Wednesday 6 June 2018

3 மாத காலக்கெடு; பிபிஆர் வீடுகளிலிருந்து வெளியேறுங்கள்- அமைச்சர் அதிரடி

கோலாலம்பூர்-
மக்கள் வீடமைப்பு திட்ட (பிபிஆர்) வீடுகளில் வாடகைக்கு தங்கியிருக்கும் அந்நிய நாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு 3 மாத கால அவகாசம்ம் வழங்கப்படும் என வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஜூராய்டா கமாருடின் தெரிவித்தார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் தங்கியுள்ள அந்நிய நாட்டவர்களை  வெளியேற்றாத உரிமையாளர்களுக்கு அபராதமும் வீட்டு உரிமையும் பறிக்கப்படுவதோடு அந்நிய நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.

பிபிஆர் வீடுகள் அந்நிய நாட்டவர்களுக்கு இல்லாததை உறுதி செய்யும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதலாவதாக இந்நடவடிக்கை அமைச்சின் கீழ் உள்ள வீடுகளில் தொடங்கப்படுவதோடு  இது இதர பிரிவுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

பிபிஆர் வீடுகளில் உள்ளூர் மக்கள் வசிப்பதை உறுதி செய்வதோடு அந்நிய நாட்டவர்களால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை களையவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளது என ஜூராய்டா கூறினார்.

No comments:

Post a Comment