Sunday 10 June 2018

ஈராண்டுகளில் மட்டுமே பதவியில் நீடிப்பேனா? அது யோசனை மட்டுமே- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடிப்பேன் என முன்பு கூறியது வெறும் யோசனையே ஆகும் என பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியமானது ஆகும்.

'எனது கடமையை சீக்கிரம் முடிக்கலாம் அல்லது நீண்ட காலம் பிடிக்கலாம். நாட்டின் செல்வாக்கை மீட்சி பெற செய்வதும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் அவசியாமனது. முடிந்தால் குறுகிய காலத்திற்குள்ளாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படலாம்.

இலக்கை அடைவதற்கு பணம் மிக முக்கியமானது அல்ல. எனது வேலை முடிவில் என்ன உள்ள விளைவுகளே முக்கியமானது. அதற்காக நான் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

1எம்டிபி ஊழல் மட்டுமல்லாது பொதுச் சேவைகளிலும் மேம்பாட்டை கொண்டு வர வேண்டும் என நாட்டின் 4ஆவது, 7ஆவது பிரதமரான துன் மகாதீர் குறிப்பிட்டார்.

கடந்த தேமு ஆட்சியின்போது பொதுச் சேவை துறைகளில் நிகழ்ந்துள்ள பல பலவீனங்கள் ஏற்பட்டுள்ளதோடு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.

'இது பணம் சார்ந்த விவகாரம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த அரசு கேந்திரத்தையும் சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஆகும். அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் நாட்டுக்கு உழைப்பதை விட தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு உழைத்துள்ளனர். இதனால் தான் சில மதவெறிக்கும் இடமளித்துள்ளனர்.

'அவர்கள் தங்களது போட்டியாளர்களை அழிக்க வேண்டும் என்று வெளியே சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் இப்போது அவர்களது போட்டியாளர்களிடமே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் துன் மகாதீர்.

No comments:

Post a Comment