Sunday 10 June 2018

தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளின் ஆவணங்களை கேசவனிடம் ஒப்படைத்தார் டாக்டர் ஜெயகுமார்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளின் ஆவணங்களை தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனிடம் ஒப்படைத்தார் டாக்டர் மைக்கல் ஜெயகுமார்.

இவ்வட்டாரத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பலவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் டாக்டர் ஜெயகுமார் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகளுக்கு  அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆயினும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்ததால் சில பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண முடியாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டதாக கூறிய ஜெயகுமார், தற்போது இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேசவன் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட வேண்டும் என கூறினார்.

தற்போது ஆளும் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் கேசவன் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவருடன் ஒத்துழைத்து இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

இது குறித்து பேசிய கேசவன், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண ஆக்ககரமான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதோடு என் மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என கூறினார்.

டாக்டர் ஜெயகுமார் சமர்பித்துள்ள ஆவணங்களை சரிபார்த்து அவற்றுக்கு தீர்வு காண முற்படுவேன் என நேற்று சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கேசவன் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment