புத்ராஜெயா-
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு தடை ஆணையை (எம்சிஓ) இன்னும் வலுபடுத்தும் ஆலோசனையை தேசிய பாதுகாப்பு மன்றம் முன்மொழிந்துள்ளது.
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல தொழிற்சாலைகள், கடைகள் மூடப்படலாம் அல்லது அதன் நடவடிக்கை நேரத்தை குறைப்பதும் இந்த ஆலோசனையில் அடங்கும்.
கோவிட்- 19 செயல் நடவடிக்கைக் குழுவுடனான கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இம்முடிவு அறிவிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு, பல தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சுடன் விவாதிக்கப்படும்.
உணவுப் பொருள் வேண்டுமென்றால் காய்கறிகள் பயிரிடப்பட வேண்டும், காய்கறிகள் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு உரக்கடைகள், பூச்சிக்கொல்லி மருந்து கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம் தற்போது மூடப்பட்டுள்ளன.
மக்களுக்கு சிரமம் கொடுக்காத வகையில் கட்டுப்பாட்டு ஆணையை வலுவாக்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க கடந்த 18ஆம் தேதி முதல் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு தடை ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
Sunday 29 March 2020
கோவிட்- 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர் தற்கொலை
செர்டாங்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர் செர்டாங் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வைரஸ் தொற்றின் அறிகுறிகளோடு 62 வயது மதிக்கத்தக்க ஆடவர் செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருந்த அவர், கழிவறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததை அடுத்து பரிசோதித்தபோது அவர் தூக்கிலிட்டு தற்கொலைன் செய்து கொண்டது
தெரிய வந்தது. இச்சம்பவம் இரவு 7.00 மணியளவில் நிகழ்ந்தது
சம்பவம் நடந்த இடம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் இந்த மரணம் 'திடீர் மரணம்' என்று வகைபடுத்தப்பட்டுள்ளது.

1 லட்சம் முகக் கவசங்களை ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவனம் இலவசமாக வழங்கியது
அலோர் ஸ்டார்-
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 நோய் தொற்று தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவனத்தார் 1 லட்சம் முகக் கவசங்களை இலவசமாக வழங்கினர்.
நாட்டில் நட்டமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறையினர், காவல்படையினர், நகராண்மைக் கழக பணியாளர்கள், பொதுத் துறை சேவையாளர்கள், ஊடகத்துறையினர் ஆகியோருக்கு இந்த முகக் கவசங்கள் மனிதநேய அடிப்படையில் வழங்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் டத்தோ செல்வகுமர் சண்முகம் தெரிவித்தார்.
அதோடு தமது நிறுவனத்தில் பணியாற்றும் 600 தொழிலாளர்களும் முகக் கவசங்கள் வழங்கியதாக கூறியுள்ள அவர், மேலும் 9 லட்சம் முகக் கவசங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றார்.
உயிர்கொல்லி நோயாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசங்கள் அவசியமானது எனும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையில் ஈடுபட்டுள்ள பொதுச் சேவை ஊழியர்கள், மருத்துவர்கள், காவல் படையினர் உட்பட பலரின் நலனும் காக்கப்படுவது அவசியமாகிறது.
அதன் அடிப்படையிலேயே தமது நிறுவனம் முகக் கவசங்களை வழங்க முன்வந்துள்ளதாக கூறியுள்ள டத்தோ செல்வகுமார், அரசாங்கம் அமல்படுத்தியுள்ள மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Friday 27 March 2020
காற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும் கோவிட்-19
உலகை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கோவிட்- 19 வைரஸ் காற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் உருவான வைரஸ் தொற்று இன்று 199
நாடுகளுக்கு பரவி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதிக்கச் செய்துள்ள கோவிட்- 19 வைரஸ் இன்னும் பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அதன் மூலம் மற்றவருக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூட்டிய கோவிட்- 19 வைரஸ் காற்றில் 8 மணி நேரம் உயிர் வாழும்.
கால சூழ்நிலைக்கு ஏற்பவே இந்த வைரஸ் வாழும் காலம் மாறுபாடு காணும் எனவும் அதனால் மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதோடு வெளியில் செல்லும்போது முகக் கவசங்களை அணிந்து செல்வது அவசியம் எனவும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
Wednesday 25 March 2020
கோவிட்-19: 37 பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று; தெலுக் இந்தான் மருத்துவமனை மூடப்பட்டது
ஈப்போ-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தெலுக் இந்தான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மூடப்பட்டாலும் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு எப்போதும் வழக்கம் போல் செயல்படும்.
இங்கு பணிபுரியும் 37 பணியாளர்களுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Tuesday 24 March 2020
கோவிட்-19: பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது
கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 212ஆக உயர்வு கண்டுள்ளது.
தற்போது வரை இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,518ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 57 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 212 பேரில் 123 பேர் தப்லிக் சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.

Monday 23 March 2020
கோவிட்-19: மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கினார் கணபதிராவ்
ரா.தங்கமணி
ஷா ஆலம்-
கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் வீட்டுக்குள் முடங்கியுள்ள வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ்.
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தினசரி சம்பளத்திற்காகவும் அடிப்படை உதவிகள் தேவைப்படுவோரின் தகவல்களை திரட்டிய பின்னர் அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்கள் தினசரி உணவு தேவைகளுக்கு சிரமப்படக்கூடாது எனும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.

நடிகர் விசு மரணம்
சென்னை-
தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனரும் கதாசிரியருமான விசு இன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்று தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.
இந்திய உள்ளூர் டெலிமூவிக்களை ஒளிபரப்பவுள்ளது ஆஸ்ட்ரோ
இவ்வருட இந்திய புத்தாண்டைச் சிறப்பாக கொண்டாட,
அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் தெலுங்கு, பஞ்சாபி,
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு உள்நாட்டில்
தயாரிக்கப்பட்ட, புத்தம் புதிய டெலிமூவிக்களை ஆஸ்ட்ரோ வானவில்
(அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக கண்டு
மகிழலாம். நான்கு மொழியிலான இந்த டெலிமூவிக்கள் மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 13 முதல் 15 வரை ஒளிபரப்பப்படும்.
ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரத்
துணைத் தலைவர் மார்க் லூர்தஸ் கூறுகையில், “இவ்வருட புத்தாண்டை முன்னிட்டு
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் மற்றும் தமிழில் உள்நாட்டில்
தயாரிக்கப்பட்ட நான்கு டெலிமூவிக்களைப் பிரத்தியேகமாக ஒளிப்பரப்புவதில் நாங்கள்
மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்திற்கான மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியை
உள்ளடக்கிய மலேசிய இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையை ஆதரிப்பதோடு
உள்ளூர் உள்ளடக்கங்கள் மற்றும் திறமைகளை வென்றெடுப்பதிலும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.”
வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ வானவில்லுடன்
கீழ்காணும் தேதிகளில் இணையலாம்:
·
25 மார்ச்: சோமா காந்தன் இயக்கத்தில் பிரகாஷ் ராவ்,
வானிஷ்ரி ராவ்,
ரவீன் ராவ் மற்றும் செனிபையன் பிளேக் யாப்
நடித்த தெலுங்கு டெலிமோவியான ‘ரங்குலு’,
‘உகாதி' (தெலுங்கு புத்தாண்டு) அன்று
திரையிடப்படும்.
·
13 ஏப்ரல்: அர்ஜின் உப்பால் இயக்கிய ‘ரப்பா மேரேயா’,
பஞ்சாபி டெலிமூவியில் அவிந்தர் சிங், ஹேமந்த் ஷெர்கில்,
நவீந்தர் கோர்,
குர்விந்தர் சிங் மற்றும் மல்கித் கோர் நடித்து
சிறப்பிக்க இந்த டெலிமூவி ‘வைசாக்கி’ (பஞ்சாபி புத்தாண்டு) அன்று
ஒளிபரப்பப்படும்.
·
14 ஏப்ரல்: ‘வெண்பா’ புகழ் கவி
நந்தன் கைவண்ணத்தில் மலர்ந்த ‘கன்மணி அன்போடு காதலன்’ டெலிமூவியில் குபேன்
மகாதேவன் மற்றும் பாஷினி சிவகுமார் முதன்மை கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இது டெலிமூவி ‘சித்திரை புத்தாண்டு’ (தமிழ் புத்தாண்டு) அன்று திரையிடப்படும்.
·
15 ஏப்ரல்: ‘புலனாய்வு’ புகழ் ஷாலினி பாலசுந்திரம் கைவண்ணத்தில் மலர்ந்த ‘அச்சம்மக்கு ஒரு விசுகனி’, மலையாள டெலிமூவி ‘விஷு’ (மலையாள புத்தாண்டு)
கொண்டாட்டத்தின் மறுநாள் ஒளிபரப்பப்படும்.
இட்டெலிமூவியில் டத்தீன் ஷைலா நாயர், ஆனந்தா,
மற்றும் கீர்த்திகா நாயர் நடித்து
சிறப்பித்துள்ளனர்.
Sunday 22 March 2020
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை; 10% மக்கள் பின்பற்றுவதில்லை
புத்ராஜெயா-
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையைன 10% மக்கள் பின்பற்றுவதில்லை என்று தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
நாட்டில் பரவியுள்ள கோவிட் 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதனை சில தரப்பினர் மதிப்பதில்லை. வெளியிடங்களில் மக்கள் நடமாட்டம் இன்னமும் உள்ளது. நாட்டில் உள்ள 10 விழுக்காட்டினர் அதாவது 300,000 மக்கள் இந்த கட்டுப்பாட்டு ஆணையை மதித்து நடப்பதில்லை என்று அவர் சொன்னார்.

அனைத்து மலேசியர்களுக்கும் ஆஸ்ட்ரோ கோ; இப்பொழுதே ஸ்ட்ரீம் செய்யுங்கள்
கோலாலம்பூர் –
வீட்டில் இருக்கும்போது மலேசியர்கள் மிக விரைவாக களைப்படைவதை
எங்களால் உணர முடிகின்றது. அதனால்தான் ஆஸ்ட்ரோ
கோ உங்களை களைப்பின்றி உற்சாகத்துடன் வைத்திருப்பதை நாங்கள் விரும்புகிறோம். தற்பொழுது ஒவ்வொரு மலேசியரும் தங்களின் கைப்பேசியை பயன்படுத்தி
மிகவும் எளிமையான முறையில் ஆஸ்ட்ரோ கோவினுல்
நுழைந்து ஆன் டிமாண்ட் தலைப்புகள் உட்பட 31 மார்ச் 2020 வரை இலவசமாக கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட ஆஸ்ட்ரோ
அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதன் வழி தங்களையும் தங்கள்
அன்பானவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்.
Astro Awani மற்றும் Bernama TV-உடன் நாட்டு நடப்புகளையும்
முக்கிய செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். Cartoon Network-இல் குழந்தைகள் தங்களுக்கு
விருப்பமான நிகழ்ச்சிகளைக் கண்டுக் களிக்கும் வேளையில் அல்லது Astro Tutor TV-இல் கல்வி கற்று கொண்டிருக்கும் வேளையில் நீங்கள்
GO SHOP-இன் வழி உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்களாம். விளையாட்டு மற்றும் மின் விளையாட்டு ரசிகர்கள் Arena மற்றும் eGG மூலம் உடனுக்குடனான
விளையாட்டுச் செய்திகளை அறிந்துக் கொள்ளலாம். ஆஸ்ட்ரோ கோ-இல் 22 இலவச அலைவரிசைகளில் Dua Takdir Cinta, Happy
Prince, All is Well, Travel for Love, Allungal Vellungal, Rajiniyudan Naan மற்றும் பல சுவாரஸ்சியமான நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள். 22 இலவச அலைவரிசைகள் பின்வருமாறு:
·
Astro Prima
·
Astro Oasis
·
Go Shop HD
RUUMA
·
Go Shop HD GAAYA
·
Astro Vaanavil
·
Makkal TV
·
Astro AEC
·
GO SHOP Chinese
·
TV Alhijrah
·
Celestial Movies
·
Celestial Classic Movies
·
CCTV4
|
·
Astro Xiao Tai Yang
·
Astro Awani
·
Bernama TV
·
Astro Tutor TV UPSR
·
Astro Tutor TV PT3
·
Astro Tutor TV SPM
·
Astro Arena
·
eGG
·
HELLO
·
Cartoon Network
|
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள்
அல்லாதவர்கள் ஆஸ்ட்ரோ கோ-ஐ அணுக பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
படி 1: App Store அல்லது Google Play-ஐ பயன்படுத்தி ஆஸ்ட்ரோ கோ-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.
படி 2: “ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்
அல்ல” என்பதைக் கிளிக் செய்க
படி 3: ஒரு ID-ஐ அமையுங்கள்
படி 4: உங்கள் மின்னஞ்சலுக்கு
அனுப்பப்பட்ட 6 இலக்கு pin-இன் முலம் உங்கள் ID-ஐ சரிபார்க்கவும்
உங்கள் மடிக்கணினி/கணினி முலமாக ஆஸ்ட்ரோ கோ-ஐ அணுக, astrogo.com.my என தட்டச்சு செய்து, மேலே குறிப்பிட்டுள்ள அதே படிகளைப் பின்பற்றவும்.
*நீங்கள் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களேயானால், “ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்”
என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சந்தா தொகுப்புகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஸ்ட்ரீம் செய்து
மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ
கோ-இல் இந்த இலவச அணுகலை பற்றிய
மேல் விபரங்களுக்கு www.astro.com.my
எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
ஏடிஎம் மையங்கள் 7 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும்
கோலாலம்பூர்-
கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப வங்கி ஏடிஎம் மையங்கள் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே செய்ல்படவுள்ளன.
பேங்க் நெகாரா மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டிலுள்ள
வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஏடிஎம் மையங்கள் அனைத்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட முடியும்.
இது தொடர்பிலான சுற்றறிக்கை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அன்றாட தேவைகளுக்காக பணத் தேவையை எதிர்நோக்கும் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட் 19- உயிர்பலி 8ஆக உயர்ந்தது
பெட்டாலிங் ஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன் அறுவர் மட்டுமே மரணமடைந்திருந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி மேலும் இருவர் உயிரிழந்தனர். அதில் வியட்னாமிற்கு பயணம் மேற்கொண்டிருந்த 57 வயது ஆடவரும் தப்லிக் சமய கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆடவர் ஒருவரும் அடங்குவர் என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
மேலும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் 1,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Saturday 21 March 2020
மக்களுக்கு உதவிட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வெ.30 ஆயிரம் ஒதுக்கீடு
ஷா ஆலம்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு ஆணையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் சிலாகூர் மாநில அரசு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் 30,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இம்மாநிலத்திலுள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் வழங்கப்படும் இந்த நிதியின் மூலம் கட்டுப்பாட்டு ஆணையால் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவிக்கும் குடும்பத்தினருக்கும் உதவி பொருட்கள் வழங்க வழிவகுக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தெரிவித்தார்.

ராணுவ பயன்பாடு- அவசர கால பிரகடனம் அல்ல
புத்ராஜெயா-
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு துணையாக ராணுவம் களமிறக்கப்படுகிறதே தவிர அவசர கால நிலையை அமல்படுத்த அல்ல என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவே நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இன்னமும் வெளியே நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்தவே ராணுவம் பயன்படுத்தப்படவுள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவ பயன்பாடு- தற்காப்பு அமைச்சர்
புத்ராஜெயா-
கோவிட்- 19 வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த போலீசாருக்கு உதவிடும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவம் களமிறக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
தற்போது நாட்டில் மக்கள் நடமாட்ட கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளியில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பணிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அரசாங்கம், போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்படவுள்ளது.
கோவிட்-19 நோய் தொற்றை குறைக்கும் வகையில் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தார்.

Thursday 19 March 2020
வீட்டிலேயே இருங்கள்- பிரதமர் வலியுறுத்து
கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருக்குமாறு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.
வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்து வீட்டிலேயே தங்களது பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட அவர், கொடுக்கப்பட்டுள்ள இரு வார விடுமுறை காலம் காப்பி கடையில் அமர்ந்து அரட்டை அடிப்பதற்கு அல்ல என்று மேலும் சொன்னார்.
வெளியிடங்களில் கூடாமல் வீட்டிலேயே இருப்பதன் மூலம் இந்த வைரஸ் இன்னும் அதிகமானோருக்கு பரவாமல் தடுக்க முடியும்.
இரு வார கால விடுமுறை சொந்த ஊர்களுக்கு செல்லவோ, மால்களில் உலா வரவோ, கடைகளில் அமர்ந்து அரட்டை அடிக்கவோ இல்லை. தங்களது வீட்டில் அமர்ந்து குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்கவே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று ஆர்டிஎம்-இல் நேரலையாக பேசியபோது வலியுறுத்தினார்.

விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் மலேசியர்கள்- மஇகா களம் காணும்
கோலாலம்பூர்-
நாடு திரும்ப முடியாமல் சென்னை, திருச்சி விமான நிலையங்களில் சிக்கி தவிக்கும் மலேசிய இந்தியர்களை நாட்டிறற்கு திரும்ப அழைத்து வர அரசாங்கத்துடன் மஇகாவும் இணைந்து செயலாற்றும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன் விளைவாக தங்கள் நாட்டுக்குள் அந்நியர்கள் நுழைவதற்கு பல நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் விமான போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளன. இத்ல் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையின்படி மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளதால் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
இவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வர அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதோடு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடினிடம் வலியுறுத்தப்பட்டது.
அரசாங்கம் இந்தியாவின் வெளியுறவு அமைச்சுடன் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் சில வர்த்தகர்களின் உதவியோடு மஇகாவின் முயற்சியில் தனி விமானத்தை அனுப்பி அவர்களை வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தனி ஒமானத்தில் அழைத்து வருவதற்கு அனுமதி கொடுத்தால் போதும். அதற்கான செலவீனங்களை மஇகாவேஏற்கும் என்று மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன்குறிப்பிட்டார்.
அதற்கு முன் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் மலேசியர்களுக்கு உணவும் தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Wednesday 18 March 2020
சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள்?
கோலாலம்பூர்-
தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற மலேசியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சென்னை விமான நிலையத்தில் சிக்கி பரிதவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மலேசியாவில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சென்ற மலேசியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
பயண விமானங்கள் ரத்து செய்யப்பட்டதனால் தங்குவதற்கு உரிய வசதிகள் இல்லாமல் விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள மலேசியர்கள் அங்கு பணியாற்றும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
வெளிநாட்டு பயணிகள் மட்டுமே மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த குடிமக்களான எங்களை மலேசியாவுக்கு அழைத்துச் செல்வதில் அலைகழிப்பு செய்வது ஏன்? என்று அவர்கள் தங்களது வேதனையை வெளிபடுத்தியுள்ளனர்.
இந்த காணொளி கண்ட சமூக ஊடக பயனீட்டாளரகள், விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க மலேசிய அரசாங்கம் களமிறங்குமா? என்று பல்வேறான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கோவிட் -19.: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673ஐ எட்டியது
கோலாலம்பூர்-
கோவிட் -19 வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக 120 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 120 பேரில் 95 பேர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய சொற்பொழிவில் பங்கேற்றவர்கள் ஆவர்.
இதில் 12 தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிட்-19 பரிசோதனை: எத்தரப்பையும் அரசு நியமிக்கவில்லை
கோலாலம்பூர்-
கோவிட்-19 நோய் தொற்று தொடர்பில் இல்லங்களில் பரிசோதனை நடத்த எந்தவொரு தரப்பையும் அரசாங்கம் நியமிக்கவில்லை.
கோவிட்-19 நோய் தொற்று நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில பொறுப்பற்ற தரப்பினர் மோசடிநடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
வீடுகளில் பரிசோதனை நடத்த எந்தவொரு தரப்பினரையும் அரசாங்கம் நியமிக்கவில்லை என்று தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆதலால் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டுள்ளது.

''மைசெல்'' முயற்சியில் இரு இந்தியருக்கு ''மைகார்ட்" கிடைத்தது
ரா.தங்கமணி
ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தின் ஆதரவோடு ''மைசெல்'' (MySel) பிரிவின் கீழ் இரு இந்தியர்களுக்கு நீல நிற அடையாள அட்டை ''மைகார்ட் ''பெற்று தரப்பட்டது.
மூதாட்டி திருமதி அழகு சுப்பையா (வயது 75), திருமதி திலகவதி ஆகிய இருவருக்கும் பல நாள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக நீல நிற அடையாள அட்டை கிடைக்கப்பெற்றுள்ளதாக மைசெல் பிரிவின் அதிகாரி திருமதி சாந்தா தெரிவித்தார்.
சிறு வயதிலேயே தனது பிறப்புப் பத்திரத்தை தொலைத்து விட்ட திருமதி அழகு, நீல நிற அடையாள கிடைக்க முடியாமல் தவித்தார். பல தொடர் நடவடிக்கையினால் சிவப்பு நிற அடையாள அட்டை மட்டுமே கொண்டிருந்த அவர், 2011ஆம் ஆண்டு முதல் நீல நிற அட்டை விண்ணப்பிக்க தொடங்கினார்.
அந்த முயற்சிகள் யாவும் பலன் தராத நிலையில் செஜாங்காங், பங்ளிமா காராங் வட்டார இந்திய கிராமத் தலைவர் கமலக்கண்ணன் முயற்சியில் மைசெல் அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் கொண்டுள்ள இச்சமயத்தில் தனக்கு நீல நிற அடையாள அட்டை கிடைக்கப்பெற்றுள்ளது அளவில்லா மகிழ்ச்சி அளிப்பதாக திருமதி அழகு கூறினார்.
அதேபோன்று, இந்தியாவை சொந்த தாய்நாடாகக் கொண்ட திருமதி திலகவதி, மலேசியரை திருமணம் புரிந்து இங்கு குடியேறியுள்ளார்.
அரசாங்கம் விதித்த அனைத்து சட்டவிதிமுறைகளையும் முறைப்படி பின்பற்றி சிவப்பு நிற அடையாள அட்டையை பெற்ற இவர், 2015ஆம் ஆண்டு முதல் நீல நிற அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முயற்சித்துள்ளார்.
பின்னர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வழிகாட்டுதலில் மைசெல் அதிகாரியை சந்தித்து, நீல நிற அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன்.
சில வருட காத்திருப்புக்குப் பின்னர் தற்போது நீல நிற அடையாள கிடைத்துள்ளது.
நீல நிற அடையாள அட்டை கிடைத்துள்ளதால் தற்போது தானும் மலேசிய பிரஜை எனும் அந்தஸ்த்து கிடைப்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திருமதி திலகவதி கூறினார்.
இவ்விருவருக்கும் கிடைக்கப்பெற்ற அடையாள அட்டையை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வழங்கினார். மைசெல் பிரிவு கணபதிராவின் தலைமையின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)