Saturday 2 June 2018

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி கட்டட நிலை குறித்து ஆராயப்படும்- சிவநேசன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பேரா மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மீது தீவிர கவனம் செலுத்தப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

மலேசியாவிலேயே அதிகமான தமிழ்ப்பள்ளிகளை கொண்டிருப்பது பேரா மாநிலம் தான். அவ்வகையில் இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து தீர ஆராயப்படும்.

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்பு தொடர்பில் மத்திய மேம்பாட்டு அலுவலகத்திடம் (ஐசியூ)  விவரம் கோரப்படும் என்ற சிவநேசன், தற்போது வரை இப்பள்ளியின் கட்டுமானத்திற்கான குறைந்த மானியம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என
சொன்னார்.

முந்தைய தேசிய முன்னணி ஆட்சியின்போது இப்பள்ளியின் கட்டுமானப் பணிக்காக  70 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணி தாமதமாகியுள்ளது.

இது குறித்து முழுமையான விவரங்கள் கண்டறியப்படும் சூழலில் இப்பள்ளி கட்டடம் மிக விரைவில் நிர்மாணிக்கப்படுவதற்கு ஆக்ககரமான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அதேபோன்று பிரச்சினைக்குரிய தமிழ்ப்பள்ளிகளின் விவரங்கள் திரட்டப்பட்டு அதற்கேற்ற தீர்வுகள் காணப்படும் எனவும் இன்று குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி கட்டட நிர்மாணிப்புப் பகுதியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment