல்லது இந்திய மக்கள் பிரதிநிதிகளிடமோ இல்லை என்பதுதான் உண்மை.

சிலாங்கூர் மாநிலத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவுக்கு ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் என்னை பொறுத்தவரை இது மிகப் பெரிய இழப்பு ஆகும். 11 ஆவது மலேசிய திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 248 மில்லியன் வெள்ளி செலவிடப்படாத நிலையில்  2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12 மலேசிய திட்டம் அறிவிக்கப்படும் சூழலில்ப பயன்படுத்தப்படாமல் திரும்ப அனுப்பப்பட்ட தொகை இந்திய சமுதாயத்தை மீண்டும் வந்து சேராது.

இந்திய சமுதாயத்திற்கான இழப்புகள் நிறைவு பெறாதா? தேமு, பிஎன் இந்திய சமூகத்திற்கான துரோகச் செயல்கள் இன்னும் தொடர்கதையாகுமா?

இந்த 248 மில்லியன் ஒதுக்கீட்டை இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கியிருந்தாலே போதும், கோவிட்-19 காலத்தில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்திருக்கலாம் என்று கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.