Wednesday 6 June 2018

டிபிகேஎல்- இல் எம்ஏசிசி சோதனை; ஆவணங்களை அள்ளிச் சென்றது


கோலாலம்பூர்-
கோலாலம்பூர் மாநகர்  மன்றத்தின் (டிபிகேஎல்) தலைமையகத்தில் அதிரடி சோதனை நடத்திய மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையன் (எம்ஏசிசி) 8 தள்ளுவண்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் டிபிகேஎல் தலைமையகத்தில் அதிரடியாக நுழைந்த ஏம்ஏசிசி அதிகாரிகள் பிற்பகல் 4.00 மணியளவில் வெளியேறிய அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை லோரியில் ஏற்றிச் சென்றனர்.

இது குறித்து கருத்துரைக்க மறுத்த அதிகாரிகள், தாங்கள் ஆவணங்களை எடுத்துச் செல்ல வந்ததாக தெரிவித்தனர்.

எம்ஏசிசி-இன் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்க தயாராக இருப்பதாக டத்தோ பண்டார் டான்ஶ்ரீ முகம்மர் அமின் நோர்டின் குறிப்பிட்டார்.

100 கோடி வெள்ளி மதிப்புடைய 10 திட்டங்களை டிபிகேஎல் ரத்து செய்து விட்டதாக டத்தோ பண்டார் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment